என் மலர்
நீங்கள் தேடியது "tag 107604"
மதுரை:
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பினார்.
தல்லாகுளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கார்த்திகாதேவி (21). இவர் சம்பவத்தன்று அதிகாலை காந்தி மியூசியம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கார்த்திகாதேவி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்த 2 சம்பவங்களும் கடந்த மாதம் முதல் மற்றும் 2-வது வாரத்தில் நடந்துள்ளன.
நகையை பறிகொடுத்தவர்கள் உடனே தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கொள்ளை சம்பவம் நடந்த 1 மாதத்துக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
மதுரை செல்லூர் அகிம்சா நகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 38). இவர் அதே பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல தனியார் வங்கியில் சுந்தரமகாலிங்கம் கடன் வாங்கினார்.
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மாதத் தவணையை சரிவர செலுத்த முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதனால் மன வேதனை அடைந்த அவர், சம்பவத்தன்று வீடடில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் சுந்தரமகா லிங்கத்தை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பானி புயலால் மழை வரும் என எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு புயல் திசை மாறியதால் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
ஆனால் மதுரை மாவட்டத்தில் மட்டும் மழையின்றி வறண்ட வானிலை நிலவியதால் வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது. நாள்தோறும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அளவு பதிவானது. மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் மதுரையில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று பகலில் வழக்கத்தை விட அனல்காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்தது. மாலை 4 மணியளவில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு வந்தன. குளிர்ந்த காற்று, இடி-மின்னலுடன் 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.
முதலில் சாரலாக விழுந்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்தது. மதுரை நகரின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. 5 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி வரை கொட்டித்தீர்த்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய பகுதிகளான மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகள், விளக்குத்தூண், மாசி வீதிகள், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.
இதே போல் மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள், திருப்பரங்குன்றம், கப்பலூர், அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரை:
மதுரை கூடல்புதூரில் உள்ள செல்லையா நகரைச் சேர்ந்தவர் செல்வன் தினேஷ் டேவிட்சன் (வயது51). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவுக்குள் இருந்த 30 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
மாலையில் வீடு திரும்பிய செல்வன்தினேஷ் டேவிட்சன், கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.