search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Structure"

    • மன்னை ரெயில் நிலைய சாலையை திருவாரூர் செல்லும் சாலையுடன் இணைக்க வேண்டும்.
    • மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.

    நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேதுராமன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இதில் மன்னார்குடி ரெயில்வே நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்வது, மேலும் அங்குள்ள பொது கழிப்பிடத்தை சுத்தமாக பயன்படுத்துவது, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

    மன்னார்குடியில் இருந்து டெல்லிக்கு வாரந்தோறும் சிறப்பு ரயிலும், மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை செல்லும் டெமு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பது, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் அதன் உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மன்னார்குடியில் இருந்து காலையில் மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

    மன்னை ரெயில் நிலைய சாலையை திருவாரூர் செல்லும் சாலையுடன் இணைக்க வேண்டும். மன்னை- பட்டுக்கோட்டை ரெயில் வழித்தட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதையடுத்து மன்னார்குடி ரயில்வே நிலையத்துக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து சேவை சங்க பிரதிநிதிகளுடன் சென்று ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலுவை சந்தித்து மனு அளிப்பது, திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.

    ஆலோசனைக் கூட்டத்தில் மன்னார்குடி சேவை சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பின் தலைவர் பத்மநாபன், எஸ்.பி.ஏ.மெட்ரிக் பள்ளி தாளாளர் ரமேஷ், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன், நேசசக்கரம் அமைப்பின் நிர்வாகி சேதுராமன்ஆகியோர் பங்கேற்றனர்.

    ஒருங்கிணைப்பாளர் பாரதி நன்றி கூறினார்.

    • வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது.
    • அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மூலம் செயல்படும் ஹெல்த் அசெம்ப்ளி திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர், பாரத மாதா நிறுவனர் மணிமாறன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    ×