என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை"

    • மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் உள்ள காடுபட்டி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை புதூர் மின்பிரிவு மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தின் தொழிற்பேட்டை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மூன்றுமாவடியின் ஒரு பகுதி, சர்ச் ரோடு, மாட்டு ஆஸ்பத்திரி, லோட்டஸ்ட் அபார்ட்மெண்ட், ஒய்.டபிள் யூ.சி. ஆஸ்டல், சம்பகுளம் 1 முதல் 5 தெருக்கள், சிவானந்தா தெரு, விவேகானந்தா தெரு, மீனாட்சி அபார்்ட்மெண்ட், கமிசனர் அலுவலகம், இ.பி. காலனி, 120 அடி ரோடு, பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை வண்டியூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வண்டியூர், பி.கே.எம்.நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர்தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்ளி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • மதுரையில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்தது.
    • பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணிய புரம், 3-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    பேக்கரி ஊழியர்கள் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதேபோன்று கோமதி புரம், பாரதி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் குமார் என்பவர் அங்கு வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார். மதிய உணவு விருந்துக்கு, அப்பளம் பொறித்து கொண்டிருந்தனர். சிலிண்டரின் ரெகு லேட்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.

    மதுரையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை, விருதுநகர், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சிவக்குமார் மதுரை டி.கல்லுப்பட்டி மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் உதவி இயக்குநர் மற்றும் விரிவுரை யாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் விருதுநகரில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் சாந்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குநராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் ராஜ்மோகன் மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப் பட்டுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலு வலராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் இளங்கோவன் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மதுரையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தேர்தலில் தொடர் தோல்விகளை சந்திந்து வரும் எடப்பாடி பழனிச் சாமி பதவி விலக வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை பழங்கா நத்தம் நட ராஜ் தியேட்டர் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.பி.யும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், வழி காட்டுக் குழு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகி யோர் தலைமை தாங்கினர்.

    அமைப்பு செயலாளர் மார்க்கெட் பி.எஸ்.கண்ணன், அம்மா பேரவை இணைச்செயலாளர் சோலை குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் மாரிச்சாமி, அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாநகர் மாவட்ட செயலா ளர் சரவணன், மேற்கு 4-ம் பகுதி செயலாளர் கணே சன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை

    காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை காமராஜர் சாலை காந்தி பொட்டலில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக போராட்டம் இன்று காலை தொடங்கியது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, வர்த்தக அணி மாநில செயலாளர் நல்லமணி, மகளிரணி ஷா நவாஸ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு நியாயம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    • தந்தை- மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டம் உத்தப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கார்மேகம் குடும்பத்திற்கும் பண விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மதியம் முருகன், மகள் நாகவல்லி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அங்கு வந்த கார்மேகம், மகன்கள் ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனைவி சுந்தரம்மாள், மகள் அபிராமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கும்பல் முருகனையும், அவரது மகள் நாகவல்லியையும் அரிவாளால் வெட்டியது.

    காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்மேகம், ராமகிருஷ்ணன், ஜெயராமன், சுந்தரம்மாள், அபிராமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சுந்தராம்பாள் கொடுத்த புகாரின்பேரில் முருகன், மாரியப்பன், முருகன் மனைவி செல்வி, மாரியப்பன் மனைவி சங்கீதா, நாகவல்லி, லட்சுமி, ஈசுவரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மதுரையில் இ-சேவை மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    மதுரை

    மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்டோன்மெண்ட் போர்டு ஆகியவை மூலம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில் ஏற்கனவே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மையத்துக்கு மேஜை, கணினி, பயனர் எண், கடவுச்சொல் ஆகியவை அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து சேவைகளும் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    மதுரை அரசரடி மற்றும் பசுமலை துணை மின் நிலையத்தில் உள்ள தொழிற்பேட்டை, பெருங்குடி உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (8-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    சொக்கலிங்க நகர் 1 முதல் 9-வது தெருக்கள், டி.எஸ்.பி. நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல், பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, ஜானகி நாராயணன் தெரு, அருணாசலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வாழ்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது தெருக்கள், ராமையா தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு, ஜவகர் மெயின் ரோடு 1 முதல் 5 தெருக்கள், கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியர் தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெருக்கள், பை-பாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு 1 மற்றும் 2-வது தெருக்கள்.

    பெருங்குடி ஆர்.எம்.எஸ் காலனி, புதுக்குளம் 2 பிட், ஜென்னட் நகர், அவனியாபுரம் மெயின் ரோடு, முத்துப்பட்டி, பெருமாள் நகர், கோல்டன் சிட்டி, இந்தியன் நகர், சிவகாமியம்மன் நகர், பைக்காரா, அழகுசுந்தரம் நகர், பாலநாகம்மாள் கோவில் தெரு, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    • அந்த வழியாக வந்த ஆட்டோ நடராஜன் மீது மோதியது.

    மதுரை

    மதுரை விளாச்சேரி ஜோசப்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது52). இவர் இருசக்கர வாகனத்தில் ஹார்விபட்டி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ நடராஜன் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கார்மோதி வாலிபர் பலி

    ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் வாலாந்தரவையை சேர்ந்தவர் ஆசாத் கோஸ் (வயது38). இவர் இருசக்கர வாகனத்தில் மேலூர் மெயின்ரோடு உத்தங்குடி சென்றார். அப்போது கூடலூர் கவர்னர் தெருவை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவர் ஓட்டி வந்த கார் ஆசாத் கோஸ் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி ஆசாத் கோசின் தாய் முனி யம்மாள் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை நாய்கள் கடித்து குதறியது. 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
    • உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள் முகாமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. நாய் பீதியால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றனர். நாய்கடி பாதிப்பு என்பது கொடுமையானது. நாய்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படு பவர்களின் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இறப்பார்கள். எனவே மதுரை நகரில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    முன்பு நாய்களுக்கு கருத்தடை செய்ய சிறப்பு வாகனங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது வெகு சொற்பமாக நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்படுகின்றன. இதனால் நகரில் நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றவர்கள் விபரம் குறித்து தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமையும் சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கான பதிலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    இதில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை நாய் கடித்துள்ளது தெரியவந்தது. இதேபோல் கடந்த 2021 -ம் ஆண்டு நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவரும்,

    2022 -ம் ஆண்டு 2 பேரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியில் மாதத்திற்கு 200 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், நாய் கடியால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகன் ராஜபிரபு (வயது 30). இவர் மது போதைக்கு அடிமையாகி தினமும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மகன் ஏற்படுத்தி வந்த பிரச்சினைகளால் பெருமாள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். "இப்படி ஒரு மகனை உயிரோடு வைத்திருப்பதைவிட கொன்று விடுவது நல்லது" என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்த மகனை தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்து சென்று அவரது கை, கால்களை கயிறால் கட்டி பெற்ற மகன் என்றும் பாராமல் கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி ராஜபிரபு பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுபற்றி மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த ராஜபிரபு உடலை மீட்டனர்.

    மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலும் பலியான ராஜபிரபு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொட்டக்குடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா இன்று பொறுப்பேற்றார்.
    • தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர்.

    மதுரை

    தமிழக அரசு அண்மை யில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட கலெக்ட ராக இருந்த அனீஷ் சேகர் இடமாற்றம் செய்யப்பட்டு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

    வணிக வரித்துறை இணை கமிஷனராக இருந்த சங்கீதா மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப் பட்டார். அவர் இன்று மதுரை கலெக்டர் அலுவல கத்தில் கோப்பில் கையெ ழுத்திட்டு கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண் டார்.

    தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம் பட்டியை சேர்ந்த சங்கீதா, தமிழக அரசின் குரூப் 1 அலுவலராக பணி நியமனம் பெற்று, 2016 -ம் ஆண்டு பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றார். அதன்பின் தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.

    மதுரை மாவட்ட கலெக்டராக சந்திரலேகா 1984-85-ம் ஆண்டிலும், கிரிஜா வைத்தியநாதன் 1991-92-ம் ஆண்டிலும் பணிபுரிந்துள்ளனர். தற்போது மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.

    ×