என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேளாண்"
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலுார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளை வித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 32.57 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 613 தேங்காய் விற்பனைக்கு வந்தது.இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.23.19-க்கும் என மொத்தம் ரூ. 74ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல்511.34 குவிண்டால் எடை கொண்ட 1019-மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது.
இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.89-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.77-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.59.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.99-க்கும் என மொத்தம் ரூ.37லட்சத்து52ஆயிரத்து 905-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 38 லட்சத்து27 ஆயிரத்து 730-க்கு விற்பனையானது.
- மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 ரொக்கம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
- மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ெடல்லியில் தொடங்கி வைத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 ரொக்கம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலியை மத்திய வேளாண் மற்றும் விவசா யிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ெடல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யில், நாடு முழு வதிலு மிருந்து ஆயி ரக்கணக்கான விவசாயி கள், மத்திய, மாநில அரசு அதி காரிகள், பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் வேளாண் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் காணொலிக் காட்சி வாயி லாக கலந்து கொண்டனர்.
இந்த செயலி மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் அல்லது கைரேகை யில்லா மல், மின்னணு வாயிலான வாடிக்கையா ளர் விவ ரங்களை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் மற்ற விவசாயிகளுக்கும் உதவ முடியும். இதன் மூலம் மாநில அரசு அதிகாரி ஒருவர், 500 விவசாயிகளின் மின்னணு வாயிலான வாடிக்கை யாளர் விவ ரங்களை சரிபார்க்க முடியும்.
இது குறித்து பேசிய மத்திய மந்திரி தோமர், பிரதமரின் வருவாய் ஆத ரவுத் திட்டத்தின் மூலம் சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தவணை முறையில் நிதியளிக்கப்படு கிறது. இதன்மூலம் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு நிதி கிடைக்கிறது.
இந்த தொழில்நுட்பத் தின் மூலம் பெரும் எண்ணிக்கை யிலான விவசாயிகளுக்கு தற்போது உதவ முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
- வேளாண் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.
- இயக்குநர் சுந்தரவள்ளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன டைந்து வரும் பயனாளி களின் இருப்பிடத்திற்கு சென்று கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி வடபட்டி கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மகாகனி மரக்கன்றுகள் பெற்று வளர்த்து வருவதையும், புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள கம்பு விதை பண்ணையினையும், புதுக்கோட்டை கிராமத்தில் உணவு மற்றும் சத்து தானியங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுழற் கலப்பை மூலம் பயன்பெற்று வருவதையும் பார்வையிட்டார்.
பின்னர் செவலூர் கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் நடவு செய்யப்பட்ட தேக்கு மரக்கன்றுகளையும், செவலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறை பண்ணை யும், நடையனேரி கிரா மத்தில் கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் கோவில்பட்டி-4 ரக சோளம் பயிரிடப்பட்டுள்ள (கே4 ரகம்) வயலினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயி களுடன் கலந்துரையாடி, பயிர் வளர்ப்பு முறைகள், அரசின் மூலம் வழங்கப்படும் உதவிகள், மகசூல் உள்ளிட்ட வைகள் குறித்து கேட்ட றிந்தார்.
மேலும் பண்ணைக் கருவிகள், இதர பொருட்க ளான உளுந்து, நிலக்கடலை மினி கிட் மற்றும் பேட்டரி தெளிப்பான்களையும் கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சுமதி, சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
திருநாககேஸ்வரம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கீழவீதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
நான் டெல்டா பகுதியை மிகவும் விரும்பு பவன். இந்த பகுதி சோறு போடும் பகுதி.
இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. காவிரி டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தது நான் தான்.
சமீபத்தில், கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார், 5 ஆண்டுகளில் நீ்ரப்பாசன துறைக்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், மேகதாது அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
கட்டவும் முடியாது.நீர்ப்பாசன துறைக்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என இலக்கு வைத்துள்ளனர்.
இதுவல்லவா இலக்கு. நமது மாநிலத்தில் தற்போது மது விற்பனை மூலம் ரூ.50 ஆயிரம் கோடி என்பதை வரும் மூன்று ஆண்டுகளில் ரூ.80 ஆயிரம் கோடி என்ற அளவில் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க. தான். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்கின்றனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த 55 ஆண்டுகளாக 2 கட்சிகளுக்கு வாய்ப்பு ெகாடுத்தீர்கள், வருகிற 5 ஆண்டுகள் மட்டும் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், உழவர் பேரியக்க செயலாளர் கோ.ஆலயமணி, மாநில செயற்குழு உறுப்பினர் பானுமதி சத்யமூர்த்தி உள்பட பலர் பேசினர்.
முன்னதாக மாவட்ட செயலாளர் தி.ஜோதிராஜ் வரவேற்றார்.
திருவிடைமருதூர் தேரோடும் வீதியில் தேர் போன்று பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், பிரமாண்ட சுத்தியல் ஒன்றை வழங்கினார்.
மாவட்ட பா.ம.க. சார்பில் ஏர் கலப்பை நினைவு பரிசு வழங்கப்பட்டது.
திருவிடைமருதூர் பா.ம.க சார்பில் தேர் படம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 67.47 குவிண்டால் எடை கொண்ட 18ஆயிரத்து 310தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன.
இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.27.80-க்கும், குறைந்த விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.24.25-க்கும் என்று ரூ 1லட்சத்து 50ஆயிரத்து 636-க்கு விற்பனை ஆனது.
அதேபோல் 201.68 1/2 குவிண்டால் எடை கொண்ட 443மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.85.15-க்கும், குறைந்த விலையாக ரூ.84.09-க்கும், சராசரி விலையாக ரூ.85.09-க்கும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.29-க்கும், குறைந்த விலையாக ரூ.70.99-க்கும், சராசரி விலையாக ரூ.83.15க்கும் என்று ரூ.16லட்சத்து 41ஆயிரத்து 952க்கு விற்பனை ஆனது.
110.49குவிண்டால் எடை கொண்ட 148மூட்டை சிவப்புஎள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.114.99-க்கும், குறைந்த விலையாக ரூ96.69-க்கும், சராசரி விலையாக ரூ.111.11க்கும் என ரூ.11லட்சத்து 85ஆயிரத்து 504க்கு விற்பனையானது. அதேபோல்110.75 குவிண்டால் எடை கொண்ட 354 மூட்டை நிலக்கடலை காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதில் அதிகப்படி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.70.49க்கும், குறைந்த விலையாக ரூ 55 .09க்கும்,சராசரி விலையாக ரூ.64.21க்கும் என 354 மூட்டை நிலக்கடலை காய் ரூ.7லட்சத்து 8 ஆயிரத்து 87க்கு விற்பனை ஆனது. ஒட்டு மொத்தமாக இந்தவாரம் தேங்காய், தேங்காய் பருப்பு,எள், நிலக்கடலை காய் ஆகியவை ரூ.36லட்சத்து 86ஆயிரத்து179க்கு விற்பனை ஆனது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்