என் மலர்
நீங்கள் தேடியது "Suchana Seth"
- சூட்கேசில் அவரது மகனின் உடல் இருப்பது பற்றி எனக்கு தெரியாது.
- நான் கூகுள் மேப் மற்றும் ஜி.பி.எஸ். உதவியுடன் அருகில் போலீஸ் நிலையம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தேன்.
பெங்களூரு:
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத்(வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலையில், இவர்களது 4 வயது மகன் சின்மயை சுசனா சேத் கோவாவுக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தார். மகனை கொலை செய்த பின்னர் அவனது உடலை சூட்கேசில் வைத்துக்கொண்டு பெங்களூருவுக்கு கோவாவில் இருந்து வாடகை காரில் புறப்பட்டு வந்தார். அப்போது சுசனா சேத்தை பிடிக்க போலீசாருக்கு கார் டிரைவர் உறுதுணையாக இருந்துள்ளார். அதாவது சுசனா சேத் தனது மகனின் உடல் அடங்கிய சூட்கேசை வாடகை காரில் கொண்டு வந்தபோது, அந்த காரின் டிரைவரிடம் கோவா போலீசார் கொங்கன் மொழியில் பேசி சுசனா சேத்தை பிடித்தனர்.
இந்த திக்... திக்... பயணம் குறித்து கார் டிரைவர் ரே ஜான் நேற்று சில தகவல்களை தெரிவித்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கேன்டோலிமில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுசனா சேத்தை கடந்த 8-ந் தேதி அதிகாலையில் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். என்னுடையது இன்னோவா கார் ஆகும். காரை அடுக்குமாடி குடியிருப்பு ஊழியர்கள் முன்பதிவு செய்தனர். நான் அடுக்குமாடி குடியிருப்பை அடைந்ததும் சுசனா சேத் தனது சூட்கேஸ் வரவேற்பு அறையில் இருப்பதாகவும், அதை எடுத்து காரின் பின் பகுதியில் வைக்கும்படியும் கூறினார். அதன்படி நானும் வரவேற்பு அறைக்கு சென்று அவரது சூட்கேசை எடுத்து காரின் பின்பகுதியில் வைக்க முயன்றேன். அது மிகவும் கனமாக இருந்தது.
அப்போது அந்த சூட்கேசில் அவரது மகனின் உடல் இருப்பது பற்றி எனக்கு தெரியாது. சுசனா சேத் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டார். அப்போது நான் சூட்கேசில் இருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டால் எடை குறையும் என்றும், சூட்கேசை தூக்க வசதியாக இருக்கும் என்றும் கூறினேன். ஆனால் அதற்கு சுசனா சேத் மறுத்து விட்டார்.
அதனால் நான் அவரது சூட்கேசை தூக்க முடியாமல் கார் வரை சில அடி தூரம் இழுத்து வந்தேன். அவர் என்னுடன் காரில் வந்தபோது ஒரேயொரு முறை தான் பேசினார். வடக்கு கோவா பிகோலிம் பகுதியில் கார் வந்தபோது என்னிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி தருமாறு கேட்டார். அதன்படி நானும் வாங்கி கொடுத்தேன். அதன்பின் அவர் பேசவில்லை. நாங்கள் கர்நாடகா-கோவா சாலையில் சோர்லா காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அங்கு பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.
அங்குள்ள போலீசாரிடம் நான் கேட்டபோது இந்த போக்குவரத்து நெரிசல் சீராக 4 மணி நேரமாகும் என்று கூறினர். அப்போது நான் சுசனா சேத்திடம் 'மேடம் இந்த போக்குவரத்து நெரிசல் சீராக 6 மணி நேரம் ஆகும் என்று கூறுகிறார்கள். நான் வேண்டுமென்றால் விமான நிலையத்திற்கு காரை ஓட்டிச் செல்கிறேன். நீங்கள் அங்கிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் சென்று விடுகிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும் எவ்வளவு நேரமானாலும் காரிலேயே செல்வோம் என்று கூறினார்.
அதன்பின்னர் நான் தொடர்ந்து காரில் அவரை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். இதற்கிடையே போலீசாரிடம் இருந்து எனது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அவர்கள் என்னை உஷார்படுத்தினர். நீங்கள் அழைத்துச் செல்லும் பயணி மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று கூறினர். பின்னர் கோவா மாநில கலங்குட்டே போலீசார் என்னை தொடர்பு கொண்டு கொங்கன் மொழியில் பேசி அருகில் ஏதேனும் போலீஸ் நிலையம் இருந்தால் அங்கு காரை ஓட்டிச் செல்லும்படியும், சுசனா சேத்தை போலீசாரிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தினர்.
நான் கூகுள் மேப் மற்றும் ஜி.பி.எஸ். உதவியுடன் அருகில் போலீஸ் நிலையம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தேன். ஆனால் இல்லை. மேலும் போலீசார் யாரும் இருக்கிறார்களா? என்று சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் பார்த்தேன். யாரும் இல்லை.
அதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலை ஓட்டல்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று பார்த்தேன். பின்னர் ஒரு ஓட்டல் வந்தது. அங்கு சென்று நான் சாப்பிடுவது போல், அங்கிருந்தவர்களிடம் அருகில் போலீஸ் நிலையம் எங்கு இருக்கிறது என்று கேட்டேன். அப்போது அவர்கள் 500 மீட்டர் தொலைவில் போலீஸ் நிலையம் இருப்பதாக தெரிவித்தனர்.
அங்கிருந்து 1½ மணி நேரத்தில் பெங்களூருவை சென்றடைந்து விடலாம் என்றும் கூறினர். அதையடுத்து அவர்கள் கூறியபடி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். அது சித்ரதுர்கா மாவட்டத்திற்கு உட்பட்ட ஐமங்களா போலீஸ் நிலையம் ஆகும். நான் போலீஸ் நிலையம் சென்றடையும் வரை கலங்குட்டே போலீசார் என்னுடன் செல்போனிலும், ஆன்லைனிலும் தொடர்பில் இருந்தனர்.
நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டரை சந்திக்க சுமார் 15 நிமிடங்கள் ஆனது. ஆனால் அதுவரையில் சுசனா சேத் காரில் அமைதியாக அமர்ந்து இருந்தார். போலீசார் வந்து அவரது சூட்கேசை திறந்து பார்த்து சிறுவனின் உடலை கண்டுபிடித்தபோது நான் அதிர்ந்து போனேன். முதலில் ஒரு பெரிய பொம்மை, அதன்கீழ் துணிகள், அதற்கு கீழ் சிறுவனின் உடல் இருந்தது. சிறுவனின் உடலை பார்த்ததும் போலீசார் சுசனா சேத்திடம் இது உங்களுடைய மகனா? என்று கேட்டனர். அதற்கு அவர் 'யெஸ்'(ஆமாம்) என்று பதற்றம் இல்லாமல் பதில் அளித்தார். சுசனா சேத் 10 மணி நேரம் என்னுடன் காரில் பயணித்து வந்தார். ஆனால் இந்த மொத்த பயணத்தில் அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இவ்வாறு சுசனா சேத் பயணித்த காரின் டிரைவர் ரே ஜான் கூறினார். 4 வயது பிஞ்சு மகனை சுசனா சேத் கொலை செய்த சம்பவத்தில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- மகனை கொன்றதும் சுசனா சேத் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து இருந்தார்.
- எனது மகனை என்னுடைய கணவர் சந்திக்க கோர்ட்டு அனுமதி அளித்தது பிடிக்கவில்லை என அவர் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு:
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத்(வயது 39). தொழில் அதிபர். இவரது கணவர் வெங்கட்ராமன். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலையில், இவர்களது 4 வயது மகன் சின்மயை சுசனா சேத் கோவாவுக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தார்.
மகனை கொலை செய்த பின்னர் அவனது உடலை சூட்கேசில் வைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு கோவாவில் இருந்து வாடகை காரில் புறப்பட்டு வந்தபோது போலீசில் பிடிபட்டார். அவரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை சுசனா சேத்தை வடக்கு கோவாவில் உள்ள கன்டோலிமில் பகுதியில் அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அப்போது சுசனா சேத் முகத்தை துணியால் மூடியிருந்தார். அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட விசாரணை கைதிக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அதன் பிறகு மீண்டும் அவரை போலீசார் கோவா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கைதான சுசனா சேத்தை, சிறுவன் சின்யமை கொன்ற வடக்கு கோவாவில் உள்ள சர்வீஸ் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுசனா சேத்துக்கு போலீசார் மனநல பரிசோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகனை கொன்றதும் சுசனா சேத் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து இருந்தார். அதற்கு தற்போது டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து உள்ளனர். அவரது கையில் கட்டும் போட்டுள்ளார்.
நேற்று அவர் தனது கை வலிப்பதாக கூறி கண் கலங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு பெண் போலீசார் குடிக்க தண்ணீர் கொடுத்து தேற்றி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சுசனா சேத்தின் கைப்பையில் இருந்து கிழிந்து துண்டு துண்டாக கசங்கிய நிலையில் கிடந்த ஒரு 'டிஸ்யூ' காகிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மகனை கொன்றதற்கான காரணத்தை அதில் ஐலேனர் (கண் மை) மூலம் எழுதியுள்ளார்.
அந்த துண்டு காகிதங்களை போலீசார் ஒன்று சேர்த்து பார்த்தபோது அதில் எனது மகனை என்னுடைய கணவர் சந்திக்க கோர்ட்டு அனுமதி அளித்தது பிடிக்கவில்லை என அவர் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே ஆத்திரத்தில் அவர் மகனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் சுசனா சேத் எழுதிய டிஸ்யூ பேப்பர் கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி சீல் வைத்து ஆய்வுக்காக தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தை சுசனா சேத் தான் எழுதினாரா? அதில் உள்ளது அவரது கையெழுத்து தானா? என தடய அறிவியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- ஞாயிற்றுக்கிழமை தோறும் வெங்கட்ராமன் மகனுடன் செல்போனில் பேசி வந்தார்.
- கொலையை மறைக்க முயன்றதுடன், கொலைக்கான தடயங்களை அழிக்கவும் சுசனா சேத் முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பெங்களூரு:
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சுசனா சேத்(வயது 39)- வெங்கட்ராமன் தம்பதி. என்ஜினீயர்களான இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுசனா சேத் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர். வெங்கட்ராமன், கேரளாவை சேர்ந்தவர் ஆவார். தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெற்றவரான சுசனா சேத் பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் அறிவியல் தொடர்பான நிறுவனத்தை தொடங்கி, அதன் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதிக்கு 4 வயதில் சின்மய் என்ற மகன் இருந்தான். இதற்கிடையே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மேலும் இருவரும் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தம்பதி பிரிந்து வசிப்பதால் ஞாயிற்றுக்கிழமை தோறும் மகன் சின்மயை பார்க்க வெங்கட்ராமனுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் வெங்கட்ராமன் மகனுடன் செல்போனில் பேசி வந்தார். ஆனால் கணவர் தனது மகனிடம் பேசுவதால் தன்னிடம் இருந்து மகனை பிரித்துவிடுவார் என கருதியதுடன், கணவர் மீதான வெறுப்பில் சுசனா சேத் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி கோவாவுக்கு மகனுடன் சென்ற சுசனா சேத் அங்குள்ள வடக்கு கோவாவில் கேன்டோலிம் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் அறை எடுத்து தங்கினார். அன்று நள்ளிரவே அதிகளவு இருமல் மருந்தை மகன் சின்மய்க்கு கொடுத்துள்ளார். இதனால் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளான். பின்னர் மூச்சை திணறடித்து அவரது பால் முகம் மாறாக மகனை கொன்றுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் வெங்கட்ராமன், சுசனா சேத்தின் செல்போனுக்கு போன் செய்து மகனிடம் பேச கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மகன் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், கண்விழித்த பிறகு பேச வைப்பதாகவும் கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர் தானும் கத்தரிக்கோலால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் வந்ததால் தற்கொலை முடிவை கைவிட்ட சுசனா சேத் மகனின் உடலை ஒரு சூட்கேசில் வைத்துக்கொண்டு பெங்களூருவுக்கு வாடகை காரில் புறப்பட அந்த குடியிருப்பு ஊழியர்களிடமே காரை பதிவு செய்துள்ளார்.
அதன்படி அவர்களும் ஒரு வாடகை காரை பெங்களூருவுக்கு அவர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் மகனை மூச்சை திணறடித்து கொன்றதால் சிறுவன் சின்மய் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனால் சுசனா சேத் தங்கியிருந்த அறையில் ரத்த கறை படிந்திருந்தது. மேலும் சுசனா சேத்தின் நடவடிக்கையும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது.
மேலும் அறை எடுக்க சிறுவனுடன் வந்தவர், சூட்கேசுடன் புறப்பட தயாரானதும் ஊழியர்களுக்கு சுசனா சேத் மீதான சந்தேகம் வலுக்க காரணமானது. இதையடுத்து ஊழியர்கள் கோவா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு போலீசார், குடியிருப்பு ஊழியர்களிடம் சுசனா சேத் பயணித்த காரின் செல்போன் எண்ணை வாங்கி பேசியுள்ளனர்.
தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெற்றவரான சுசனா சேத்துக்கு இந்தி, ஆங்கிலம், கன்னடம் மொழி பேசத் தெரியும் என்பதால், கோவா போலீசார் கார் டிரைவருடன் கொங்கன் மொழியில் பேசி, சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஐமங்களா போலீஸ் நிலையத்திற்கு செல்ல அவ்வப்போது ஆலோசனை கூறி வந்தனர்.
அதன்படி காரை டிரைவரும் ஐமங்களா போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். பின்னர் ஐமங்களா போலீசார் காரில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது தான் சுசனா சேத் மகனை கொன்று உடலை சூட்கேசில் திணித்து பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றதும், பின்னர் அவரும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்திருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசாார் சுசனா சேத்தை கைது செய்தனர். அவரை கோவா போலீசார் வந்து கைது செய்து அழைத்து சென்று 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சிறுவன் சின்மய் உடல் கடந்த 9-ந்தேதி நள்ளிரவு பிரேதப் பரிசோதனை செய்து, இந்தோனேசியாவில் இருந்து வந்த அவனது தந்தை வெங்கட்ராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள அரிச்சந்திரா காட் மயானத்தில் சிறுவன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சுசனா சேத்திடம் கோவா போலீசார் கொலைக்கான காரணம் என்ன?, எப்படி மகனை கொலை செய்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விசாரித்தனர். முதலில் மகனை தான் கொலை செய்யவில்லை என்றும், உடல் நலம் சரியில்லாததால் இருமல் மருந்து கொடுத்ததாகவும், காலையில் பார்த்தபோது சின்மய் அசைவற்ற நிலையில் இருந்ததாகவும், இதனால் தானும் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கணவர் மீதான வெறுப்பாலும், மகனை கணவர் தன்னிடம் இருந்து பிரித்து சென்றுவிடுவார் என்ற அச்சத்தாலும் மகனுக்கு அதிகளவு இருமல் மருந்து கொடுத்ததுடன், மூச்சுத்திணறடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அத்துடன் கொலையை மறைக்க முயன்றதுடன், கொலைக்கான தடயங்களை அழிக்கவும் சுசனா சேத் முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கைதான சுசனா சேத்திற்கு போலீசார் மனநல பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவரை கோவா பனாஜியில் உள்ள மனநலம் ஆலோசனை மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சுசனா சேத்துக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக கோவா போலீசார் கூறுகையில், தான் பெற்றெடுத்த பால்முகம் மாறாத 4 வயது மகனை கொடூரமாக கொன்ற சுசனா சேத்தின் மனநிலையை அறியவும், கொடூர கொலையின் குற்ற பின்னணி பற்றி கண்டறியும் உளவியல் சோதனை நடத்த முடிவு செய்தோம். அதன்படி அவரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். அதன் அறிக்கை வந்த பிறகே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அந்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றனர்.
- வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகன் சின்மயிடம் பேச கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது.
- மகன் சின்மய், தனது தந்தையிடம் பேச தயாராக இருந்தான்.
பெங்களூரு:
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். இவர்கள் இருவரும் என்ஜினீயர்கள் ஆவார்கள். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சுசனா சேத் தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெற்று வல்லுனராக திகழ்ந்து வந்தார்.
வெங்கட்ராமன் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். அவர் தனது குடும்பத்துடன் யஷ்வந்தபுரம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. அதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சுசனா சேத் கர்ப்பம் அடைந்தார். அப்போதே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்தனர். மேலும் வெங்கட்ராமனுக்கு இந்தோனேசியாவில் வேலை கிடைத்ததால் அவர் அங்கு சென்றுவிட்டார். சுசனா சேத்துக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சின்மய் என்று பெயரிடப்பட்டது.
அவர்களுக்குள் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் வெங்கட்ராமனும், சுசனா சேத்தும் பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அதேநேரம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகன் சின்மயிடம் பேச கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது.
அதன்படி அவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மகன் சின்மயிடம் இந்தோனேசியாவில் இருந்தபடி செல்போன் வீடியோ அழைப்பு மூலம் பேசி வந்தார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி சுசனா சேத் தனது மகனுடன் கோவாவுக்கு சென்றார். அங்கு வடக்கு கோவா கேன்டோலிம் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கினார்.
மறுநாள் அதாவது 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம்போல் வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசனா சேத்தின் செல்போனுக்கு வீடியோ அழைப்பு விடுத்தார். அப்போது அந்த அழைப்பை எடுத்து பேசிய சுசனா சேத், தனது மகனிடம் போனை கொடுக்காமல், அவன் தூங்கிக்கொண்டிருப்பதாக வெங்கட்ராமனிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வெங்கட்ராமன், அடிக்கடி சுசனா சேத்தை செல்போனில் அழைத்தபடி இருந்தார். இதனால் சுசனா சேத் கோபம் அடைந்தார். அப்போது அவரது மகன் சின்மய், தனது தந்தையிடம் பேச தயாராக இருந்தான். தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுதும் இருக்கிறான். அவன் அழுத சத்தம் வெங்கட்ராமனுக்கு கேட்டுள்ளது.
இதனால் அவர் சுசனா சேத்திடம் காட்டமாக பேசி இருக்கிறார். மகனிடம் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போது சுசனா சேத், அவனுக்கு உடல்நிலை சரியில்லை. அவன் தூங்க வேண்டும், அதனால் அவன் தூங்கி கண்விழித்த பிறகு போன் செய்கிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
கணவர் மீது இருந்த ஆத்திரத்தாலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம்பிடித்ததாலும் கோபத்தின் உச்சிக்கே சுசனா சேத் சென்றிருக்கிறார். அதையடுத்து அவர் தனது மகனை கொலை செய்திருக்கிறார். அதாவது சிறுவனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்துள்ளார். அவன் மயங்கியதும் மூச்சை திணறடித்து கொலை செய்திருக்கிறார். மகனின் முகத்தை தலையணை அல்லது துணியால் மூடியும், கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையே அவர் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்ய ஊழியர் வந்ததால், தற்கொலை முடிவை தள்ளிப்போட்டு இருக்கிறார்.
பின்னர் தனது மகனின் உடலின் அருகேயே சுசனா சேத் அமர்ந்துள்ளார். மாலையில் மீண்டும் அவரது அறையை சுத்தம் செய்ய ஊழியர் வந்திருக்கிறார். அப்போது தான் மறுநாள் காலையில் அறையை காலி செய்து விடுவதாகவும், அப்போது வந்து சுத்தம் செய்து கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். 7-ந் தேதி அன்று இரவு சுசனா சேத் பெரிய கத்தரிக்கோலால் தனது கை நரம்பை அறுத்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. அதையடுத்து அவர் அங்கிருந்த துண்டால் மகனின் உடலில் இருந்த ரத்தக்கறை மற்றும் அறையில் சிந்திக்கிடந்த ரத்தக்கறைகளை துடைத்துள்ளார்.
பின்னர் மகனின் உடலை ஒரு சூட்கேசில் வைத்துக்கொண்டு அங்கிருந்து பெங்களூருவுக்கு சென்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதற்காக அவர் 8-ந் தேதி அதிகாலையில் காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்.
சூட்கேசில் இருந்து துர்நாற்றம் ஏதும் வீசாமல் இருக்க அடிக்கடி அவர் வாசனை திரவியத்தை காரில் அடித்து வந்திருக்கிறார். காரில் ஏ.சி.யையும் அதிகரித்து வந்திருக்கிறார். அதுபற்றி டிரைவர் கேட்டபோது சுசனா சேத் மழுப்பலாக பதில் அளித்திருக்கிறார். காரின் முன் இருக்கையில் அமர்ந்து சுசனா சேத் பயணித்து வந்திருக்கிறார். முன் இருக்கையில் அமர்ந்து வழிகாட்டுவதாக டிரைவரிடம் அவர் கூறியிருக்கிறார்.
இப்படி திக்... திக்... பயணம் மேற்கொண்ட சுசனா சேத், போலீசாரின் துரித நடவடிக்கையால் சிக்கிக்கொண்டார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தனது மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் இதுபற்றி கூறுகையில், இது ஒரு திட்டமிட்ட படுகொலை. அவர் தங்கி இருந்த அறையில் 2 இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தன. ஒன்று பெரியது, இன்னொன்று சிறியது. சிறிய மருந்து பாட்டிலை அவர் அடுக்குமாடி குடியிருப்பு ஊழியர்களிடம் கூறி வாங்கி வர சொல்லியிருக்கிறார். பெரிய மருந்து பாட்டில் ஏற்கனவே அவர் கொண்டு வந்தது தான். அவர் அளவுக்கு அதிகமாக தனது மகனுக்கு இருமல் மருந்தை கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் தனது மகனை மூச்சை திணறடித்து கொலை செய்திருக்கிறார். அதையடுத்து அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து மகனின் உடலுடன் பெங்களூருவுக்கு காரில் வந்திருக்கிறார். அப்போது தான் அவரை பிடித்துள்ளோம்.
கணவன் மீதிருந்த கோபத்தாலும், மகன் அவருடன் பேச வேண்டும் என்று அடம்பிடித்ததாலும் ஆத்திரத்தில் இந்த படுபாதக செயலை அவர் செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சிறுவனின் தந்தை வெங்கட்ராமன் நேற்று முன்தினம் இரவு இந்தோனேசியாவில் இருந்து சித்ரதுர்காவுக்கு வந்தார். அவருடன் அவரது உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர்.
இரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்களிடம் சிறுவன் சின்மயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து தந்தை கதறி அழுதார். பின்னர் அவனது உடல் பெங்களூரு ராஜாஜிநகர் அரிச்சந்திரா காட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
- சுசனா சேத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் 2021-ல் இந்திய அளவில் சிறந்த 100 பெண் தொழில் அதிபர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் இருந்தவர் சுசனா சேத் (39). தனது 4 வயது குழந்தையைக் கொன்று சூட்கேசில் அடைத்து கோவாவிலிருந்து பெங்களூரு செல்ல முயன்றார்.
அப்போது காரில் தப்பிக்க முயன்ற சுசனா சேத் போலீசால் பிடிக்கப்பட்டார். அந்தக் காரின் டிக்கியில் இருந்த சூட்கேஸை கைப்பற்றி பரிசோதித்தபோது பெட்டியில் சுசனா சேத்தின் மகனின் உடல் இருந்தது. இதையடுத்து, சுசனா சேத்தை போலீசார் கைது செய்தனர். அவரை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் வெளிவந்த தகவல்கள் வருமாறு:
கொல்கத்தாவை சேர்ந்தவர் சூசனா சேத். இவரது கணவர் தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கடரமணா. இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு பெங்களுருவில் வசித்து வந்த இவர்களுக்கு 2019-ம் ஆண்டு சின்மய் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்தக் குழந்தைக்கு 4 வயது ஆகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக 2020-ம் ஆண்டு விவாகரத்து பெற்று இந்த தம்பதி பிரிந்தது. ஞாயிற்றுக்கிழமை கணவருடன் தனது மகன் நேரத்தைச் செலவிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் அதிருப்தி அடைந்தார். தனது கணவர் மகனுடன் வீடியோ காலில் பேசியது சுசனாவுக்கு பிடிக்கவில்லை. இதனாலும் அவர் கணவர்மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
தனது கணவரை பழிவாங்க எண்ணி தனது 4 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனை சுசனா சேத் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
சுசனா சேத் 2021-ம் ஆண்டு இந்திய அளவில் சிறந்த 100 பெண் தொழில் அதிபர்களின் பட்டியலில் இடம்பிடித்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.