search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டையாம்பட்டி, மேட்டூர், வீரகனூரில் கன மழை
    X

    கனமழை காரணமாக ஆட்டையாம்பட்டியில் சாலையோரத்தில் உள்ள சிக்னல் கம்பம் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    ஆட்டையாம்பட்டி, மேட்டூர், வீரகனூரில் கன மழை

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 88 ஏரி–களில் 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக சேலம் மாவட்டம் மேட்டூர், வீரக–னூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள், வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வ–ரத்து அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 88 ஏரி–களில் 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    29 ஏரிகள் நிரம்பின

    குறிப்பாக கன்னங்கு–றிச்சி, மூக்கனேரி, பைரோஜி ஏரி, கமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி, கொண்டலாம்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, முட்டல் ஏரி, மணி விழுந்தான் ஏரி, தேவியாக்குறிச்சி ஏரி, செந்தாரப்பட்டி ஏரி, பனை ஏரி உள்பட 29 ஏரிகள் முழுமையாக

    நிரம்பின.

    மேலும் கொட்டவாடி ஏரி, சார்வாய் பெரிய ஏரி, ஆறகளூர் ஏரி, தியாகனூர் ஏரி உள்பட 8 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. தொடவூர் ஏரி, வலசக்கல்பட்டி ஏரி, தலைவாசல் ஏரி உள்பட 16 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் மேல் நிரம்பி உள்ளன. 18 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. 15 ஏரிகள் வறண்ட நிலையில் உள்ளன.

    122 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 23.8 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 20, எடப்பாடி 17.6, சங்ககிரி 13.1, காடையாம்பட்டி 12, சேலம் 10, பெத்தநாயக்கன் பாளையம் 5.5, ஏற்காடு 5, தம்மம்பட்டி 5, ஓமலூர் 4.6, ஆனைமடுவு 3, கரியகோவில் 2 மி.மீ. என என மாவட்டம் முழுவதும் 112 மி.மீ. மழை பெய்துள்ளது.

    ஆட்டையாம்பட்டி

    ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள எஸ்.பாலம் வளைவு பகுதியில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சாலை தடுப்பும், சிக்னல் கம்பமும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் ஆட்டையாம்பட்டி பகுதி–யில் கனமழை பெய்தது.

    இதில், ஏற்கனவே அடிப்பகு–தியில் துருபிடித்து இருந்த சிக்னல் கம்பம் சாலையின் நடுவே உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஒருவழிப் பாதையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடைந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    தம்மம்பட்டி

    தம்மம்பட்டி வனச்சரக அலுவலகம் வழியாக கொல்லிமலை, செங்காடு பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இந்நிலையில் தம்மம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் கன–மழை பெய்ததால், கொல்லிமலை, செங்காடு செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியது. இதில் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத–னால் அப்பகுதி மக்கள், கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

    சேலம் மாநகர பகுதியில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றை நோக்கி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் ஏ.டி.சி. நகரில் உள்ள பாலத்துக்கு மேலே தண்ணீர் செல்வ–தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலை–களுக்கும் தண்ணீர் வரத்து அதகரித்துள்ளது.

    Next Story
    ×