என் மலர்
நீங்கள் தேடியது "Submarine"
- தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது
- கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்
கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோவா கடற்கரையில் இருந்து 70 நாட்டிக்கல் மைல்கள் [nautical miles] தூரத்தில் வைத்து இந்த விபத்து நடந்துள்ளது.
13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
காணாமல் போனவர்களை தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது . தற்போது வரை 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) மூலம் தேடுதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்காக பிரான்ஸ் கடற்படை குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் வருடாந்திர கடற்படை நாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இந்திய கடற்படை தளபதி தினேஷ் கே. திரிபாதி பேசினார். அவர் கூறும்போது, அடுத்த மாதத்திற்குள் ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என நம்புகிறோம் என்றார்.
இதன்படி, ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். பிரான்ஸ் நாட்டிடம், 26 ரபேல் வகை போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மஜகாவன் கப்பல் கட்டும் நிறுவனத்தில், கூடுதலாக 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்காக பிரான்ஸ் கடற்படை குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 6 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் இந்த கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டப்பட்டு உள்ளன. அவற்றுடன் இந்த 3 நீர்மூழ்கி கப்பல்களும் இணையும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எங்களுடைய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கடற்படையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் இந்திய கடற்படை தளபதி திரிபாதி பேசும்போது கூறியுள்ளார்.
- 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும்
- இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.
வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கப்பல்கட்டும் தளங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கடற்படை கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திட்டங்களை நேரில் ஆய்வு செய்த படங்களை அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

அப்போது பேசிய அவர், கடற்படை சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். மேலும், கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு, கடற்படை சக்தி மற்றும் அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த செய்தி தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நடந்த ஒரு ராணுவ மாநாட்டின் போது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதாக கிம் ஜாங் உன் அறிவித்தார். இப்போது இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.

பிற நாடுகளிடம் இருந்து துண்டிக்கப்பட்ட போதும் இத்தனை நவீன தொழில்நுட்பங்களை வட கொரியா எங்கிருந்து பெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பலர் ரஷியாவின் திசையை நோக்கி கை காட்டுகின்றனர்.
கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல் திட்டம்-75ன் கீழ் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை இணைக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மூன்று கப்பல்கள் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையுடன் இணைத்து இயக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசுக்கு சொந்தமான மசகான் டாக் என்கிற கப்பல் தயாரிப்பு நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பலை கட்டமைத்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் இணைத்ததன் மூலம், இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்ந்துள்ளது.
இதுகுறித்து கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் கூறியதாவது:-
ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் முழு அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. இன்றைய சிக்கலான பாதுகாப்பு சூழ்நிலையில், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், கடற்படையின் திறனை மேம்படுத்துவதிலும் இது பங்கு வகிக்கும்.
சமீபத்தில் ஐஎன்எஸ் விக்ராந்தின் கடல் சோதனையை வெற்றிகரமாக நடத்தினோம். ஆகஸ்ட் 2022க்குள் ஐஎன்எஸ் விக்ராந்தை இயக்க முடியும்.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் சமீபத்தில் கொள்முதல் செய்திருப்பது இயக்கவியலை மாற்றக்கூடும், எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சபரிமலையில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு