என் மலர்
நீங்கள் தேடியது "பேர்"
- கந்து வட்டி புகார்
- முக்கிய ஆவணங்கள் சிக்கியது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தக்கலை மூலச்சல் பகுதியைச் சேர்ந்த சீமோன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞானஜெபின் அதிக வட்டி வசூல் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் உமா சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.ஞானஜெபின், அவரது மனைவி பெனிலா மற்றும் ஞான ஜெபியின் நண்பர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த ஞானஜெபின் தலைமறைவானார்.இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற் றப்பட்ட ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை மறைவாகியுள்ள ஞான ஜெபின் மற்றும் அவரது நண்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஞான ஜெபின் காங்கிரஸ் பிரமு கர் என்பதும் குறிப்பி டத்தக்கதாகும்.
- பிள்ளையார் விளையில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது.
- கோவில் திருவிழாவையொட்டி ஊர் எல்லை வரை மின்விளக்கு அலங்காரம் செய்ய அனுமதி கோரி சாலை மறியல் போராட்டம்
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பிள்ளையார் விளை யில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் இறுதியில் வாகன பவனி நடக்கும்.விழாவைெயாட்டி ஊர் எல்லை வரை மின்விளக்கு அலங்காரம் செய்ய அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
இதனால் ஊர் மக்கள் ராஜாக்கமங்கலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. தொடர்ந்து அவர்கள் கணபதி புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் போலீசார் அவர்களை விடுவித்தனர். ஆனால் அவர்கள் அங்கி ருந்து செல்ல வில்லை. இதனை தொடர்ந்து பிள்ளையார் விளை ஊர் தலைவர் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 63), அய்யப்பன் (37), சசிகுமார் (45), அருள் முருகன் (46), ஜவகர் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
- பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு:
உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும், பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தூரம் நிர்ணியக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த மராத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மாரத்தானில் ஆண்களுக்கான போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும், பெண்களுக்கான போட்டியை திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு பெருந்துறையில் முடிவுற்றது. ஆண்கள் பிரிவின் சார்பில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .
- ஈரோட்டில் புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடா சலபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எண்ணமங்கலம், ராம கவுண்டன் குட்டை பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சோத னை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் - ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர் அவரிடமிருந்து 105 புகையிலை, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேப்போல் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சத்தியமங்கலம்-பவானிசாகர் ரோட்டில் தரைபாலம் அருகே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்தி ருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.