என் மலர்
நீங்கள் தேடியது "tag 113362"
- ரவிக்குமார் மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
- லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பினார்.
கோவை:
கோவை கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ்(53). இவர் கோவையில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அந்த ரியல் எஸ்டேட் சார்பில் விளாங்குறிச்சி ஜீவா நகர் அருகே வீட்டுமனை பிரிக்கப்பட்டு அங்கு தற்காலிக அலுவலகம் உள்ளது.
கடந்த 9-ந் தேதி அந்த அலுவலகத்துக்கு அதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் புரோக்கராக பணியாற்றும் ரவிக்குமார் என்ற கென்னடி(45) வந்தார். அவர் திடீரென்று லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பினார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவிக்குமார் மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 23 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாரிடம் ரவிக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் பல பேரிடம் கடன் வாங்கியிருந்தேன். பணம் கேட்டு அவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அந்த கடனை எப்படி திருப்பி கொடுப்பது என யோசித்து வந்தேன்.
அப்ேபாது தான் நான் வேலை செய்யும ரியல்எஸ்டேட் அலுவலகத்தின் மேலாளரிடம் ரூ.82 லட்சம் இருப்பதை அறிந்தேன். அதை பறிக்க திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று அலுவலகத்துக்கு சென்றபோது, மேலாளர் மட்டுமே இருந்தார். இதுதான் சரியான நேரம் என்று நினைத்து நான் வைத்திருந்த ஆக்சா பிளேடால் அவரை வெட்டினேன். இதில் காயம் அடைந்த அவர் அப்படியே கீழே விழுந்தார். உடனே நான் 82 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு நான் வந்த காரில் ஏறி தப்பினேன். அந்த பணத்தை கொண்டு நான் கடன் வாங்கியவர்களுக்கு திருப்பி கொடுத்தேன். மீதி பணத்தை வைத்துக் கொண்டு பாலத்துறை அருகே வந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போலீசார் ரவிக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கைதான ரவிக்குமார் சுமார் 10 பேரிடம் கடன் வாங்கியிருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டுமனை மற்றும் வீடு வாங்கி தருகிறேன் என பலரிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். இதற்காக அவர்களுக்கு எழுதியும் கொடுத்திருக்கிறார். அவர் பறித்துச் சென்ற 82 லட்ச ரூபாயில் கடன் வாங்கிய சிலருக்கு கடனை திருப்பி கொடுத்ததாக கூறியிருக்கிறார். அவர் கூறுவது உண்மைதானா என்பதை சரிபார்ப்பதற்காக சிலரிடம் நாங்கள் விசாரித்த போது அவர்களும் அதை ஒப்புக் கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் ரவிக்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் பணத்தை திருப்பி வாங்கியவர்களை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளோம். ரவிக்குமார் அவர்களிடம் கடன் வாங்கினாரா? அதற்கான ஆதாரம் உள்ளதா? என்று அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதற்கிடையில் ரவிக்குமாரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. அப்போது தான் இதில் உண்மையான விவரங்கள் தெரியவரும்
- 2-வது மனைவியுடன் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
- வாலிபர் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து வடவள்ளி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.
கோவை:
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தனது நண்பரை சந்திக்க வடவள்ளியை அடுத்த வேடப்பட்டிக்கு சென்றார்.
அங்கு மின் வாரிய அலுவலகம் முன்பு தனது நண்பருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அந்த வாலிபரிடம் எனது வீட்டில் அழகான இளம்பெண்கள் உள்ளனர்.
உல்லாசம் அனுபவிக்க ஆைசப்பட்டால் அனுபவிக்கலாம் ரூ.550 கொடுத்தால் போதும் என்றார். இதனை கேட்ட அந்த வாலிபர் சரி சென்று கூறி அவருடன் சென்றார்.
அங்கு சென்ற வாலிபர் அந்த வீட்டையும், அங்கு இருந்த இளம்பெண்களையும் பார்த்தார். பின்னர் அந்த வாலிபர் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து வடவள்ளி போலீஸ் நிலையம் சென்றார்.
போலீசாரிடம் வேடப்பட்டியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தார்.
அதில் வீட்டில் கணபதியை சேர்ந்த 36 மற்றும் ஆவராம்பாளையத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 இளம்பெண்களை மீட்டனர்.
விபசார புரோக்கர்களான வடவள்ளியை அடுத்த வேடப்பட்டியை சேர்ந்த தனசேகரன் (52) மற்றும் அவரது 2-வது மனைவி புங்கொடி (47) ஆகியோரை ைகது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்றபோது இந்த விபரீத சம்பவம் நடந்தது.
- ஞயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.
கோவை,
ஒடிசாவை சேர்ந்தவர் கார்த்திக் போய் (வயது 31). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் விடுமுறை நாளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இதேபோன்று, ஞயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது பந்தை அடித்த போது கம்பெனியில் மேற்கூரையில் விழுந்தது. இதனை எடுக்க கார்த்திக் போய் மேலே ஏறினார். அப்போது பந்தை எடுக்க முயன்ற போது மேற்கூரை பெயர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவர்கள், ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
- குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கோவை,
கோவை மதுக்கரை சர்ச் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி– சகாயராணி. இந்த தம்பதிக்கு சவுமியா (13) என்ற மகள் உள்ளார்.
இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டதால், மாணவி உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றார்.இந்த நிலையில் பள்ளியில் இருந்து சவுமியாவின் பெற்றோருக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர்கள், பள்ளியில் இருந்த சவுமியா, மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர்.
மேலும் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மாணவியை பள்ளி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த, சவுமியாவுக்கு மாலை 4 மணிக்கு மேல் இதய துடிப்பு படிப்படியாக குறையத்துவங்கியதாக தெரிகிறது. ஆனால் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்குள் சிறுமி உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்ததும் சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் மாணவியின் உறவினர்களும் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும், பள்ளி ஆசிரியர்கள் அலட்சியத்தாலேயே இறந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கூறியதாவது:-
எனது மகளை இந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை ஆசிரியர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருப்பதாகவே கூறினர். மீண்டும் நீண்ட நேரம் கழித்து அழைத்து தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக கூறினார்கள், குழந்தைக்கு பிரச்சனை என்றால் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிருந்தால் எனது மகளை காப்பாற்றி யிருக்கலாம்.
ஆனால் அவசர சிகிச்சை பிரிவு கூட இல்லாத இந்த மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத குழந்தையை 5 மணி நேரம் வைத்துள்ளனர். மருத்து வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலட்சியத்தால் தான் எங்க ளது குழந்தை உயிரிழந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்தததும் குனியமுத்துர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சிறுமி யின் பெற்றோர் குனிய முத்தூர் போலீசில் ஆஸ்பத்திரி மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியவரும்.
- மாத வாடகை 15 லட்ச ரூபாய், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்வு என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- ராமச்சந்திரன் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று கோவை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்து உள்ளனர்.
கோவை,
கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தலைவர் ராமச்சந்திரன் (வயது72).
இவரிடம் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர்(54) என்பவர் தான் தனது நிறுவன பெயரில் மருத்துவமனை நடத்த விருப்பம் தெரிவித்தார். வயதான காரணத்தினாலும், தொட ர்ந்து மருத்துவமனையை கவனிக்க இயலாததாலும் இதற்கு ராமச்சந்திரன் ஒப்பு கொண்டார்.
மருத்துவமனை கட்டிடத்தை வாடகை அடிப்படையில் உமாசங்கரிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிகிறது. மாத வாடகை 15 லட்ச ரூபாய், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்வு என ஒப்பந்தம் மேற்கொள்ளப்ப ட்டதாகவும் கூறப்படுகிறது. உமாசங்கர் பேசியபடி வாடகை தரவில்லை என தெரிகிறது.
4.95 கோடி ரூபாய் வாடகை பாக்கி தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்சினை நிலவியது. இந்நிலையில் ராமச்சந்திரன் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தனது மருத்துவமனையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் ஒரு கும்பல் புகுந்து அங்கியிருந்தவர்களை தாக்கியதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ பதிவும் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக உமாசங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டில் மருத்துவமனையில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் மருத்துவமனை தலைவர் ராமச்சந்திரன் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் இவருடன் உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று கோவை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்து உள்ளனர். விசாரணைக்கு பிறகு எத்தனை நாட்கள் காவல் கொடுக்கப்படும் என்பது தெரியவரும்.
இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் டாக்டர் உமாசங்கர் விபத்தில்தான் மரணம் அடைந்தாரா? அல்லது மர்மம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என தெரிகிறது.
- 9 மாநிலங்களில் போராட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது.
- என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவை:
கோவையில் என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கிட கோரியும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், பல மாதங்களாக பல்வேறு தொழிற்சங்க அமைப்பினர், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசிடமும் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
எனினும் என்.டி.சி ஆலைகள் முழுமையாக இயக்கப்படாத நிலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று 9 மாநிலங்களில் போராட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் 9 தொழிற்சங்கங்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். கோவை சிவானந்தா காலனி பகுதியில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதில் 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.
இனிமேலும் என்.டி.சி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
- தனியார் பள்ளிகளில் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
- வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
கோவை:
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள் அதாவது பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பள்ளி வாகனங்கள் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்யப்பட்ட உள்ளன.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை அழைத்து செல்லும் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?,
மேலும் வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். வாகன டிரைவர்களின் லைசென்ஸ், வயது விவரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? எனவும் பரிசோதனை செய்யப்படும்.
இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வாகன ஆய்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
- கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.
- தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கோவை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.
தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.
அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதைய டுத்து, கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் தினமும் 300 முதல் 400 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு வந்தது. ஆனால், தற்போது 600 முதல் 700 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:- கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது பள்ளிகளும் திறக்கப்ப ட்டுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோத னைகளை அதிகரிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோத னையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தற்போது தினமும் 600 முதல் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இவர்களின் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.பொது இடங்கள் மற்றும் கூட்ட மாக உள்ள இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப்பிடித் தல் போன்ற தடுப்பு நடவடிக்வேகைகளை மேற்ெகாள்ள வேண்டும்.
குறிப்பாக, வழிபாட்டு தலங்கள், வணிக வளா கங்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுகள், ஆஸ்பத்தி ரிகளுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மோட்டார் சைக்கிளில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
- கலையரசனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கோவை:
சேலத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 37). இவர் கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கலையரசனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீரகேரளத்தை சேர்ந்தவர் சந்ேதாஷ்குமார் (27). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் செட்டிப்பாளையம் - வட சித்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சந்ேதாஷ்குமார் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (42). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் செல்வபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் பெரியக்கடை வீதி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்துஉயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே விநாயகாபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இளம்பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவரின் பழக்கம் கிடைத்தது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வழக்கம் போல இளம்பெண் வேலைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் உணவு சாப்பிடுவதற்காக சென்ற அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வேலைக்கு வராததால் மேலாளர் இது குறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து இளம்பெண்ணின் கணவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கணவர் மற்றும் மகளை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரது வலது கால் செயல் இழந்தது.
கோவை:
கோவை சூலூர் பீடம்பள்ளி சூரியநகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை
இந்த நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரது வலது கால் செயல் இழந்தது. இதனால் அவருக்கு பல இடங்களில் வரன் பார்த்தும் பெண் அமையவில்லை என தெரிகிறது.
இதனை நினைத்து அவர் சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரை சேர்ந்தவர் சிட்ராஜன் குமார் (22). இவர் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கிதொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல அவர் வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த போது எந்திரத்தில் இருந்து கல் கழன்று சிட்ராஜன் குமாரின் தலை மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.
- வாகனங்களின் உரிமையாளர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.
கோவை:
மதுரையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செ்யது வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு மதுரை சென்றார். அதனால் அவர் தனது மொபட்டை உறவினரிடம் கொடுத்து இருந்தார். அவர் அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த மொபட் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் கோவை வந்து மொபட் திருட்டு போனது குறித்து வெரைட்டிஹால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன மொபட்டை தேடி வருகின்றனர்.
இதே போன்று கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, செல்வபுரம், போத்தனூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு போனது.
இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன வாகனங்களை திருடி சென்றவர்கள் யார் ? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கோவை மாநகரில் நேற்று மட்டும் ஒரே நாளில் 12 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.