search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
    X

    கோவையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

    • தனியார் பள்ளிகளில் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
    • வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள் அதாவது பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பள்ளி வாகனங்கள் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்யப்பட்ட உள்ளன.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை அழைத்து செல்லும் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?,

    மேலும் வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். வாகன டிரைவர்களின் லைசென்ஸ், வயது விவரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? எனவும் பரிசோதனை செய்யப்படும்.

    இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வாகன ஆய்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    Next Story
    ×