என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 195034"

    தாரமங்கலத்தில் நகராட்சி தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகரத்தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு கூட்டமும், அதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகரை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது,  தூய்மை பணிக்காக நேரம் ஒதுக்குவது, பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது, குப்பையை வீட்டிலேயே தரம் பிரித்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. 

    பின்னர் பதாகை ஏந்தி விழிப்புணர் ஊர்வலம் நடத்தப்பட்டு பேரூந்துநிலையம் மற்றும் அதனை சுற்றிய பொது இடங்களை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர் .இந்தநிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    சுற்றுப்புற தூய்மையை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சித்தார்கோட்டை கிராமத்தில் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை ஆகியவை தொடர்பான சிறப்பு கிராம சபா கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசிய தாவது:-

    கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்கான நடவடிக் கைகள், படித்த வேலை வாய்ப்பற்ற 18 முதல் 35 வயது வரையிலான நபர்களுக்கு அவர்களது கல்வித் தகுதி மற்றும் ஆர்வத்திற்கேற்ப பயிற்சி வழங்கி சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் 2019-ம்ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பிற்கு கூடுதல் வலுசேர்த்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.7.2018 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைவரும் சுற்றுப்புறத்தூய்மைக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதை தொடர்ந்து, சித்தார் கோட்டை கிராமத்தில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டிற்கான கட்டுமானப் பணிகளையும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் சுற்றுப்புறத்தினை பாதுகாத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும் மரக்கன்றுகள் நடவு திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து முடிவீரன்பட்டினம் கிராமத்தில் பொதுமக்கள் உபயோகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பயன்பாடுகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள கழிப்பறைகள் பயன்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமர் ஜாமியா, சேவுகபெருமாள், ராமநாதபுரம் வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×