என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sunny"
- டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்தாண்டு கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. மக்கள் வெயிலில் வாடி வதங்குகின்றனர். மனிதர்களாலே இந்த வெயிலின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாயில்லா ஜீவங்கள் என்ன அவஸ்தை படுகின்றனர் என்பதை சொல்லவா வேண்டும்.
டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கோடை வெப்பத்தில் இருந்து தப்பிபதற்கு ஃப்ரூட் ஐஸ் பால், ஐஸ் கிரீம்உணவாக தருகின்றனர் தண்ணீரை சிபிரிங்க்லர் முறையில் விலங்குகள் மீது தெளிக்கின்றனர். விலங்களுக்கு சாப்பாட்டு அளவை குறைத்து நீர்சத்து மிகுந்த உணவுகளையும் , நீர் நிறைந்த ஆகாரத்தையும் கொடுக்கின்றனர்.
ஒவ்வொரு விலங்களுக்கு ஏற்றார்போல இந்த பணிகளை செய்து வருகின்றனர். விலங்குகள் இருக்கும் இடத்தில் ஏர் கூலர்கல்களும் வைத்துள்ளனர்.
- இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
- நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.
• நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.
• நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.
• பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
• பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.
• உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
• கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
• இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
• நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.
• பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.
• நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.
• கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.
• பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.
நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.
- 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது.
- வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாட்டால் மழை பெய்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.
குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினார்கள். சாலைகள் வெறிச்சோடின. பகலில் வெப்ப உஷ்ணத்தால் உடலில் இருந்து வியர்வை கொட்டுகிறது. புழுக்கமும் காணப்படுகிறது.
தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் ஒருவித சோர்வு ஏற்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கரூர், பாமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.
இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரி வித்துள்ளது. ஈரோட்டில் 110 டிகிரி, வேலூர், திருப் பத்தூர் ஆகிய இடங்களில் 108 டிகிரி வெப்ப நிலை பதிவாகி உள்ளது. 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது.
தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் 3 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். வட தமிழக உள் மாவட் டங்களில் இன்று மிக அதிக மாக வெப்பத்தின் தாக்கம் இருந்தது. தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யக் கூடும்.
வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாட்டால் மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதிப்ஜான் கூறியதாவது:-
தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் கரூர், ஈரோடு, நாமக்கல், வேலூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் வெயில் அதிகமாக தாக்கும். 4 நாட்கள் வரை பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். அதன் பிறகு குறையத் தொடங்கும்.
10, 12-ந் தேதி வாக்கில் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை தொடர்ந்து பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதனால் வெப்பம் தணியும்.
மேலும் குமரி கடல் பகுதி யில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் உள்ளது. அதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரே நாளில் 244 மி.மீ. மழை கொட்டியது.
- நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் குளிர்ந்த காட்சி வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.
பின்னர் இரவு முழுவதும் குளிர்ந்த காட்சி வீசி கொண்டிருந்தது.
இதே போல் வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, வெட்டிக்காடு, திருவிடைமருதூர், அதிரா ம்பட்டினம் ,பேராவூரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன. ஒரே நாளில் 244.50 மி.மீ. மழை அளவு பதிவானது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு ;-
திருவிடைமருதூர்-16.60, வெட்டிக்காடு-16.40, ஒரத்தநாடு-15, திருக்காட்டுப்பள்ளி- 14.40, ஈச்சன்விடுதி - 10.20, கும்பகோணம் -9.60, தஞ்சாவூர் -8, திருவையாறு -7 ஆகும்.
- தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
- அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தன. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று தஞ்சையில் காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளித்த வண்ணம் உள்ளது.
அவ்வப்போது லேசான சாரல் மழை பொழிந்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. எனவே இதுபோல் அடுத்து வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்