என் மலர்
நீங்கள் தேடியது "stroke"
- ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது, குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிக்காமல் இருப்பது, தேவை இல்லாத விஷயங்களுக்கு கோபப்படுவது, மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வது, மன அழுத்தம், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் கோபமாக பேசுவது போன்றவற்றை குறைத்துக்கொள்ளும் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது யோகா செய்வதன் மூலமாகவும், உடல் எடையை குறைப்பதன் மூலமாகவும், உணவுப்பழக்க வழக்கம் மூலமாகவும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

எல்லோருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. எனவே ரத்த அழுத்தத்தை கவனிக்க ஒவ்வொருத்தரும் வீடுகளில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் கருவையை வைத்திருப்பது அவசியம். இப்பொழுதெல்லாம் ரத்த அழுத்தத்தை சோதிக்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும். காலையில் செய்யப்படும் பரிசோதனை தான் சரியான ரத்த அழுத்த பரிசோதனையாக இருக்கும்.
மேலும், நாம் வருடா வருடம் பிறந்தாள் கொண்டாடுவது போன்று 30 வயதை கடந்தவுடன் ஒவ்வொரு வருடமும் உடல் முழுவதையும் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- அன்றாடப் பயிற்சித் திட்டத்தைக் கடைப்பிடித்தால் பாதிக்கப்பட்டுள்ள கை, கால்களைக் குணப்படுத்துவதைத் துரிதப்படுத்தலாம்.
- அவருக்குத் துணையாகப் பராமரிப்பாளர் ஒருவர் இருப்பது முக்கியம்.
பக்கவாதம் ஒருவரை முடக்கி வைக்கும் கொடிய நோய். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர சில பயிற்சிகள் கைகொடுக்கின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தசைகளை அசைப்பதில் சிரமம் ஏற்படலாம். பக்கவாதத்திலிருந்து மீண்டு வர நீண்டகாலம் எடுக்கலாம். அன்றாடப் பயிற்சித் திட்டத்தைக் கடைப்பிடித்தால் பாதிக்கப்பட்டுள்ள கை, கால்களைக் குணப்படுத்துவதைத் துரிதப்படுத்தலாம்.
"கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் உடற்பயிற்சிகளைத் தினமும் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதுமட்டுமல்லாது வலி, வீக்கம் ஆகியவற்றை அது குறைக்க உதவும். மேலும் தசைகளுக்கு வலுவூட்டும். ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டவுடன் அதிலிருந்து மீண்டுவர உடனடியாகப் பயிற்சிகளைச் செய்வது முக்கியம். அவ்வாறு செய்தால் குணமடைவது மட்டுமல்லாது இரண்டாவது முறையாகப் பக்கவாதம் ஏற்படும் சாத்தியத்தைத் தவிர்க்கலாம்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீளும் நோக்கத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது அவருக்குத் துணையாகப் பராமரிப்பாளர் ஒருவர் இருப்பது முக்கியம்.
அப்போது தான் உடற்பயிற்சி செய்யும்போது அவர் கீழே விழாமல் பார்த்துக்கொள்ளலாம்.
- ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
- ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இது எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படும். ஆனால் தற்போது 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று-மூளைக்கு (இஸ்கிமிக்) ரத்தத்தை வழங்கும் பாத்திரங்களில் ரத்தக் கட்டிகளால் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் பொதுவானது.
சுமார் 85 சதவீத மக்கள் இந்த வகையைக் கொண்டுள்ளனர். 2-மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சிதைவு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், மெல்லுதல் ஜர்தா, குட்கா, கைனி, அதிகப்படியான மது அருந்துதல், குடும்பத்தில் பக்கவாதத்தின் முந்தைய வரலாறு ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சில இதயப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.

அத்தகையவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவை மூளையின் ரத்த நாளங்களை அடைந்து செயலிழப்பை ஏற்படுத்தும். மறுபுறம் மரபணு இயல்பும் இந்தியர்களை அச்சுறுத்துகிறது.
மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் பக்கவாதம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தாக்குகிறது.
தற்போது பெரியவர், சிறியவர் என்ற பாகு பாடின்றி பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
30 மற்றும் 40 வயதுக்குள் முடங்கிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எனவே எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.
பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இவற்றை அடையாளம் கண்டுகொ ள்வது மிகவும் அவசியம்.
சிறுமூளையில் பக்கவாதம் ஏற்படும் போது, உடல் கட்டுப்பாட்டை இழந்து தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழலாம். உங்களுக்கு தூக்கம் வரலாம்.
வாய் முகத்தில் பக்கவாட்டில் திரும்பும். ஒரு கையின் பலவீனம்.
பேச்சில் வேறுபாடு, தடுமாற்றம், தடுமாற்றம். இந்த அறிகுறிகள் எதுவும் புறக்கணிக்கப்படக்கூடாது. பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
சுமார் 30 சதவீத மக்கள் பக்கவாதத்திற்குப் பிறகு முழுமையாக குணமடைகிறார்கள். மற்றவர்களுக்கு ஊனம் ஏற்படுகிறது. சரியாக நடக்க முடியாமல், பேச முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்கள். மறுவாழ்வு சிகிச்சையானது விரைவான மீட்புக்கு வழிவகுக்கும். இதில் பிசியோதெரபி முக்கியமானது.
பக்கவாதம் ஏற்படும் போது உடல் வலிமை மட்டுமின்றி தன்னம்பி க்கையும் குறைகிறது. முதலில் கை கால்களை பிடித்து அவர்களை நம்ப வைக்கிறார்கள்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவில் உப்பைக் குறைக்கவும். நீரிழிவு நோயாளிகள் குளுக்கோஸ் அளவை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் குறைக்கப்பட வேண்டும். மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
கொலஸ்ட்ராலையும் குறைக்க வேண்டும். உடற்பயிற்சியும் முக்கியமானது. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.
எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானத்தில் ஈடுபட வேண்டாம். பழக்கம் இருந்தால் வரம்பைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தனது உடலின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரத்தொடங்கிய ராஜ்குமார் பேசுவதற்கும் சிரமப்பட்டுள்ளார்.
- மூளைக்கு ரத்தம் அனுப்பும் கரோடிட் ஆர்டரி [carotid artery] சேதமானதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பார்பர் ஷாப்பில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட 30 வயது இளைஞர் பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்லாரியை சேர்ந்த ராஜ்குமார் என்ற 30 வயது நபர் கடந்த 2 மாதங்கள் முன்பு வழக்கமாக முடிவெட்டிக்கொள்ளும் சலூனில் இலவசமாக ஹெட் மசாஜ் செய்துகொள்ள முற்பட்டுள்ளார். அந்த பார்பர், ராஜ்குமாரின் தலையை ஹெட் மசாஜ் என்ற பெயரில் கடுமையாக மீண்டும் மீண்டும் திரும்பியுள்ளார்.
இதனால் அசவுகர்யமாக உணர்ந்த ராஜ்குமார் அதன்பின் வலியை கண்டுகொள்ளாமல் வீடு திரும்பி சாதாரணமாக வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சில மணி நேரங்களிலேயே தனது உடலின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரத்தொடங்கிய ராஜ்குமார் பேசுவதற்கும் சிரமப்பட்டுள்ளார். தனது உடலில் எதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்து உடனே மருத்துவமனைக்குச் சென்றார்.
ராஜ்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். ஹெட் மசாஜ் விவரத்தை அறிந்த மருத்துவர்கள் ராஜ்குமாரின் கழுத்து கடுமையாக திருப்பப்பட்டத்தில் மூளைக்கு ரத்தம் அனுப்பும் கரோடிட் ஆர்டரி [carotid artery] சேதமானதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து ரத்தம் உறைதலை சரி செய்ய கடந்த 2 மாத காலமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் வல்லுநர்கள் அல்லாமல் ஹெட் மசாஜ் செய்து கொள்வதில் உள்ள ஆபத்தைக் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
- ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் அரசு விடுதியில் தங்கி படித்து வரும் 10 வகுப்பு மாணவி தொடர்ந்து 15 முறை ஏற்பட்ட எலிக் கடி காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்மம், தானவாய்குடத்தில் பி.சி. நல விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவியை, இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து எலி கடித்ததால் லட்சுமிக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டுக்கு பின்னர், மாணவி தற்போது மம்தா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடைந்து வரும் நிலையில், நரம்பியல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விடுதிகளில் நிலை குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பிஆர்எஸ் கட்சி விமர்சித்துள்ளது.
- இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார்.
- நகைச்சுவை மிக்க திரைக்கதைக்கு ஷஃபி பெயர்போனவர்.
பிரபல மலையாள இயக்குநர் ஷஃபி இன்று [ஜனவரி 26] தனது 56 ஆவது வயதில் காலமானார்.
கடந்த ஜனவரி 16 அன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஷஃபி, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான 'ஒன் மேன் ஷோ' திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷஃபி. நகைச்சுவை மிக்க திரைக்கதைக்கு ஷஃபி பெயர்போனவர். இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார்.

தமிழில் விக்ரம், பசுபதி, மணிவண்ணன் நடிப்பில் வெளியான மஜா படத்தை இயக்கியவரும் இவரே. மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் 'தொம்மானும் மக்களும்' என்ற தலைப்பில் இவர் எடுத்த படம் ஹிட்டானதை அடுத்து அதை தமிழில் மஜா என்ற பெயரில் இயக்கியிருந்தார்.
கடைசியாக 2022 இல் ஆனந்தம் பரமானந்தம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இந்நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் ரத்தத்தில் அடைப்பு ஏற்படுவதாகும். இதனால் ஆக்சிஸன் கிடைக்காது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதனால் கை, கால் அசைவின்மை, பேச முடியாமை போன்ற பல தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இவற்றினைத் தவிர்க்க
* உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் எப்பொழுதும் இதனை மருத்துவ அறிவுரைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
* கொலஸ்டிரால் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
* இருதய நோய் பாதிப்பு உடையவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
* மது பழக்கத்தினையும், புகை பிடித்தலையும் அடியோடு நிறுத்தி விடுவது நல்லது.
* அதிக எடை இல்லாமல் சரியான எடையில் உடல் இருக்க வேண்டும்.
* அதிக மன உளைச்சல் இல்லாது இருப்பது மிக அவசியமாகும்.
முதுமை பக்கவாதத்திற்கு கூடுதல் காரணம் ஆகின்றது. என்றாலும், ஆரம்ப காலத்தில் இருந்தே நம்மை முறையாக பாதுகாத்துக் கொண்டால் பக்கவாத தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
இரவில் தூக்கம் வரலையா? இந்த காரணங்களும் இருக்கக்கூடும்.
* மிகவும் மன உளைச்சல், கவலை. இவை வாட்டி வதைக்கின்றதா? தூக்கம் அடியோடு கெட்டு விடும்.
* தூங்கும் நேரத்திற்கு முன்பு அதிக வேலை செய்தால் தூக்கத்திற்கு உடல் தயாராகும் நேரம் கெட்டுவிடும். தூங்கப் போவதற்கு முன்பு இனிய இசை கேளுங்கள். நல்ல புத்தகம் படியுங்கள்.
* மாதவிடாய், மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஹார்மோன் மாறு பாட்டினால் தூக்கம் மாறுபடலாம்.
* புகை பிடிப்பவர்களுக்கு கண்டிப்பாய் தூக்கம் கெடும்.
* பகலில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு இரவில் தூக்கம் வராது.
* அதிக காபி, சதா கம்ப்யூட்டர், செல்போன் இவை தூக்கத்தினைக் கெடுக்கும்.
வலிப்பு
பக்கவாதம் தாக்கியபின் நோயாளிகளுக்கு வலிப்பு வரக்கூடும். சிலருக்கு 24 மணிநேரத்திற்குள்ளாகவே வரலாம். அடிக்கடி வரும் வாய்ப்பும், அதிகம் வலிப்பு வரும் வாய்ப்பு, நோயாளிகளுக்கு உண்டு என்பதை குடும்பத்தினர் புரிந்து செயல்பட வேண்டும்.
நோய்த்தொற்று
பக்கவாதம் ஏற்பட்ட 48 மணிநேரத்தில் ஏற்படும் இறப் புக்கு முக்கிய காரணம் தொற்றினால் ஏற்படும் நிமோனியா தான். அதனால் நோய்தொற்று ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம்.
தசை, எலும்பு பிரச்சினைகள்
டாக்டரின் தலைமையில் விவாதித்து, நோயாளியை எவ்வாறு கையாள்வது என்று அறிய வேண்டும். நோயின் தீவிரத்தை பொறுத்து நோயாளியை எங்கு பிடித்து தூக்குவது, எந்த நிலையில் உட்கார வைப்பது போன்றவையும் தீர்மானிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை கவனமாக கையாள வேண்டும். படுக்கையில் நோயாளியை திருப்பி விடும்போதும், இன்னொரு இருக்கைக்கு மாற்றும் போதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தோல் கிழிதல்
உணர்ச்சியின்மை காரணமாகவும், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாலும் தோல் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிக நேரம் படுக்கையில் ஒரே நிலையில் இருப்பதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக புண்கள் உண்டாகும் இதை சமாளிக்க உடலில் அழுத்த ஏற்படும் குறிப்பிட்ட இடங்களை அவ்வப்போது நீவி விட வேண்டும். சருமத்தை சுத்தமாகவும், ஈரம் இல்லாமலும் பார்த்து கொள்வது முக்கியம்.
தோலை பாதிக்காத வகையில் உடலுக்கு இதமான படுக்கைகள் இப்போது கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும். படுத்த நிலையில் திருப்பி விடும்போது கவனமாக, அதிக உராய்வு, அதிக அழுத்தம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
விழுந்து காயம் படுதல்
ஓரளவு நகரும் நிலை வந்தபின், பிறரை தொந்தரவு செய்ய விரும்பாமல், நோயாளியே, தன்னிச்சையாக நகர முற்படலாம். அப்போது தடுமாறி கீழே விழுந்து அடிபட வாய்ப்பு அதிகம். அவ்வாறு விழுந்து அடிபட்டு, காயமடைந்த போதிலும், உறுப்புகளின் உணர்ச்சியின்மை காரணமாக அதை உடனடியாக உணரமாட்டார்கள். பேச்சு ஒழுங்கற்று இருப்பதும், தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படுத்த வழிவகுக்கும். ஆகவே தீவிர கண்காணிப்பு தேவை.
பதற்றம்
ஏற்கனவே மனச்சோர்வுக்கு ஆளானவர்கள், மொழி பிரச்சினை உள்ளவர்கள், உடல் இயக்க பிரச்சினை அதிகம் உள்ளவர்கள், சமூகத்தில் இருந்து விலகி இருப்பவர்களுக்கு பதட்டம் கீழ் மனநிலை பெறும் வாய்ப்பு அதிகம்.
மாய உருவத்தோற்றம்
பக்கவாதம் வந்தவர்களில் சிலர் தாங்களாகவே தன்னை போலவே ஓர் உருவத்தை கற்பனை செய்து கொண்டு, அவ்வப்போது அதனுடன் பேசுவது, சிரிப்பது என கற்பனை செய்து கொண்டு யாரோ வந்து போனதாக குடும்பத்தினரிடம் சொல்லி குழப்புவார்கள். இந்த மாய உருவத்தோற்றம் பார்க்கின்ஸன்ஸ் நோய் உள்ளிட்ட வேறுசில நோய்களிலும் ஏற்படும்.
ரோட்டில் நடந்து போகும்போது, அடுத்து எங்கு திரும்ப வேண்டும் என்று மறந்துபோகும். சேர வேண்டிய இடம், திசை மறந்து போகும். இது அலசீமர் நோயின் அறிகுறி ஆகும். பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அழுவார்கள், சம்பந்தமில்லாமல் சிரிப்பார்கள். சில சமயம் அதை உணர்ந்து செய்வார்கள். சில சமயம் உணர மாட்டார்கள். குடும்பத்தார் இதை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்வது நல்லது. திடீர் விபத்து மற்றும் இழப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்பு.
மன அழுத்தம்
படுக்கையில் அதிக நேரம் இருப்பது, பிறரை சார்ந்திருப்பது, சமூகத்தில் பழக முடியாதது, வலி, பொருளாதார பிரச்சினை, பிறரின் ஏளனத்துக்கு ஆளாதல் என பல காரணங்களால் ஏற்படும் வருத்தம், சோர்வு எல்லாம் மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இதற்கு நல்ல உளவியல் நிபுணரின் ஆலோசனை அவசியம். பார்க்கின்ஸன்ஸ், அல்சீமர் நோயாளிகளிடமும் மன அழுத்தம் இருக்கும்.
பேரார்வம், வெறி
ஏதாவது பொருட்களை தொடர்ந்து சேகரிப்பது, சில குறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பது, ஒரே விஷயத்தை அடிக்கடி பேசுவது, பார்ப்பது என பல நிலைகள் காணப்படும். இது அல்சீமர் நோயாளிகளிடமும் இருக்கும். மேற்கண்ட அத்தனை உணர்வுகளும், இனிவரும் பல்வேறு நோய் நிலைபாடுகளிலும் தோன்றி, அவர்தான் இவரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். அவை
ரத்தத்தில் சர்க்கரை குறைவது
சர்க்கரை அளவு குறையும்போது, மூளைக்கு தேவையான க்ளுகோஸ் அளவு குறைகிறது. இதனால் உடலுறுப்புகளை இயக்க முடியாத நிலை ஏற்படலாம். மயக்கம், நடுக்கம், தலை சுற்றல், வாந்தி, மயக்கம், கை, கால் இயக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும். பக்கவாத நோய் போல அதே அறிகுறிகள் தோன்றும்.
வலிப்பு வந்து நின்ற பின் முதல் அரை மணி நேரத்தில் மயக்கம், தலைவலி, வயிறு பிரட்டல், குழப்பம், ஞாபகமின்மை ஆகியவை இருக்கும் பெரும்பாலான அறிகுறிகள் பக்கவாதத்தின் அறிகுறிகளை ஒத்திருக்கும். சிலவகை மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது பக்க விளைவாக மேற்கூறிய அறிகுறிகள் தோன்றலாம். அவை, பக்கவாதம் வந்து விட்டதோ என்ற பயத்தை தோற்றுவிக்கலாம்.
தலைக்காயம்
விபத்தில், கபாலத்தில் காயம் ஏற்படாவிட்டாலும், மூளை கலக்கத்துக்கு உள்ளாகலாம். இதனாலும் மயக்கம், முகத்தசை இழுப்பு, குழப்பம், பேச்சு குழறுதல், நினைவிழப்பு ஆகியன தோன்றி பக்கவாதமோ என்று அஞ்சத்தோன்றும்.
மூளை வீக்கம்
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் மூளை பாதிக்கப்பட்டு வீக்கம் அடைதல் காரணமாக உடல் இயக்கம் மற்றும் நினைவாற்றலில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஊட்டசத்தின்மை, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைதல், வளர்சிதை மாற்ற குறைபாடு ஆகியவற்றாலும் இப்பிரச்சினை வரலாம்.
ரத்தத்தில் உப்பு குறைதல்
இதன் காரணமாக மூளையில் வீக்கம் ஏற்பட்டு உடல் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும். தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி, வயிறு பிரட்டல் ஆகியன ஏற்பட்டு பாதிப்பு அதிகமானால் கோமா கூட நேரும்.
மூளையை சுற்றி உள்ள மூன்றடுக்கு உறையில் சீழ்த்தேக்கம் ஏற்படலாம். ரத்தம் சீராக இல்லாமல் சிறு கட்டிகளாக தேங்கி அடைப்பை ஏற்படுத்தலாம். அப்போது பக்கவாதத்துக்கு ஏற்படும் அறிகுறிகள் தோன்றலாம். ஹெர்பீஸ் என்ற வைரஸ், மூளையை தாக்கும்போதும் நினைவிழப்பு, உடல் மற்றும் மூளை இயக்கத்திறன் இயக்கங்களில் மாறுதல் ஏற்படும்.
ஒற்றைத்தலைவலி
மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி பெண்களை தாக்கும். சிலருக்கு அத்துடன் வயிற்று பிரட்டல், வாந்தி, பார்வை கோளாறு, பேச்சு குழறல் ஆகியன ஏற்பட்டு பக்கவாத அறிகுறிகளோ என்று தோறும்.ஆகவே வந்திருக்கும் நோய் பக்கவாதம் தானா என்று உறுதி செய்வது முதலில் மிகவும் அவசியம்.
-டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422-2367200, 2313188, 2313194)
அத்துடன் மனநிலை, விபத்து ஆகியனவும் காரணமாகலாம். இவை தவிர சில, பல சூழ்நிலைகளாலும் பக்கவாதம் வரலாம். வாதம் நிலை மாறுவது இரண்டு காரணங்களால் வரலாம்.
1.அதன் பாதை தடைபடுவது. 2, எலும்பு, தசை, ரத்தம் போன்ற எல்லா திசுக்களும் நலிந்து போவது ஆகியன அவை.
பாதை தடைபடுவது:
உணவு உண்ணாமை, இலகுவான, வறட்சியான உணவுகள் ஆகியன ரத்த திசுக்களிலுள்ள ப்ளாஸ்மாவை குறைத்து விடும். இதனால் திசுக்களின் மாற்றம் நிகழ்ந்து, பாதைகள் அடைபட்டு, வாதத்தின் இயல்புநிலை பாதிக்கப்படுகிறது.
திசுக்கள் நலிந்து போவது:
இச்சைகளை அடக்குவது, இருமல் தும்மல், ஏப்பம், ஆகியனவற்றில் தொடங்கி எல்லாவிதமான இச்சைகளை அடக்குவதாலும், செரிக்காத கழிவுகள் வெளியேறாத நிலை (ஆமம்) ஆகியன காரணமாக தடை ஏற்படலாம்.
பக்கவாதத்தில் பித்தம், கபம், தோஷத்துடன் சேர்ந்திருந்தாலும் பாத தோஷமே முக்கிய பங்கு வகிக்கிறது. பக்கவாதம் வரும் போது, வாதத்தின் உலர்ந்த, குளிர்ந்த, இலகுவான, சூட்சமமான குணங்கள் அதிகமாகி, தசைகள் சுருங்குதல், பாதிக்கப்பட்ட இடத்தில் உடல் வெப்பம் குறைதல் ஆகியன நேரிடும்.
* உணவில் உளுந்து, கொள்ளு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி, பூசணி, பச்சைப்பயறு ஆகியவற்றை தவறாமல் உண்பது.
* மாம்பழம், திராட்சை, மாதுளை ஆகிய பழங்களை அடிக்கடி எடுப்பது.
* அதிக நார்ச்சத்துள்ள, குறைவான கொழுப்பு சத்துடைய உணவுகளை உண்ணல்
* ரசாயனம் எனப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளல் * உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல்
* உடல் எடை, கொழுப்பின் அளவு ஆகியவற்றை குறைத்தல் * தகுந்த உடற்பயிற்சி * அதிக எண்ணெய், அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை தவிர்ப்பது, அதிக காரம், அதிகத்துவர்ப்பு உணவுகளை தவிர்ப்பது. * பார்லி, பட்டாணி, கடலை பருப்பு ஆகியவற்றை தவிர்ப்பது. * அதிக உடற்பயிற்சி, அடிக்கடி உண்ணாநோன்பு ஆகியவற்றை தவிர்த்தல் * இரவில் தூக்கம் கெடாமல் இருப்பது * இயற்கையாக வரும் இச்சைகளை அடக்குவது. * புகை, மது ஆகியவற்றை தவிர்ப்பது * மருத்துவ ஆலோசனை பெறாமலேயே, ஏற்கனவே எடுத்து கொண்டிருக்கும் மருந்துகளை நிறுத்துவது என்பன நோய் வருவதை தடுப்பன.
சிகிச்சை முறைகள்
1. எண்ணெய் தேய்ப்பது (மகாநாராயண தைலம், சஹஸ்ராதி தைலம், தன்வந்த்ரம் தைலம், கார்ப்பாச அஸ்தி யாதி தைலம், ஷீரபலா தைலம், பலா தைலம் மஹாம்ஈஷ தைலம், பிரபஞ்சன தைலம்.
2. ஸ்வேதனம் (வியர்வை உண்டாக்கல்)
நவரா அரிசி, பலா மூலம், அஸ்வகந்த மூலம், பால் ஆகியன பயன்படுத்தப்படும்.
3. வயிறு சுத்தப்படுத்துதல் (விரையேச்சனம்)
வாய் வழியாக மருந்து தருதல்
மருந்தூட்டப்பட்ட விளக்கு எண்ணை அல்லது அவிபத்திகார சூரணம் அல்லது திரிவ்ரத லேகியம் ஆகியவற்றை உபயோகித்தல்.
4. ஆசன வழியே எனிமா கொடுத்தல் (வஸ்தி)
மாத்திரை வஸ்தி (நாராயண தைலம் பயன்படுத்தி 7-14 நாட்கள் கஷாய வஸ்தி 15 நாட்கள்.
ஓரண்ட மூலவதம் - 480 மி, தைலா - 240 மி, தேன் - 240 மி, கல்கா - 30 கிராம், உப்பு - 15 கிராம்.
ஷீரவஸ்தி 350 - 500மி, 7-14 நாட்கள்.
5. மூக்கின் வழி நஸ்யம்
பழைய நெய், நாராயண தைலம், ஹீரபலா தைலம் 6-8 சொட்டுகள் இரு மூக்கிலும்
ஸ்ரோவஸ்தி
தலை மீது தொப்பி போன்று அமைத்து அதில் இருந்து மருந்தூட்டப்பட்ட எண்ணை சீராக ஒழுகும் சிகிச்சை (7 நாட்கள் தினமும் 45 நிமிடம்)
நாராயண தைலம், ஹீரபலா தைலம், சந்தனபலா லாஷிரி தைலம்.
ஷிரோதாரா
தலை மீது மருந்தூட்டப்பட்ட தைலம் ஒழுகு வைத்தல் (21 நாட்கள் - தினமும் 45 நிமிடம்)
நாராயண தைலம், சந்தன பலா, ஷீதாதி, தைலம், ஷீபலா தைலம்
மருந்துகள் (மருத்துவரின் ஆலோசனைப்படி)
மஹாராசனாதி கஷாயம், காந்தர்வ ஹஸ்நாதி கஷாயம், மானஸ மித்ர வடகம், அஸ்வ கந்தாரிஷ்டம், ஷீரபலா தைலம்.
இதய நோய்தான் உலக அளவில் அதிக உயிர்பலி வாங்கும் மூன்றாவது நோயாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதய நோய் பாதிப்புக்குள்ளாகிறவர்களில் 18 சதவீதம் பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் மரணமடைகிறார்கள். முட்டையில் அதிக அளவு கொழுப்பு நிறைந்திருக்கிறது. அவற்றை அதிக அளவு உட்கொள்வது உடல் நலனுக்கு கேடானது. அதேவேளையில் வைட்டமின்களும், புரதங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.
சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்டவற்றுள் பெரும்பாலான ஆய்வு முடிவுகள் முட்டையை அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்பதையே தெளிவுபடுத்தியுள்ளன.