என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "T-shirt"
- பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கிறது.
- டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நல்ல நோக்கத்திற்காக 'கிரவுட் பண்டிங்' முறையில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் ஒரு வாலிபர் 'கியூ-ஆர்' குறியீடுடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்த பூஜா சன்வால் என்ற பெண் கன்னோட் ப்ளேஸ் பகுதியில் ரோகித் சலூஜா என்ற வாலிபர் அணிந்திருந்த 'கியூ-ஆர்' டி-ஷர்ட்டை பார்த்தார்.
அதில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சோனு என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் செல்போனை யாரோ திருடிவிட்டனர். இது அவரை மிகவும் வருத்தப்படுத்தியது. யாரிடமும் முரட்டுதனமாக பேசாத, அன்பான உள்ளம் கொண்ட அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்க புதிய போன் வாங்கி கொடுக்க நிதி திரட்டுகிறேன் என கூறப்பட்டிருந்தது.
பூஜா சன்வாலின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகிய நிலையில், சுமார் 37 பேர் அவருக்கு நிதியுதவி செய்தனர். இந்த பதிவை பார்த்த ஒரு பயனர், முடிதிருத்தும் நபரை கவனித்து கொள்வதற்காக அவரை மதிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கிடையே ஒரு நிறுவனம் அந்த முடி திருத்தும் தொழிலாளிக்கு புதிய போனை வழங்கி உள்ளது.
- மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- எம்.பி.யாக தேர்வானவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்து வருகிறார்.
புதுடெல்லி:
18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்பட 279 பேர் நேற்று எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.
இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர், ரீ-நீட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்டை அணிந்திருந்தார்.
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததால் மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை பவன் கெரா அறிமுகப்படுத்தினார்
- புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்
மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் 'பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.
அதனுள், 'ஊழல்', 'பாலியல் வன்புணர்வாளர்', 'மோசடி பேர்வழி ' போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட 'கறை படிந்த' டி-சர்ட்டை வைத்தார். வாஷிங் மெஷினில் இருந்து டி-சர்ட் வெளியே எடுத்தபோது, 'சுத்தமாக' இருந்தது. அந்த 'சுத்தமான' டி-ஷர்ட்டில் 'பாஜக மோடி வாஷ்' என்று எழுதப்பட்டிருந்தது.
பின்னர் பேசிய பவன் கெரா, புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்'. அதை பயன்படுத்தும் வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் தான். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகையாகும்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால் அடுத்த கணமே அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாஷிங் மெஷினின் உள்ளே வையுங்கள். அவர் வெளியே வரும் போது ராஜ்யசபா எம்பியாக கூட வரலாம்.
சுத்தப்படுத்துவது மட்டுமின்றி இந்த மெஷின், மோசடி பேர்வழியை தேசப்பற்றாளராகவும் மாற்றுகிறது. வழக்கு விசாரணை வேகத்தை குறைக்கவும் செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
- சூப்பர் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
- பைக்கை தனது டி-ஷர்ட்டால் துடைத்து, பின்னர் அந்த இடத்தில் டோனி ஆட்டோகிராப் போட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம் எஸ் டோனி. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக கபில் தேவுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் டோனி ஆவார்.
டோனி ஓய்வை அறிவித்த பிறகு அவர் குறித்த வீடியோக்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருவதுண்டு. அவர் ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டாலும் சரி, பைக் ஓட்டினாலும் சரி, விமான நிலையத்தில் இருந்து நடந்து வந்தாலும் சரி உடனே அந்த வீடியோ வைரலாகி விடும். அதுபோல சமீபத்தில் இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் டோனி வீட்டிற்கு சென்று அங்குள்ள பைக்குகளை பார்த்து வீடியோ வெளியிட்டார் உடனே இந்த வீடியோவும் வைரலாகியது. இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
இந்த வரிசையில் தற்போது சூப்பர் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சொந்த ஊரான ராஞ்சியில் ரசிகரின் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போடுகிறார். அப்போது பைக்கில் தூசி இருந்ததால் அதனை தனது டி சர்ட்டால் துடைத்து, பின்னர் அந்த இடத்தில் அவர் ஆட்டோகிராப் போட்டார்.
பின்னர் பைக் மீது உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து எப்படி இருக்கிறது என்பதை சோதித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
MS Dhoni and his love for bikes ?#MSDhoni #WhistlePodu
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) November 25, 2023
? Sumeet Kumar pic.twitter.com/veGbBS16UO
- இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது
- கோலி தருவதை அசாம் மகிழ்ச்சியுடன் பெறும் காட்சிகள் வைரலானது
சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் (ICC) 2023 வருட ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இத்தொடரின் போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த 7 ஆண்டுகளாக ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. இம்முறையும் வெற்றி பெற்றதை அடுத்து 8-வது முறையாக இந்த பெருமையை இந்தியா தக்க வைத்து கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தோல்வியுற்றதால் அந்நாட்டில் இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆடிய விதத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய அணி வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு தனது கையொப்பமிட்ட இந்திய அணி டி-ஷர்டுகளை (jersey) பரிசாக அளித்தார். அவற்றை மகிழ்ச்சியுடன் பாபர் அசாம் பெற்று கொண்டார்.
இக்காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அசாமின் இந்த செய்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் அணியினரின் தோல்வியில் பாகிஸ்தான் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் பாபர் அசாம், கோலியிடமிருந்து டி-ஷர்ட் வாங்குவதை தொலைக்காட்சி சேனல்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. தோல்வியில் மக்கள் வருந்தும் போது, பாபர் அசாம் இவ்வாறு செய்தது தவறு. அவர் இதை செய்திருக்க கூடாது. தனது உறவினர் மகனுக்காக கோலியிடம் டி-ஷர்ட்கள் வாங்க பாபர் நினைத்திருந்தால் கூட கேமிராக்களின் பார்வையில் படாமல் தங்கள் அறைக்கு சென்ற பிறகு அவரை தனியே சந்தித்து வாங்கியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு போட்டியில் வெல்வதும் தோற்பதும் இயல்பான சம்பவங்கள் என்றும் இரு அணி வீரர்களின் நட்பான பரிமாற்றங்கள், போட்டியை போட்டியாக பார்க்கும் மனப்பக்குவம் மக்களிடம் வளர வளர இது போன்ற செயல்கள் சரியாக புரிந்து கொள்ளப்படும் என இச்சம்பவம் குறித்து உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்