என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக"

    • மாவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று.
    • அக்னிசட்டி, காவடி, அலகு காவடி எடுத்து வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மேலக்கொட்டையூர் மாரியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது.

    இந்த கோவிலில் மார்கழி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு மார்கழி திருவிழாவையொட்டி மாவிளக்கு பூஜை பூச்சொரிதல் விழா நடைபெற்று.

    முக்கிய நிகழ்ச்சியான இன்று புறவழிச்சாலையில் காவேரி கரையிலிருந்து கொட்டும் மழையில் நாதஸ்வர மேளதாளங்கள் தாரை தப்பட்டையுடன் பால்குடம் வேல் சக்தி கரகம் அக்னிசட்டி காவடி அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்த சந்தன காப்பா அலங்கார மும் அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இரவு 7 மணி அளவில் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் உற்சவர் ரிஷப வாகனத்தில் பதினெட்டாம்படி கருப்புசாமி வேலு மாரியம்மன் சக்தி கரகமும் சக்தி கரகமும் மேளதாளம் புழங்க இன்னிசைக் கச்சேரியுடன் வீதி உலா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிராம நாட்டாமைகள் ஊர் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர். 

    • பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தை மாத அமாவாசை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் ,அரசாயி அம்மன், மாசாணி அம்மனுக்கு பால் ,தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவில், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன்,பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன்,கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும்

    ராஜா சுவாமி, பாண்டமங்க லம் மாரியம்மன், பகவதி

    அம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரி யம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவ ருக்கு தை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவ ருக்கு தை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி. மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடை

    பெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் ,பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் ,அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

    அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில் ,பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில் ,ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் ,வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில் ,பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .

    • பரமத்திவேலூரில் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கட்டிசோறு கருப்பண்ணார்சு வாமி கோவில்உள்ளது.
    • இக்கோவிலின் 9-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கட்டிசோறு கருப்பண்ணார்சு வாமி கோவில்உள்ளது.இக்கோவிலின் 9-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கட்டிச் சோறு கருப்பண்ணார் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கட்டிச் சோறு கருப்பண்ணார்சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பண்ணார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
    • சிவனை வழிபட ஏற்றகாலம் சாயரட்சை.

    பிரதோஷம் அன்று நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேசுவரரின் இருகொம்பு களுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான காலம் பிரதோஷ நேரமாகும். இது `தினப் பிரதோஷம்' எனப்படும். சிவனை வழிபட ஏற்றகாலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம்.

     பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் அதற்கு அவ்வளவு மகிமை உண்டு. பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். இந்த நாளில் நாம் சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

    அதோடு நாம் எந்த அபிஷேகப் பொருளைக் கொண்டு நந்திகேசுவரருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன்களும் சொல்லப்பட்டுள்ளது. அவற்றையும் பார்ப்போம்.

    பால் - நோய்தீரும்

    தயிர் - வளம் பல உண்டாகும்

    தேன் - இனிய சரீரம் கிட்டும்

    பழங்கள் - விளைச்சல் பெருகும்

    பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

    நெய் - முக்தி பேறு கிட்டும்

    இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்

    சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

    எண்ணெய் - சுகவாழ்வு கிட்டும்

    சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

    மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

    • வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

    வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலே உள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்தில் இருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

     இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர்.

    இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.

    ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன.

    ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச்சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.

    இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை.

    தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார்.

    அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், `ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.

    முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார்.

    அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும்.

    அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர்.

    இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன், பாண்டமங்கலம் மகாமாரியம்மன், பகவதி அம்மன், சேளூர் மாரியம்மன்,கொந்தளம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×