என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "strict"
- துர்காதேவியிடம் தான் வெளியில் செல்வதால் மாட்டிற்கு தீனி வைத்து வைக்கோல் போடுமாறு கூறிவிட்டு அவரது தாயார் ராணி சென்றார்.
- கன்று இறந்து போனதால், துர்காதேவியின் தாயார் ராணி துர்காதேவியை கண்டித்துள்ளார்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு அடுத்த பரதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகள் துர்காதேவி (வயது 30). இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே துர்காதேவி தனது கணவருடன், பரந்தூர் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டிலேயே வசித்து வந்தார். இவர்களுக்கு 3 வயது குழந்தை உள்ளது.ர் வீட்டிலேயே வசித்து வந்தார். இவர்களுக்கு 3 வயது குழந்தை உள்ளது. துர்காதேவியின் தாயார் வீட்டில் கன்றுடன் கூடிய மாடு வளர்த்து வந்தார். தான் வெளியில் செல்வதால் மாட்டிற்கு தீனி வைத்து வைக்கோல் போடுமாறு துர்காதேவியுடன் கூறிவிட்டு அவரது தாயார் ராணி சென்றார். துர்காதேவி மாட்டிற்கு சரிவர தீனி போடவில்லை என்பதால், கன்றுடன் இருந்த மாடு அறுத்துக் கொண்டு வெளியில் சென்றது. இதில் கன்று இறந்து போனது. இதனை அறிந்த துர்காதேவியின் தாயார் ராணி, துர்காதேவியை கண்டித்துள்ளார்.இறந்து போன கன்றினை புதைக்க ரவியும், ராணியும் வெளியில் சென்றனர். அப்போது வீட்டிற்குள் சென்ற துர்காதேவி, தாய் தீட்டியதால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், ஒரத்தூர் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.வருகின்றனர்.
- இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது .சம்பவத்தன்று சிவன் சக்தி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. .
- மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சிவன் சக்தி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.
கடலூர்:
கடலூர் பழைய வண்டிப்பாளையம் சேர்ந்தவர் சிவன் சக்தி (வயது 45). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது .சம்பவத்தன்று சிவன் சக்தி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சிவன் சக்தி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் சிவன் சக்தியை பரிசோதனை செய்த டாக்டர்அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்கத்து வீட்டிற்கு சென்று மருதாணி பறித்துவிட்டு காலதாமதமாக வீட்டிற்கு சென்றதால் மகளை தாய் கண்டித்தார்.
- பூச்சிக்கொல்லி மருந்து குடித்த மாணவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மணியங்குடி கிராமத்தை சேர்ந்த, சுதாகர் என்ப வரின் 15 வயது மகள், நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்றுபக்க த்து வீட்டிற்கு சென்று, மருதாணி பறித்துவிட்டு, கால தாமதமாக வீட்டிற்கு சென்றதால்,மகளை சுதாக ரின் மனைவி கண்டித்த தாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி பூச்சிக்கொ ல்லி மருந்தை குடித்து ள்ளார்உடன் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகு றித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூரில் சமத்துவ மக்கள் கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பி.என். ரோட்டில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் பாண்டியன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
திருப்பூரை பொறுத்தவரை சாயக்கழிவு நீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றினாலும், பல சிறிய அளவிலான நிறுவனங்கள் தொடர்ந்து சுத்திகரிக்காமல் சாயக்கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. இதனால் சிறிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி கொள்கையால் பல சிறு, குறு, நடுத்தர பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம்-சென்னை 8 வழிசாலைக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சேலம்-சென்னை நெடுஞ்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு பலருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதற்கு பதிலாக தற்போது உபயோகப்படுத்தப்படும் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கலாம். பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தருவதாக முதல்-அமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. மக்கள் போராட்டத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.
தூத்துக்குடியிலும் இதே போன்று சாதாரணமாக தொடங்கிய போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததாலேயே இவ்வளவு பெரிய கலவரமும், உயிரிழப்பும் ஏற்பட காரணம் ஆனது.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பது கடினம். தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே அமைச்சர்கள் உள்ளனர் என்றார்.
திருப்பூர் வந்த சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு மாநில இளைஞர் அணி துணைசெயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் செல்வம், பேரவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கலைவாளன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். #ernavoornarayanan #chennaisalem8wayroad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்