search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதக்கங்கள்"

    • சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
    • சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

    பிறகு, நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த நிகழ்ச்சி கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

    நானே பதக்கம் வாங்கியது போன்று மகிழ்ச்சியாக உள்ளது. பதக்கம் வென்ற காவலர்களுக்கு வாழ்த்துகள்.

    பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தலை வணங்கத்தக்கது. அமைதியான மாநிலத்தில் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும்.

    இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் பெருமைமிகு மாநிலமாக திகழ, காவல்துறையின் பங்கு முக்கியமானது.

    சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.

    காவல்துறையினரின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

    காவல் துறையை மேலும் நவீனப்படுத்தி வருகிறோம்.

    காவல்துறையை நவீனமயமாக்கியவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. காவல் துறையில் மகளிருக்கு வாயப்பு அளித்தது கருணாநிதி தான்.

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    • விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சென்னை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இங்கு, காவல்துறையினர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, காவல்துறையினருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.

    அதன்படி, காவல், ஊழல் தடுப்பு, தீயணைப்பு, சிறை, சீர்திருத்த பணி, ஊர்க்காவல், தடய அறிவியல் துறையினருக்கு பதங்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    சோமரசம்பேட்டை காவல் நிலைய காவலர் பி.செந்தில் குமாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    • தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருமங்கலம் மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • கொடைக்கானலில் 6-வது தேசிய அளவிலான ஓப்பன்கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

    திருமங்கலம்

    கொடைக்கானலில் 6-வது தேசிய அளவிலான ஓப்பன்கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் திருமங்கலம் உலக ஷோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் 22 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கட்டா மற்றும் குமிட்டே பிரிவுகளில் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். நந்தினி, டயானா, மனீஷா, கிருஷ்ணகிஷோர், கோகுல்பதி, கருத்திக் ஆகியோர் தங்கப்பதக்கமும், தாரணி, சஞ்சுஷிரி, தரண்கார்த்திக், பாலபிரணவ், தங்கேஸ்வரன், சூரியபிரகாஷ் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கராத்தே சம்மேளத்தின் தமிழ்நாடு பிரிவு மாநில பிரதிநிதி பால்பாண்டி, கராத்தே மாஸ்டர்கள் நவாஷ், சுபாஷ், விக்னேஷன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டினர்.

    ×