என் மலர்
நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"
- மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
- பேரூராட்சிக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துக்களின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.
மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாமல்லபுரத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளை மாமல்லபுரத்துடன் இணைக்கும் பணிகள் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துக்களின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உடைய "யுனஸ்கோ" அங்கீகாரம் பெற்ற சர்வதேச சுற்றுலா நகர பகுதி என்பதால், அதன் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் எதிரே திறந்தவெளியில், குறுகிய இடத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை, கழிப்பறை, குடிநீர், உடமைகள் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் ஏதும் இல்லாமல் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
உலகப்பாரம்பரிய நகரமாக "யுனஸ்கோ" அங்கிகாரம், சிற்ப புவிசார் நகரம், சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நடக்க இருக்கும் மாமல்லபுரத்தில் போதிய வசதி இல்லாமல் பஸ் நிலையம் இருந்து வருகிறது.
மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது., பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் முயற்சி நடந்து அதுவும் நடைபெறவில்லை.
பின்னர் கருகாத்தம்மன் கோயில் வடபுறம் அரசுக்கு சொந்தமான 6.80 ஏக்கர் நிலத்தில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட உறுதி செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு, தேர்தல், திட்ட மதிப்பீட்டில் குளறுபடி என அதுவும் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் பூங்கா, தங்கும் அறை, டிஜிட்டல் வரைபட விளக்க போர்டு, சி.சி.டி.வி பாதுகாப்பு, அதை கண்காணிக்க காவல்துறை கட்டுப்பாட்டு அறை, தானியங்கி நடைமேடை, விசாலமான பார்க்கிங் போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான கள ஆய்வு மற்றும் புதிய வரைபட ஆலோசனை பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா, கலெக்டர் ராகுல்நாத், எம்.பி செல்வம், எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் முதற்கட்ட பணிகள் துவங்கி 15 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.