என் மலர்
நீங்கள் தேடியது "விலை"
- தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
- பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஅள்ளி, தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த மார்க்கெட்டுக்கு தக்காளிகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்த தக்காளிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி சேலம், திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்தநிலையில் தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரை விற்பனையானது. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிய தொடங்கியது.
இதனிடையே இன்று காலை பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கு விற்பனையானது.
சில்லறை விற்பனை மற்றும் தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்தது.
- ஒரு கிராம் தங்கம் ரூ.4,901-க்கும், ஒரு சவரன் ரூ.39,208-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 1 பவுன் தங்கம் ரூ.39,136-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.39,208-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4,892-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.4,901-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.67.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67,700-க்கு விற்பனையாகிறது.
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 அதிகரித்து விற்பனை.
- ஒரு கிராம் தங்கம் ரூ.4,940-க்கும், ஒரு சவரன் ரூ.39,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரூ.38 ஆயிரத்துக்கும் கீழே விற்ற தங்கம் கடந்த 11-ந்தேதி ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று 1 பவுன் தங்கம் ரூ.39,208-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.39,520-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4901-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4940-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,680-க்கு விற்பனையாகிறது.
- தங்கம் விலை தொடர்ந்து கூடி வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,940 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.4,960 ஆக உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து உள்ளது.
நேற்று தங்கம் பவுன் ரூ.39,520-க்கு விற்பனை ஆனது. இன்று இது பவுன் ரூ.160 அதிகரித்து ரூ.39,680 ஆக விற்பனை ஆகிறது. ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது.
கிராம் ரூ.68.50-ல் இருந்து ரூ.67.50 ஆகவும் கிலோ ரூ.68.500-ல் இருந்து ரூ.67,500 ஆகவும் குறைந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து கூடி வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200 ஆக உள்ளது.
சென்னை:
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39 ஆயிரத்து 600-க்கும் விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 950 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கு விற்கிறது.
- நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். இதனால் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 14-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் படிப்படியாக ரூ.10 உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் கறிக்கோழி உற்பத்தியை 20% குறைத்துள்ளது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
முட்டை கொள்முதல் விலை 535 காசுகள் ஆகும். முட்டை கோழி விலை கிலோ ரூ.102 ஆகவும் நீடிக்கிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை கிராம் ரூ 67.20-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ. 67,200-ல் இருந்து ரூ. 67 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. நேற்று கிராம் ரூ 4,950-க்கும் பவுன் ரூ 39,600-க்கும் விற்பனை ஆனது. இன்று இது கிராம் ரூ. 4,951 ஆகவும், பவுன் ரூ. 39,608 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராம் ஒரு ரூபாயும், பவுன் 8 ரூபாயும் அதிகரித்து உள்ளது.
ஆனால் வெள்ளி விலை குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 67.20-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ. 67,200-ல் இருந்து ரூ. 67 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது. கிராம் 20 காசுகளும் கிலோ ரூ.200-ம் குறைந்து இருக்கிறது.
- கடந்த வாரம் ரூபாய் 20-க்கும் விற்கப்பட்ட தக்காளி நேற்று 16 கிலோ தக்காளி பெட்டி 60 ரூபாய்க்கு விற்பனையானது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கும் குறைவாக விற்கப்பட்டது.
குனியமுத்தூர்:
மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இந்த மார்க்கெட்டிற்கு நாச்சிபாளையத்தை சுற்றியுள்ள வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநாயக்கனூர், திருமலையம் பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசிபாளையம், பாலத்துறை, மதுக்கரை போன்ற பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளி அதிகளவில் வருகிறது.
கடந்த சில தினங்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடுமையாக குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனைஅடைந்தனர்.
நேற்றும் விவசாயிகள் வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு தக்காளிகளை கொண்டு வந்தனர். கடந்த வாரம் ரூபாய் 20-க்கும் விற்கப்பட்ட தக்காளி நேற்று 16 கிலோ தக்காளி பெட்டி 60 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கும் குறைவாக விற்கப்பட்டது.
விலை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் வேறு வழியின்றி தக்காளியை சாலையோரம் வீசி சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இவ்வளவு குறைவான விலைக்கு தக்காளி விற்கும் போது, லோடுமேன் இறக்கு கூலி மற்றும் கமிஷன் ஆகியவை கொடுக்க முடியவில்லை. இந்த காரணத்தால் வேறு வழியின்றி கீழே கொட்டி விட்டு செல்கிறோம் என்றனர்.
நாச்சிபாளையம் பகுதியில் தக்காளிகள் பெட்டி பெட்டியாக கீழே கொட்டப்பட்டு செல்வதால், விவசாயிகள் மட்டுமன்றி அப்பகுதி மக்களும் கவலையில் உள்ளனர்.
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.
- ஒரு கிராம் தங்கம் ரூ.4931-க்கும், ஒரு சவரன் ரூ.39,448-க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 16-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.39,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் நேற்று 1 பவுன் ரூ.39,168-க்கு விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. இன்று 1 பவுன் தங்கம் ரூ.39,448-க்கு விற்கப்படுகிறது. தங்கம் 1 கிராம் நேற்று ரூ.4896-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரு.4931-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.68.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.68,200-க்கு விற்பனையாகிறது.
- வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
- ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது.
இதனால் 535 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-575, ஹைதராபாத்-530, விஜயவாடா-529, பார்வாலா-538, மும்பை-590, மைசூர்-550, பெங்களூரு-550, கொல்கத்தா-593, டெல்லி-560 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி உற்பத்தி விலை நிர்ணயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழியில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஒரு கிலோ ரூ.98 என நிர்ணயம் செய்யப்பட்டது.
- முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
- பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் தொடர்ந்து விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதை அடுத்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.39 ஆயிரத்து 400-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 925 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது.