search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காட்டில் கொட்டி தீர்த்த கன மழை
    X

    பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காட்டில் கொட்டி தீர்த்த கன மழை

    • தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வழி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • தொடர் மழையால் எடப்பாடி மேட்டுத்தெருவில் வீடு இடிந்து மூதாட்டி பலி.

    சேலம்:

    தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வழி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன மழை

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்றிரவும் கன மழை பெய்தது. குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம், ஏற்காடு, வீரகனூர், கரிய கோவில், மேட்டூர் உள்பட பல பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்தது. நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் அந்த பகுதிகளில் உள்ள ஓடைகள், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 35-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பிய நிலை யில் மேலும் பல ஏரிகளுக்கு நீ ர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை கன மழையாக கொட்டியது. இதனால் மலைப்பாதையில் புதிது புதிதாக அருவிகள் உருவாகி உள்ளன. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள். ஏற்காட்டில் பெய்த கன மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்ட லாம்பட்டி, ஜங்சன் என அனைத்து பகுதிகளிலும் நேற்றிரவு மழை தூறலாக நீடித்தது. இந்த தூறல் விடிய, விடிய நீடித்தது.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் எடப்பாடி மேட்டுத்தெருவில் உள்ள ராணி (வயது 65 )என்பவரது வீடு இன்று காலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தனியாக வசிக்கும் ராணி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்த

    னர். தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் மற்றும் தீய ணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    578.20 மி.மீ. மழை

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்த நாயக்கன் பாளையத்தில் 90 மி.மீ. பதிவாகி உள்ளது. ஏற்காடு 75.2, வீரகனூர் 74, கரியகோவில் 58, மேட்டூர் 48, ஆத்தூர் 46, ஆனைமடுவு 41, கெங்கவல்லி 35, எடப்பாடி 24, தம்மம்பட்டி 23, சங்ககிரி 20, ஓமலூர் 18.6, காடையாம்பட்டி 15.6, சேலம் 9.6, மி.மீ என மாவட்டம் முழுவ தும் 578.20 மி.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×