என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன"
- பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதையடுத்து மதியம் 3 மணிக்கு மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சத்தியமங்கலம், பண்ணாரி, அரியப்பம் பாளையம், ஓட்டை குட்டை, புளியம் கோம்பை, வட வள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை மழை தூறி கொண்டே இருந்தது.
இதனால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றன. பரவலாக மழை பெய்ததால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சி அளித்தது.
இதே போல் திம்பம், தாளவாடி, ஆசனூர், தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மேலும் பவானிசாகர், புளியம்பட்டி, புங்கர்பள்ளி, நல்லூர், காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி- மின்னலுடன் பரவ லாக மழை பெய்தது.
பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலுக்கு 950 கனஅடியும், ஆற்றுக்கு குடிநீருக்கு 100 கனஅடியும், எல்.பி.பி. வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1055 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.