என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suruli falls"

    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ள நிலையில் வரத்து 2483 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5059 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    கனமழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக 2 நாட்கள் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராட வந்தனர்.

    ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவி மற்றும் முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே நாளை சுருளி அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

    • கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும்

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை சீசனின் போது ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்கின்றனர்.

    அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் இங்கு குவிவார்கள்.

    மேகமலை, தூவானம் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐப்பசி மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவிக்கு வந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    • தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராக நதி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராக நதி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம். குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ துணிகளை துவைக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று சுருளி அருவிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இன்று காலையும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தே காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    நீர் வரத்து சீரான பின்னர் கும்பக்கரை மற்றும் சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட த்தில் பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின் கம்பங்கள் அருேக செல்ல வேண்டாம். கால்நடைகளை மின் கம்பங்களில் கட்ட வேண்டாம் என மின் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.

    இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    மழை குறைந்து வந்தபோதும் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கம்பம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் கொட்டி தீர்த்த கன மழையால் இடுக்கி, வயனாடு, எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன.

    இந்த மழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தது. கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மழை படிப்படியாக குறைந்து வந்தபோதிலும் சுருளி வனப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் 8-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு மழை முற்றிலும் நின்றுவிட்டதால் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. எனவே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர்.
    ×