என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Students win"
- பரமக்குடி அப்துல் கலாம் பள்ளி மாணவர்கள் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றனர்.
- சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.
பரமக்குடி
பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்னவ்(கடல்) யோகா மையம் மூலம் நடத்தப்பட்ட மண்டல அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் அனைத்து மாணவர்களும் திறமையை வெளிப்படுத்தி 9 பேர் முதல் பரிசும், 30-க்கும் மேற்பட்டோர் 2-ம் பரிசும், 10-க்கும் மேற்பட்டோர் 3-வது பரிசும் பெற்றனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கமலக்கண்ணன், மணிகண்டன் ஆகியோரையும், பரிசு பெற்ற மாணவர்களையும் பள்ளி சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.
- அஞ்சலகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற அசாதிகா அம்ரித் மஹாஉத்சவ் போட்டிகளில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- முத்திரை வடிவமைப்பு போட்டி நடந்தது.
புதுச்சேரி:
அஞ்சலகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற அசாதிகா அம்ரித் மஹாஉத்சவ் போட்டிகளில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையேயான முத்திரை வடிவமைப்பு போட்டி நடந்தது. சென்னையில் நடந்த இந்த போட்டியில் புதுவை அய்யங்குட்டிப்பாளையம் விவேகானந்தா பள்ளி சி.பி.எஸ்.இ. யில் 11-ம் வகுப்பு படித்து வரும் அமிர்தா முதலிடத்தையும், பரத் ஜெயின் 2-ம் இடத்தையும், 9-ம் வகுப்பு படித்து வரும் யுவான் செலீன் ஷாரன் வில்சன் 3-ம் இடத்தையும் வென்றனர்.
முதல் 3 இடங்களையும் பிடித்த மாணவர்களுக்கு இந்திய அஞ்சலக த்துறை சார்பாக அஞ்சலக முதன்மைத் தலைவர் காசோலை வழங்கி மாணவர்களை கவுரவப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் செல்வகணபதி எம்.பி பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் சரண்யா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
- புதுவை மதகடிப்பட்டு, மணக்குளவிநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் யூத்டாக் 2022 அரையிறுதி சுற்றுக்கான போட்டி நடந்தது.
- இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு, மணக்குளவிநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் யூத்டாக் 2022 அரையிறுதி சுற்றுக்கான போட்டி நடந்தது.
இதில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி முதலாமாண்டு மாணவி ஆஷிகா முதல் பரிசினை பெற்று கோவையில் நடைபெறும் இறுதி சுற்றிற்கு தேர்வு செய்யப்பட்டார். இறுதி ஆண்டு மாணவி ரோஷின் 2-வது பரிசை பெற்றார். அரையிறுதியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையில் நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐ.சி.டி. அகாடமி யூத் ஐகான் விருதும் சிங்கப்பூர் கல்வி சுற்றுலா சென்று வரும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழும மற்றும் மேலாண் இயக்குநர் தலைவர் தனசேகரன் சிறப்புரை ஆற்றினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். சென்னை ஐ.சி.டி.அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி அரி பாலச்சந்திரன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
எச்.சி.எல். மேலாளர் டீனா, கெம்பேப் குழும தலைவர் விஜயகுமார், திறன் கையகப்படுத்துதல் தலைவர் விஜயகுமார், ஓமேகா ஹெல்த்கேர் மேனேஜ் மென்ட் மூத்த இயக்குனர் சேவியர் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு வெற்றியாளர்களை தேர்வு செய்தது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமிக் டீன்கள் அன்புமலர் அறிவழகர், தேர்வு கட்டுப்பா ட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐ.சி.டி.அகாடமி தணிக்கை பிரிவு தலைவர் நரேந்திர கோபால் நன்றி கூறினார்.
- ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்றம் சார்பாக 50 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேயில் பங்கேற்று 10 பேர் முதல்பரிசினையும் 5 பேர் இராண்டாம் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்றம் சார்பாக 50 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேயில் பங்கேற்று 10 பேர் முதல்பரிசினையும் 5 பேர் இராண்டாம் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றிபெற்று ஊர் திரும்பிய மாணவ-மாண விகளை ஆயக்காரன்புலம் 2 ஊராட்சி மன்ற தலைவர் ராமையன், ஆயக்காரன்புலம் நான்காம் சேத்திஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசிமற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெற்றோர்கள், கிராம மக்கள் சால்வை அணிவித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்து பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்