என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Swing"
- இங்குள்ள உற்சவர்களுக்கு தான் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
- ஆடியில் அவதரித்த ஆண்டாள் நீலமேகப் பெருமாளுடன் ஊஞ்சல் சேவை சாதித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வெண்ணா ற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவில் தஞ்சை மாமணிக்கோவில் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள அனைத்து மூலவர்களும் சுதை வடிவில் இருப்பதால் இங்குள்ள உற்சவர்களுக்கு தான் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஒன்றாக திகழும் நீலகமேகப் பெருமாள் கோவிலில் இன்று காலை மூலவருக்கு தைலக்காப்பு சேவை நடந்தது. இன்று முதல் தொடந்து 45 தினங்கள் தைலக்காப்பு நடைபெறும். இந்த தினங்களில்
திருமுகமண்டல தரிசனம் மட்டும் தரிசிக்கலாம்.
முன்னதாக இந்த கோவிலில் நேற்று ஆடி 2-ம் வெள்ளி கிழமையை முன்னிட்டு ஆடியில் அவதரித்த ஆண்டாள் நீலமேகப் பெருமாளுடன் ஊஞ்சல் சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் ஆண்டாளையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.
- அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார்.
- இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு அபிராமி அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று ஸ்ரீஅமிராமி அம்மனின் பக்தரான அபிராமிபட்டர் வழிபட அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டார்.
அபிராமி பட்டர் அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த நிலையில், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார்.
இதனையடுத்து அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார்.
100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79வது பாடலான "விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு, எமக்கு அவ்வழி கிடக்க, பழிக்கே சுழன்று, வெம் பாவங்களேசெய்து, பாழ் நரகக் குழிக்கே, அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே? " என்ற பாடலை பாடினார்.
அப்பொது அம்மன் நேரில் தோன்றி தனது தோட்டை வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.
அதன்படி தை அமாவாசையான நேற்று அபிராமி பட்டரின் உயிரை காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய நிகழ்வு நடத்தப்பட்டது. இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளினார்.
தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதியின் பாடல்களை பாடினர்.
ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று கயிறு அறுக்கப்பட்டது. 79 பாடலின் முடிவில் நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100 பாடல்கள் பாடி நிறைவு செய்யப்பட்டது.
- பிரகார வீதியுலா நடைபெற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தது.
- மேள தாளங்கள் முழங்க ஊஞ்சலுக்கு எழுந்தருளி சக்கரபாணிசாமி காட்சியளித்தார்.
சுவாமிமலை:
கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில் ஆண்டு தோறும் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 16-ந் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உற்சவத்தின் 3-ம் நாள் விழாவில் உற்சவர் சக்கரபாணி, சிறப்பு பட்டு வஸ்திரங்கள், விசேஷ ஆபரணங்கள், பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூடி சர்வலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பின், பிரகார வீதியுலா நடைபெற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தது. பின்னர், மேள தாளங்கள் முழங்க ஊஞ்சலுக்கு எழுந்தருளி சக்கரபாணிசாமி காட்சியளித்தார்.
அவருக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- கோவிலில் சக்கரவர்த்தி கோட்டையும் அதனை தொடர்ந்து அம்பாள் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.
- நாதஸ்வர இசையுடன் அம்பாள் பல்லக்கில் வீதியுலாவும் நடந்தது.
சுவாமிமலை:
கும்பகோணம் சாரங்க பாணி கோவில் கீழவீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சக்கரவர்த்தி கோட்டையும் அதனை தொடர்ந்து அம்பாள் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் பொம்மலாட்டம், சந்தன காப்புஅலங்காரம், நாதஸ்வர இசையுடன் ஸ்ரீ அம்பாள் பல்லாக்கில் வீதி உலாவும் நடந்தது. வருகிற 12-ந்தேதி இரவு சுத்தாபிஷேகம், காளியம்மன் ஊஞ்சல் உற்சவம் மற்றும் அமுத படையல் நிகழ்ச்சி நடைபெ றுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நினைவில் வாழும் செல்வம் குடும்பத்தினர் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்