என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 116212
நீங்கள் தேடியது "சாமி"
காளிப்பட்டி ஸ்ரீ வீரகாரன் புடவைக்காரி அம்மன் கோவிலில் மறுபூஜை விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆட்டையாம்பட்டி:
காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் அருகில் வீரகாரன் சுவாமியும், காளிப்பட்டி சந்தை எதிரே ஸ்ரீ புடவைக்காரி அம்மன் சாமியும் உள்ளது.
இக்கோவில்களில் தெவ மறுபூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், குலதெய்வ கோவில் பங்காளிகள் கிடா, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக ஸ்ரீ வீர காரன் சுவாமிக்கும் ஸ்ரீ புடவைக்காரி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு மலர்அலங்காரம் நடைபெற்றது.
இதில் முத்தனம் பாளையம், தப்பகுட்டை, ஆட்டையாம்பட்டி, திருமலகிரி செம்மன் திட்டு, இளம்பிள்ளை சிவதாபுரம், கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி, அக்கர பாளையம், வீராணம், வேடப்பட்டி, கே ஆர் தோப்பூர், சேவாம்பாளையம், உடையாப்பட்டி, மெய்யனூர், அழகாபுரம், பொண்பரப்பிபட்டி உள்பட குலதெய்வ கோவிலுக்கு பாத்தியப்பட்டகோவிலுக்கு பாத்தியப்பட்ட வன்னியர் குல மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் கோயில் பங்காளிகள், பூசாரிகள் ஆகியோர் செய்தனர்.
பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், அரசாயி அம்மன், மாசாணி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லை யம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு வைகாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உலக மக்கள் நலம் வேண்டி அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக ஏகாம்பரநாதருக்கு தொடர்ச்சியாக நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனுடன் சிறப்பு அலங்காரத்துடன், நந்திபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X