search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sumangali"

    • குங்குமத்தை மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தியில் வைப்பது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.
    • வசீகரமான தோற்றம் உருவாகும். லட்சுமி கடாட்சம் நிரம்பும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

    ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் கலாச்சாரம் மிகுதியாகி விட்டதால் தற்போது நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களை பார்ப்பது மிக அரிதாகவே உள்ளது.

    குங்குமத்தை மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தியில் வைப்பது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.

    வசீகரமான தோற்றம் உருவாகும்.

    லட்சுமி கடாட்சம் நிரம்பும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

    தன வசியம்-பண வரவு சித்திக்கும்.

    திருஷ்டி, செய்வினைகள் அண்டாது.

    மாந்த்ரீக பாதிப்பு விலகும்.

    கிருமி நாசினிகளான படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கும் குங்குமத்தை நெற்றியில் வைப்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

    தொற்று நோய் கிருமிகளும் நெருங்காது. உடல் உஷ்ணம் குறையும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    தீய எண்ணங்கள் விலகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். 

    • மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறப் பொருட்களில் குருவின் ஆதிக்கம் நிறைந்து இருக்கும்.
    • குருவின் ஆதிக்கம் நிறைந்த மஞ்சளை பெண்கள் பூசி குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும்.

    மங்கலப் பொருட்களின் வரிசையில் முன்னணியில் நிற்பது மஞ்சள். பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு கிருமி நாசினியான மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம்.

    தற்போது நாகரீக மாற்றத்தால் பலர் அதை கடைபிடிக்க தவறுகின்றனர்.

    மஞ்சள் பூசிய முகத்தில் தெய்வ கடாட்சம் பெருகும். மகாலட்சுமி வாசம் செய்வாள். முகத்தில் தேஜஸ் பெருகும். அழகு அதிகரிக்கும்.

    மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறப் பொருட்களில் குருவின் ஆதிக்கம் நிறைந்து இருக்கும்.

    குருவின் ஆதிக்கம் நிறைந்த மஞ்சளை பெண்கள் பூசி குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும்.

    கணவன்-மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகள் மிகுந்து இருந்தால், மனைவி மஞ்சள் அரைத்து குழைத்து முகம் முழுவதும் தேய்த்து குளித்து வர சச்சரவு நீங்கி தாம்பத்தியம் சிறக்கும்.

    பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம்.

    வீட்டில் மற்றும் வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் , பீரோவில் மஞ்சள் வைக்க நேர்மறை எண்ணங்கள் மிகுதியாகி ஐஸ்வர்யம் பெருகும்.

    வீட்டில் முனை முறியாத பச்சரிசியில் மஞ்சள் கலந்து அட்சதை வைக்கும் பொழுது மங்கள நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் மஞ்சள் ஜாதகத்தில் சனி ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்கக் கூடியது.

    ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் பாதிப்பு குறைந்து வெற்றிகள் உண்டாகும்.

    • வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.
    • சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

    மகாலட்சுமியின் அம்சமாகவும் அவளது மனத்திற்கு விருப்பமானதாகவும் உள்ள பொருட்களில் முக்கியமானது மஞ்சள்.

    மகாலட்சுமியின் இருப்பிடமாக மஞ்சளை சொல்வார்கள்.

    மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்யும் போது அட்சதை தூவுவதற்கு முனைமுறியாத பச்சரிசியில் மஞ்சளை தோய்த்து தூவுவார்கள்.

    எந்த பூஜை செய்தாலும் மஞ்சளை அரைத்து பிள்ளையார் போல ஒரு உருவத்தை செய்துவிட்டு,

    அதற்கு குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள்.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.

    சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

    நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் பெறலாம்.

    • திருச்செங்கோடு காந்தி நகரில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது.
    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி நகரில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.

    அதன்படி அர்த்தநா–ரீஸ்வரர் கோவில் சிவாச்சா–ரியார்கள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது.

    குஞ்சு மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன் போன்ற மங்கல திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் சாற்றி வழிபட்டனர். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த சுமங்கலிப் பெண்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு பாத பூஜை நடந்தது. பினனர் அவர்களிடம் திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.

    துர்க்கை வழிபாட்டு குழு அமைப்பாளர் யசோதா கோபாலன் அனைவரையும் வரவேற்றார். விஜயகுமாரி, மலர்ச்செல்வி, சாந்தி, மல்லிகேஸ்வரி ஆகியோர் அனைவருக்கும் துணிகள் வழங்கினர். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்.

    விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புஷ்பாஞ்சலி கமிட்டி பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலை–மையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
    • சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைதுறை நவசக்தி விநாயகர் ஆலயத்தில் வரலட்சுமி நோம்பு நடைபெற்றது. வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

    சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள்.

    இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். அதுசமயம் திருப்பலைதுறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியை பூஜை செய்து வழிபட்டனர்.

    48 நாட்கள் பெண்கள் விரதமிருந்து வரலட்சுமி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    ×