என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Surrogacy"
- வாடகைத்தாய் சட்டம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்டது.
- வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.
வாடகை தாய் முறையில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாடகைத்தாய் முறையானது தற்போது சில விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் வாடகைத்தாய் சட்டம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்டது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/25/7486448-newproject39.webp)
அதன்படி வாடகைத்தாய் முறைகளுக்கு பலவிதமான சட்ட திட்டங்களும், வழிமுறைகளும், வரையறைகளும் இந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. அதாவது, 2022-ம் ஆண்டு வரை இந்த வாடகைத்தாய் என்பது ஒரு வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையாகவே இருந்தது.
2022-ம் ஆண்டு அமல்படுத்தபட்ட சட்டத்தின் படி வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/25/7486455-newproject41.webp)
வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை என்றால் என்ன என்று பார்த்தால், தங்கள் குழந்தை வளருவதற்காக, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்து அவர்களின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.
இதன் மூலம் சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் அதாவது, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள், பணம் மற்றும் பொருளுக்காக மட்டும் வாடகைத்தாயாக இருந்தனர்.
அவர்களை வாடகைத்தாயாக தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. வாடகைத்தாய் முறைக்கு உட்படுத்தப்படக்கூடிய பெண்கள் பலர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.
எனவே அதுபோன்ற ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வாடகைத்தாய் முறையால் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதித்து 2022-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/25/7486487-newproject42.webp)
வாடகைத்தாய் முறை பற்றிய தவறான கருத்துகள்:
வாடகை தாய் முறை சட்டத்தின்படி தற்போதைய வாடகைத்தாய் முறையை எப்படி செய்யலாம் என்பதை குழந்தையின்மை சிகிச்சைக்கு வருபவர்கள் உள்ளிட்ட அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் டாக்டர்களிடம் வரும் நோயாளிகள் பலர் வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறு எளிதாக வந்துவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள். வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் என்று நினைக்கிறார்கள். இது தவறானதாகும்.
வாடகைத்தாய் முறை என்பது கர்ப்பப்பை இல்லாத பெண்கள், குழந்தை பேறு பெறுவதற்கான ஒரு வழிமுறை மட்டும் தான். ஏனென்றால் இதற்கு இன்னொரு சிகிச்சை முறை கருப்பை மாற்று சிகிச்சையாகும்.
இந்த கருப்பை மாற்று சிகிச்சையை கடந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் சுவீடனில் டாக்டர் மட்ஸ் பிரான்ஸ்ட்ரோம் என்பவர் முதல் முறையாக செய்து குழந்தை பேறு பெறப்பட்டது.
இந்த கருப்பை மாற்று சிகிச்சை இன்றும் உலகத்தில் பல நாடுகளில் செய்தாலும் கூட இதில் கருப்பை தானம் செய்பவர், தானம் பெறுபவர் மற்றும் குழந்தை பேறு பெறுதல் ஆகியவற்றில் ஆபத்தும் உள்ளது.
மேலும் இதனுடைய வெற்றி விகிதம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கான செலவுகளும், பாதிப்பு காரணிகளும் அதிகமாக இருப்பதால் இந்த முறை இன்றும் ஒரு தோல்வி அடைந்த முறையாகத்தான் கருதப்படுகிறது.
மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளான இதயம், கல்லீரல், சிறுநீரகம் மாற்று சிகிச்சை போல கருப்பை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கிறது.
ஏனென்றால் கருப்பையில் ஒரு குழந்தை வளர வேண்டும், அந்த குழந்தை வளரும் போது, மாற்றப்பட்ட கருப்பையானது குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த கருப்பை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் இந்த சிகிச்சையானது மிகவும் குறைவான அளவிலான வெற்றியையே தரக்கூடியது.
ஆனால் வாடகைத்தாய் முறை என்பது குழந்தையின்மை சிகிச்சையில் மிகவும் எளிமையானது, ஆரோக்கியமானது. குழந்தைக்கு கண்டிப்பாக பாதுகாப்பானது.
அதே நேரத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தையை பெற்றுக் கொடுக்க உட்படுத்தப்படுகிற பெண்கள் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்தித்ததே இந்த சட்டம் வருவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
- வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
- குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.
குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நடைமுறை சரோகசி (Surrogacy) எனப்படும் வாடகைத்தாய் முறை ஆகும். வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
வாடகைத்தாய் என்பது ஒரு பெண், தன் உடல் திறனால் குழந்தை பெற முடியாத நிலையில், அவர்களுக்காக இன்னொரு பெண் கர்ப்பத்தை சுமந்து குழந்தை பெற்றுத் தருவதாகும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/25/7485503-newproject36.webp)
இதை மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் குழந்தை வளருவதற்கு மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.
அதாவது சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இருக்காது. சில நேரங்களில் அவர்களுக்கு கர்ப்பப்பை இருந்தாலும் கூட அது சரியாக செயல்படாத நிலையில் இருக்கும்.
ஒருவேளை கர்ப்பப்பையில் செயல்பாடு இருந்தால் கூட அதில் சரியான முறையில் குழந்தை வளர்வதற்கு தேவையான சூழல்கள் இல்லாத நிலை இருக்கும்.
இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய மரபணு வழியிலான குழந்தையை வளர்த்து பெற்றெடுப்பதற்கு ஒரு வழிமுறைதான் வாடகைத்தாய் என்பதாகும்.
இந்த வாடகைத்தாய் முறையில் எந்த தம்பதிக்கு வாடகைத்தாய் வேண்டுமோ, அவர்களை கமிஷனிங் தம்பதி என்று சொல்கிறோம். அதாவது அவர்கள் தான் அந்த குழந்தைக்கு தாய், தகப்பன்.
வாடகைத்தாய் என்பவர் கர்ப்பப்பையை மட்டும் தான் இந்த குழந்தைக்கு கொடுப்பார்.
எனவே இந்த குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.
அந்த தம்பதியின் முட்டையையும், விந்தணுவையும் சேர்த்து கருவாக்கம் செய்து, அந்த கருவை வேறொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் முறைதான் வாடகைத்தாய்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/25/7485620-newproject37.webp)
இந்த வாடகைத்தாய் முறை என்பது, ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கத் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகவே பலவிதமான ஆலோசனைகள், விமர்சனங்கள், விவாதங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.
ஏனென்றால் வாடகைத்தாய் முறையில், குறிப்பாக குழந்தை தேவைப்படுகிறவர்கள் மட்டும் இல்லாமல், சில சமூக காரணங்களுக்காகவும், பிரபலங்கள் என்ற முறைகளிலும், சிலர் தாங்கள் குழந்தை பெற்றால் தங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், அல்லது அந்த கர்ப்பத்தை சுமப்பதால் தங்களின் வாழ்க்கை பாதிப்படையும் என்பது போன்ற சூழ்நிலைகளால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
- ராஜேஷ்பாபு என்பவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.
- அஷ்விதா (25) என்ற பெண்ணை ரூ.10 லட்சம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் வாடகை தாயாக சென்ற அஷ்விதா என்ற பெண் 9 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ராயதுர்கம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ராஜேஷ்பாபு (54) என்பவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஒடிசாவைச் சேர்ந்த அஷ்விதா சிங் (25) என்ற பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஷ்விதா சிங்கை ராஜேஷ்பாபு தங்கவைத்துள்ளார்.
இந்நிலையில், 9வது மாடியில் கீழ் விழுந்து அஷ்விதா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அஷ்விதாவின் கணவர் சஞ்சய் சிங் அளித்த புகாரின் பேரில், ராஜேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணையில் அஷ்விதா கருப்பமாக இல்லை என்றும் அதற்கான சிகிச்சை அடுத்த மாதம் தான் தொடங்கவுள்ளது என்பதையும் அடுக்குமாடி குடியிருப்பின் 9-ம் மாடியில் இருந்து 7வது மாடி வரை 2 சேலைகள் கட்டப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.
இந்நிலையில், அடிக்கடி அஷ்விதாவிடன் பாலியல் அத்துமீறலில் ராஜேஷ்பாபு ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ராஜேஷ் பாபுவின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே அஷ்விதா 9வது மாடியில் இருந்து 7வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சேலை கட்டி இறங்க முயன்றபோது கைகள் நழுவி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- ல் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரோம்:
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி, வாடகைத் தாய்மை முறை மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார். தலைநகர் ரோமில் இளைஞர்களுக்கான மாநாடு நடந்தது.
இதில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது, "வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்" என்றார்.
ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.
- நிபந்தனையுடன்தான் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
- கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருப்பதாக மாவட்ட மருத்துவ வாரியம் சான்றளிக்க வேண்டும்.
புதுடெல்லி:
கணவன்-மனைவி இருவரில் யாருக்காவது குழந்தை பெற முடியாத குறைபாடு இருந்தால், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் விதிமுறைகள், 2022-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், அவற்றில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை நேற்று அறிவிப்பாணையாக வெளியிட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வாடகைத்தாய் முறையில் பிறக்கப்போகும் குழந்தை, அதன் தந்தையின் உயிரணுவையோ அல்லது தாயின் கருமுட்டையையோ கொண்டிருக்க வேண்டும். அந்த நிபந்தனையுடன்தான் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
அதாவது, கணவன்-மனைவி இருவருக்குமே குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடு இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த முடியாது. யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருந்தால்தான், அந்த முறையை பயன்படுத்த முடியும்.
கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருப்பதாக மாவட்ட மருத்துவ வாரியம் சான்றளிக்க வேண்டும். அதன்பிறகுதான் உயிரணுவையோ அல்லது கருமுட்டையையோ தானமாக பெற முடியும்.
ஒரு பெண், விதவையாகவோ அல்லது விவாகரத்து ஆனவராகவோ இருந்தால், அவரது சொந்த கருமுட்டையையும், தானமாக பெறப்பட்ட உயிரணுவையும் பயன்படுத்தித்தான் வாடகைத்தாய் முறைக்கு செல்ல முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிறவியிலேயே அரியவகை குறைபாடு கொண்ட ஒரு பெண், கருமுட்டையை தானமாக பெற்று வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஏராளமான பெண்களிடம் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மனுக்கள் வந்தன. எனவே, இந்த திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
- பெண்களை பராமரிக்க தனியாக பெண்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.
- பெண்களிடம் நேரில் விசாரிக்க முயன்ற அதிகாரிகளை அந்த வீடுகளுக்குள் அனுமதிக்கவில்லை.
சென்னை:
சென்னை சூளைமேட்டில் வாடகைத்தாய் பண்ணைகள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் நேரடியாக அந்த வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
2 வீடுகளில் மொத்தம் 11 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். கரு செலுத்தப்பட்டு கர்ப்பிணியானதும் இந்த வீடுகளில் அடைத்து வைத்து விடுகிறார்கள்.
பிரபலமான 2 மருத்துவமனைகளின் மூலம் வாடகைத் தாயாக இவர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர். இந்த பெண்களை பராமரிக்க தனியாக பெண்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். பெண்களிடம் நேரில் விசாரிக்க முயன்ற அதிகாரிகளை அந்த வீடுகளுக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து சோதனைக்கு சென்றவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கும் நேரில் சென்று இது தொடர்பாக விசாரித்தனர்.
அப்போது வாடகைத் தாய்மார்கள் பெயர் விபரம், யாருக்காக குழந்தை பெற்று தருகிறார்கள், உரிய விதிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்களா? என்ற விபரங்களை கேட்டனர். ஆனால் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே அந்த 11 பெண்களையும் அங்கிருந்து அவசர அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றி விட்டார்கள். அவர்களை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
இந்த விவகாரத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் வாடகைத்தாய் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கருத்தரித்தல் மையங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளார்கள்.
‘‘வாடகைத்தாய் முறை மூன்று வகையான பெண்களுக்குத் தேவைப்படுகிறது. உடல்நலப் பிரச்சனை காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டோ அல்லது வேறு பிற காரணங்களாலோ கர்ப்பப்பை இல்லாத பெண்கள் முதல் வகை. இவர்களுக்கு கர்ப்பப்பை மட்டும்தான் தேவைப்படும். அவர்கள் கருமுட்டையைக் கொண்டிருப்பார்கள். கருமுட்டையும் இல்லாத பெண்கள் இரண்டாவது வகை.
இச்சூழலில் கருமுட்டையை தானமாகப் பெற்றுதான் கருவை உருவாக்க முடியும். கர்ப்பப்பை, கருமுட்டை இருந்தும் குழந்தை பெறுவதற்கான உடல் வலு இல்லாத பெண்கள் மூன்றாவது வகை. 40 வயதைக் கடந்த பெண்களில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் இந்த வகைக்குள் அடங்குவர். மேற்சொன்ன காரணங்களால் குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களுக்கு வாடகைத்தாய் முறை ஒரு வரப்பிரசாதம்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812281035236961_1_surrogacy._L_styvpf.jpg)
அத்தம்பதியில் ஆணின் விந்தணு குழந்தைப் பேறுக்குத் தகுதியுடையதாக இருந்தும் பெண்ணிடம் கருமுட்டை இல்லை என்று வைத்துக் கொள்வோம். கருமுட்டையை தானமாகப் பெற்று கருவை உருவாக்கும்போது அந்தக் கருவுக்கும் ஆணுக்கும் மட்டுமே மரபியல் ரீதியிலான தொடர்பு இருக்கும். வாடகைத்தாய் முறை காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் என்றாலும் இதனை உதவி மனப்பான்மையோடுதான் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மசோதா பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. வாடகைத்தாய்க்கும் கருவுக்கும் மரபியல் ரீதியிலாக எந்தத் தொடர்பும் இல்லையே தவிர பிரசவ வலி தொடங்கி தாய்ப்பால் சுரப்பு வரை தாய்மைக்கான எல்லாமும் அவர்களுக்கும் உள்ளது. அவர்கள் சுமக்கும் குழந்தை மீது அவர்களுக்கு பற்றுதல் இருக்கலாம் என்கிற ஐயப்பாடும் உள்ளது.
இதனால்தான் இதுவரையிலும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் வாடகைத்தாய்மார்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத படியிலான அமைப்பு இருந்து வருகிறது. தங்கள் கருவைச் சுமந்த வாடகைத்தாய் யார் எனத் தெரிந்தாலோ அல்லது தான் சுமந்த கரு யாரிடம் வளர்கிறது என்று தெரிந்தாலோ எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பிருப்பதாகக் கருதுகின்றனர். எனவே குழந்தை பிறந்தவுடன் வாடகைத்தாயிடமிருந்து, கருவுக்கு சொந்தமான தம்பதிக்கு குழந்தையைக் கொடுத்து விடுவர்.
கருவைச் சுமக்காத தாய்க்கு தாய்மைக்கான மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆகவே அவருக்கு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு இருக்காது. மருத்துவ ரீதியில் சுரப்பை ஏற்படுத்தலாம் அல்லது தாய்ப்பால் வங்கிகளிலிருந்து தாய்ப்பால் பெற்றுக்கொடுக்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்காகவாவது தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையானது.