search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னர்"

    • வேலன்சியா, கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவர்களின் வருகையை முன்னிட்டு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டன.

    ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது.

    வேலன்சியா, கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீருடன் சேறும் வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. வாலென்சியா பகுதியில் மட்டும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. பலர் மாயமாகி உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. ஆனாலும் மீட்புப் பணி சரியாக நடக்கவில்லை என்று மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

    இந்த சூழலில் வாலென்சியாவில் பைபோர்ட்டோ நகரில்  வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் அவரது மனைவி, ராணி லெட்டிஸியா வருகை தந்தனர். அவர்களின் வருகையை முன்னிட்டு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டன.

    பாதுகாலவர்கள் புடை சூழ ராணியுடன் மன்னர் ஃபிலிப் வருவதை பார்த்த மக்கள் ஆத்திரத்தில் அவர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களை திரும்பி போகுமாறு முழக்கமிட்டபடியே சாலையில் கிடந்த சேற்றை அள்ளி மன்னர் மீதும் ராணி மீதும் வீசினர். இதனால் மன்னரின் முகம் மற்றும் ஆடைகள் சேறானது. உடன் வந்த ஸ்பெயின் பிரதமரும் இதில் சிக்கிக்கொண்டார்.

    உடன் இருந்த பாதுகாவலர்கள் உடனே மன்னரை சுற்றி அரணாக நின்றனர். அவர்களை விலக்கி ஆத்திரமுற்றிருந்த மக்களை சமாதானப்படுத்தும் வகையில் மன்னர் பேசினார். ஆனால் கோபத்தில் இருந்த மக்கள் அவரை கடுமையாக திட்டித் தீர்த்தனர். நிலைமை சரியில்லாததால் ராணியுடன் அந்த இடத்தில் இருந்து மன்னர் அகன்றார். மன்னர் மீதே சேறு வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மரணம் அடைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சேதுபதி மன்னா் பரம்பரை வாரிசான குமரன் சேதுபதி, இளைய மன்னா் என அழைக்கப்பட்டு வந்தாா். பல மாதங்களாக உடல் நலப்பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவா் நேற்று காலையில் வீட்டிலிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாா்.

    அவருக்கு மனைவிலக்குமி குமரன் சேதுபதி, மகன் முத்துராமலிங்கம் என்ற நாகேந்திரசேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியாா் உள்ளனா்.குமரன் சேதுபதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    குமரன் சேதுபதி, ராமேசுவரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

    அவரது உடல் அரண்மனை வளாகம் ராமலிங்க விலாசத்தில் உள்ள தா்பாா் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

    சகோதரரின் உடலுக்கு ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியாா், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    அமைச்சர் ராஜகண்ணப்பன்,  ராமநா தபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கா்லால் குமாவத், கோட்டாட்சியா் சேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன், அரண்மனை வகையறாவைச் சோ்ந்தவரும், தி.மு.க.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி, பா.ஜனதா பிரமுகா் சுப.நாகராஜன்.

     மதுரை 4-ம் தமிழ்ச்சங்க செயலா் மாரியப்பமுரளி, முன்னாள் அமைச்சா் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆா்.ராமசாமி, முதுகுளத்தூா் முருகன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வத்தின் மகன் பிரதீஷ், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிா்வாகி திருமாறன், ராமநாதபுரம் நகரசபை தலைவா் காா்மேகம் உள்பட பிரமுகர்கள், பொதுமக்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். 

    இன்று (புதன்கிழமை)மாலை அரண்மனை வளாகத்தில் உள்ள ராமலிங்க விலாசத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 
    ×