என் மலர்
நீங்கள் தேடியது "நக்சலைட்கள்"
- சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
- நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது
இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
மத்திய இந்தியாவில் உள்ள அதிகளவு வனப்பிரதேசங்களை கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.
நாளை அங்கு 20 இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 இடங்களுக்கு வரும் 17-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அங்கு அமலில் உள்ளது.
அம்மாநில பஸ்டார் (Bastar) பகுதியில் 12 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் பெருமளவு உள்ள பகுதி என்பதால் சுமார் 60 ஆயிரம் சீருடை பணியாளர்களை காவலுக்கு தேர்தல் ஆணையம் பணியில் அமர்த்தி உள்ளது. இவர்களில் 40 ஆயிரம் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் 20 ஆயிரம் மாநில காவல்துறையினர் அடங்குவர். இப்பணியில் பெண் கமாண்டோ படையினரும், நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு வீரர்களும் அடங்குவர்.
மொத்தம் 5304 வாக்குச்சாவடிகள் நாளைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக 149 வாக்குச்சாவடிகள் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.
சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.
- நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று சி-60 கமாண்டோக்களுடன் நடந்த என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெரிமிலி தாலம் என்ற பெயரில் நக்சலைட்டுகள் ஆயும் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கட்டரங்கட்டா கிராமத்தின் அருகே நக்சலைட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 கமாண்டோக்களின் இரண்டு பிரிவுகள் உடனடியாக அப்பகுதியில் தேடுதலுக்காக அனுப்பப்பட்டன.
பிரவுகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு சி -60 வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த இடத்தில் இருந்து ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
கொல்லப்பட்ட நக்சல்களில் ஒருவரான பெரிமிலி தாலத்தின் பிரதேசக் குழு உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர் கம்மாண்டர் வாசு கோர்ச்சா ஆவர்.
அந்த இடத்தில் ஏகே 47 ரக துப்பாக்கி, கார்பைன், இன்சாஸ் துப்பாக்கி, நக்சல் புத்தகம் மற்றும் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
- இன்று காலை முதல் நடைபெற்ற சண்டையில் நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
- கடந்த 12-ந்தேதி 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு இந்த சண்டை தொடங்கியது. இன்று மாலை வரை தொடர்ந்து சண்டையில் நக்சலைட்டை சேர்ந்த 12 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ரிசர்வ் படை, சிஆர்பிஎஃப்-ன் ஐந்து பட்டாலியன்கள், கோப்ரா, சிஆர்பிஎஃப்-ன் 229-வது பட்டாலியன் ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் இணைந்து நக்சலைட்டுகள் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த மாதத்தில் பிஜப்பூரில் நடைபெற்ற 2-வது என்கவுண்டர் இதுவாகும். கடந்த 12-ந்தேதி நடைபெற்ற சண்டையில் ஐந்து நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் பெண்கள் ஆவார்கள்.
கடந்த 6-ந்தேதி நக்சலைட்டுகள் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டாபாட் மற்றும் டோக்கான்பல்லி இடையிலான காட்டுப்பகுதியில் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் நேற்றிரவில் இருந்து நக்சல் ஒழிப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காட்டுக்குள் நக்சலைட்கள் ரோந்துப் படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த நக்சலைட்கள் தப்பியோடி விட்டனர்.