என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 221508"

    காளிப்பட்டி ஸ்ரீ வீரகாரன் புடவைக்காரி அம்மன் கோவிலில் மறுபூஜை விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    ஆட்டையாம்பட்டி:

    காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் அருகில் வீரகாரன் சுவாமியும், காளிப்பட்டி சந்தை எதிரே ஸ்ரீ புடவைக்காரி அம்மன் சாமியும் உள்ளது. 

    இக்கோவில்களில் தெவ மறுபூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், குலதெய்வ கோவில் பங்காளிகள் கிடா, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக ஸ்ரீ வீர காரன் சுவாமிக்கும் ஸ்ரீ புடவைக்காரி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு மலர்அலங்காரம் நடைபெற்றது. 

    இதில் முத்தனம் பாளையம், தப்பகுட்டை, ஆட்டையாம்பட்டி, திருமலகிரி செம்மன் திட்டு, இளம்பிள்ளை சிவதாபுரம், கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி, அக்கர பாளையம், வீராணம், வேடப்பட்டி, கே ஆர் தோப்பூர், சேவாம்பாளையம், உடையாப்பட்டி, மெய்யனூர், அழகாபுரம், பொண்பரப்பிபட்டி உள்பட குலதெய்வ கோவிலுக்கு பாத்தியப்பட்டகோவிலுக்கு பாத்தியப்பட்ட வன்னியர் குல மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் கோயில் பங்காளிகள், பூசாரிகள் ஆகியோர்  செய்தனர்.
    அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    குமாரபாளையம்: 

    குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு  விழா முதல்வர் ஜான்  பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.  விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் ரவி வாசித்தார். 

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா, குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.  

    ஆடவர் மற்றும் மகளிருக்கான  சதுரங்கம், கேரம்  போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், கபாடி, தடகளம்  உள்ளிட்ட பல போட்டிகளும்  நடைபெற்றன. 

    சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட டி.எஸ்.பி. சுபாஷ் சந்திரபோஸ் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
    பணி நிறைவு விழா நடைபெற்றது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் பணி நிறைவு விழா நடைபெற்றது.

    துணைப்பதிவாளர்கள் டேனயல் ராஜா வாட்சன், சுருளியப்பன், ஜெயமணி, மணிமேகலை மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் தமிழ்வேல்முருகன் ஆகியோருக்கு பரிசு கேடயங்கள் வழங்கி பாராட்டப்பட்டது.

    விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் (மேலாண்மை) ராஜலட்சுமி, துணைப் பதிவாளர்கள் முருகேசன், வெங்கடேசன் மற்றும் அமுதா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    போலீசார் தேடி வரும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில் எஸ்.வி.சேகர் பங்கேற்றுள்ளார்.
    சென்னை:

    பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்தநிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவர் 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். எனவே போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

    இதையடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்தனர். அவர் போலீசார் பிடியில் சிக்காமல் இருந்து வருகிறார். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    இந்தநிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு இருக்கிறார். இந்த விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருப்பது மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    சேலத்தில் 100 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாய்க்கு பொதுமக்கள் விழா எடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பலபட்டறை மாரியம்மன் கோவில் அருகில் சவுண்டம்மன் கோவில் தெரு உள்ளது.

    இந்த தெருவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1918-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி குருசாமி செட்டியார் என்பவர் இரட்டை குடிநீர் குழாய் அமைத்து அதனை பொது மக்களுக்கு தானமாக வழங்கினார்.

    100 ஆண்டுகள் ஆகியும் அந்த குழாயில் தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். அந்த குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ? அது போலவே தற்போது உறுதியாக காட்சி அளிக்கிறது.

    இதனை நினைவு கூறும் வகையிலும், அந்த குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையிலும் சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் அந்த குழாய் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து வெள்ளை வர்ணம் அடித்து அழகு படுத்தப்பட்டு இன்று விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி இன்று காலை குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், குடிநீர் அவசியத்தை வலியுறுத்தியும் தங்களது கருத்துகளை கூறினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் அந்த குடிநீர் குழாயை தானமாக வழங்கியவர்களின் வாரிசுகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குடிநீர் குழாய்க்கு விழா எடுத்தது சேலத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்து உள்ளதாக அந்த பகுதியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். #Tamilnews
    ×