என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேசியா"

    • லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
    • அரை இறுதி 16-ந் தேதியும், இறுதிப் போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    ஹுலுன்புயர்:

    8-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன் பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி 16-ந் தேதியும், இறுதிப் போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் வீழ்த்தியது.இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இன்று மலேசியா வுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்திலும் வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    மலேசியா முதல் ஆட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. அந்த அணி இந்தியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான்-ஜப்பான், கொரியா-சீனா அணிகள் மோதுகின்றன.

    • மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
    • பைக்கை தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பைக் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து வருகிறது.

    செல்லக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பெற்றோரும் தங்கள் மகன்கள் கேட்கும் பைக்கை வாங்கி கொடுக்கிறார்கள்.

    ஆனால் மகன்களோ அந்த பைக்கில் விபரீத சாகசங்கள் செய்து பிரச்சினையில் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.

    மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த ஷா ஆலம் என்பவர் தனது மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது மகனோ அந்த பைக் மூலம் பந்தய போட்டிகளில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டதோடு, வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார்.

    இதனால் மகனின் பாதுகாப்பு பற்றி கவலையடைந்த அவர், மகனுக்கு அறிவுரை கூறி திருத்த முயன்றார். ஆனால் அவரது மகன் தந்தையின் அறிவுரைகளை கண்டுகொள்ளாததால் மகனுக்கு பாடம் புகட்ட ஷா ஆலம் முடிவு செய்தார்.

    அதன்படி ஷா ஆலம் தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை அவரே தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    அந்த வீடியோ வைரலானதோடு ஷா ஆலமின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • ‘ஏ’ பிரிவில் இந்தியா முதலிடமும், ஜப்பான் 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
    • ‘பி’ பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் கைப்பற்றி அரைஇறுதியை எட்டின.

    மஸ்கட்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா (12 புள்ளி) முதலிடமும், ஜப்பான் (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்கொரியா (6 புள்ளி), தாய்லாந்து (3 புள்ளி), சீன தைபே (0) முறையே 3 முதல் 5 இடங்கள் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.

    'பி' பிரிவில் பாகிஸ்தான் (12 புள்ளி) முதலிடத்தையும், மலேசியா (7 புள்ளி) 2-வது இடத்தையும் கைப்பற்றி அரைஇறுதியை எட்டின. வங்காளதேசம் (5 புள்ளி) 3-வது இடமும், சீனா (4 புள்ளி) 4-வது இடமும், ஓமன் (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை கோட்டை விட்டன.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) அரைஇறுதி ஆட்டம் அரங்கேறுகிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவுடன் மல்லுக்கட்டுகிறது.

    லீககில் தங்களது 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற (தாய்லாந்து, ஜப்பான், சீன தைபே, தென்கொரியா) இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டுள்ள மலேசிய அணி இறுதிப்போட்டியை எட்ட கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. முன்னதாக நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் (மாலை 4.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • 491 நிவாரண முகாம்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிக அளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பல்வேறு இடங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கனமழையால் மலேசியாவின் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட்(224 மில்லியன் டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பு படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதே போல் தெற்கு தாய்லாந்திலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட 491 நிவாரண முகாம்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தற்போது மழைப்பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது.
    • அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.

    ஆலந்தூர்:

    மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று காலை பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகளாக, மலேசியா சென்று விட்டு வந்தது தெரிந்தது. அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை சோதனை செய்தபோது அதில் அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமானவை உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    அவர்கள் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மொத்தம் 5,400 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள் தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

    பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அதற்கான செலவுகளை கடத்தலில் ஈடுபட்ட 2 பயணிகளிடமும் வசூலிக்கவும் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற பயணிகள் விமானத்தில், 5,400 நட்சத்திர ஆமைகளும் மலேசிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆமை கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் ஆகாஷ் , தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை.
    • 148 பயணிகளும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.

    இதில் செலும் 148 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

    இந்த நிலையில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நீண்ட நேரமாக முயற்சித்தும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

    விமானத்தில் பயணிக்க வந்திருந்த 148 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று இரவு, மலேசியாவுக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பதக்கங்களோடு திரும்பியுள்ள நம் வீரர்-வீராங்கனையரின் திறமையைப் பாராட்டுகிறோம்.
    • 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மலேசியாவில் நடைபெற்ற 10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோருக்கான போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு விளையாட்டுக்களில் 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

    இப்போட்டியில், இந்தியா ஒட்டுமொத்தமாக 55 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், அதில் 24 பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையர் குவித்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தோம். பதக்கங்களை வென்ற தம்பிகள் மணிகண்டன், ராக்கப்பன், வினித், சாந்தனு, கார்த்திக், முகம்மது யாசின், சுதன் மற்றும் தங்கைகள் பிரியங்கா, சுபஸ்ரீ, சமீஹா பர்வீன், ஹரினி, ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு வாழ்த்துகள்.

    நம் வீரர்களின் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமும், - 'எலைட்' திட்டத்தின் வழியாக தங்கை ஜெர்லின் அனிகாவுக்கும் நிதியுதவி அளித்திருந்தோம். தற்போது பதக்கங்களோடு திரும்பியுள்ள நம் வீரர்-வீராங்கனையரின் திறமையைப் பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மலேசியாவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.
    • வரும் காலத்தில் மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இலங்கையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஆர்வமிக்கவர்.

    சிவகங்கையில் உள்ள இவரது தோப்பில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் காளைகளை பங்கேற்க செய்து வருகிறார். காளைகளுக்காக தனி கேரவன் வசதியும் செய்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவரது காளைகள் களம் கண்டு வெற்றி வாகை சூடியது.


    ஜல்லிக்கட்டை பார்வையிட்ட செந்தில் தொண்டமான் கூறுகையில், தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டில் இருந்து அதிகளவில் வருகை தருகிறார்கள். மலேசியாவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். வரும் காலத்தில் மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

    • மலேசியாவின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
    • 5000-த்திற்கும் மேற்பட்டார் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்த கனமழையினால் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 5000-த்திற்கும் மேற்பட்டார் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவின் சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, நாளை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    லீக் சுற்றில் ஜப்பானிடம் தோற்ற இந்திய அணி, நேற்று நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
     
    நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை வென்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவானது. இந்திய வீரர்கள் விஷ்ணுகாந்த் சிங், எஸ்.வி.சுனில் மற்றும் சஞ்சீப் எக்செஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
    ×