என் மலர்
நீங்கள் தேடியது "பெருந்துறை"
- நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
- டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி பாக்கெ ட்டுகளில் அடைத்தும், ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணை, நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் தொழிற்சாலையின் கழிவுநீரை ஏற்றி சுள்ளி பாளையம், மெஜஸ்டிக் நகர் பகுதியில் சாலை யோரத்திலும் விவசாய நிலத்திலும் திறந்து விட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை சிறை பிடித்ததுடன் அவர்களை விசாரித்தனர்.
அந்த டேங்கர் லாரி டிரைவர், தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதி மக்கள் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து பார்த்தபோது அது மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்ததுடன், ரசாயன வாடையும் அடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த நீரில் உள்ள உப்புத்தன்மையை பரிசோதிக்கும் டி.டி.எஸ். கருவியை கொண்டு வந்து நீரில் உள்ள உப்பின் அளவை பரிசோதித்தனர். அந்த நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சுள்ளிபாளையம் மற்றும் மெஜஸ்டிக் நகர் பகுதி மக்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:-
அண்மைக்காலமாக இந்த பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆலையின் கழிவு நீராலும் லாரியில் கொண்டு வந்து கொட்டும் கழிவு நீராலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ஓட்டி வந்தவர்களிடமும், அந்த நிறுவனத்தின் அதிகாரி யையும் போலீசார் விசாரித்த போது, தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காகவே டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்திய தாகவும், இனிமேல் அப்பகுதியில் தண்ணீரை விடுவதில்லை என எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்களை எச்சரித்த போலீசார் டேங்கர் லாரியை விடுவித்தனர்.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சென்ற போதிலும் அவரை பார்க்க முடியவில்லை.
தனியார் பால் உற்பத்தி நிறுவனம் மீது தொடர்ந்து வரும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- பெரியாண்டிபாளையம் , சிப்காட், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
- மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.
ஈரோடு:
பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம், சிப்காட் துணை மின் நிலையம் மற்றும் ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
இதையொட்டி வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், புதூர், பனியம்பள்ளி,
தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம். சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி,
சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம். பெருந்துறை தெற்கு பகுதி, மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர் வடக்குப்பகுதி,
வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- இந்த தகவலை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை (13-ந் தேதி) நடக்கிறது.
இதையொட்டி பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம்,
திருவேங்கிடம் பாளையம் புதூர், கந்தா ம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளை யம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர,
சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்திநகர், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
- கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.
- முதியவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் கடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து 100, 200, 500 ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.
இதன் பின்னர் கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு குறித்து சந்தையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதன் பின்னர் முதியவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் இக்கரைபள்ளியை சேர்ந்த ஜெயபால் (வயது 70) என்பதும், இவரது மகன் ஜெயராஜ் (40) என்பவர் வீட்டில் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த பணத்தை ஜெயபால், அவரது மனைவி சரசு, மகன் ஜெயராஜ் மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா (38) ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் மாட்டி கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராமபுற சந்தைகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதையடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் மீதும் திங்களூர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம் 100, 200, 500 ஆகிய போலி நோட்டுகள் கொண்ட ரூ.2.85 லட்சம் கள்ள நோட்டுகளையும், சந்தைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண்கள் இருவரை பெருந்துறை சிறையிலும், பெண்கள் இருவரை கோவை சிறையிலும் அடைத்தனர். கள்ள நோட்டு தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த கும்பல் போலீசாரிடம் சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
- சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம்.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
காலை 8-30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பல்லகவுண்டன்பாளையம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 5 கல்லூரி மாணவர்களின் கை-கால்கள் துண்டாகியது. அவர்கள் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் சுய நினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக செங்கப்பள்ளி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.

டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்தில் பலியான 2 பேரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 20), மற்றொருவர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
பெரியசாமி செங்கப்பள்ளியில் இருந்து பஸ்சில் ஏறியுள்ளார். அடுத்த 5 நிமிடத்தில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் இந்த நிறுவன பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
- தொழிற்சாலையை 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்து பால் பொருள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு 1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது மில்கி மிஸ்ட் நிறுவனம். இங்கு பால் மட்டுமல்லாமல் தயிர், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 20 வகை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் வரும் ஆண்டில் ரூ.2,500 கோடி அளவுக்கு விற்பனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் இந்த நிறுவன பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி மொத்தமாக இந்நிறுவனம் ரூ.1,777 கோடி முதலீடு செய்வதாக இருந்தது. இதில் முதற்கட்டமாக ரூ.900 கோடியை மில்கி மிஸ்ட் நிறுவனம் முதலீடு செய்து உள்ளது. இந்த தொழிற்சாலையை 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்து பால் பொருள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் கூடுதலாக 450 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுங்கசாவடிக்கு பணம் செலுத்த தவிர்த்து பெருந்துறை-காங்கேயம் ரோட்டில் செல்லும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
சென்னிமலை:
சென்னிமலை- பெருந்துறை ரோட்டில் உள்ள ஈங்கூரில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ெரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த வழியே வாகனங்களில் செல்லும் அனைத்து மக்களும் ெரயில் செல்லும் வரை காத்திருந்த பின்பே செல்வார்கள்.
ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பல்வேறு பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் ெரயில்வே மேம்பாலத்திற்காக போராடினார்கள்.
அதன்பிறகு ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்ட அரசு அனுமதியளித்தது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மேம்பாலம் வழியாக எந்த வித தடங்களும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன.
தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட 3 இடங்களில் உள்ள சுங்க சாவடிகளில் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன.
அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இதன் வழியாக செல்கின்றன. இதனால் சென்னிமலை -பெருந்துறை ரோடு, சென்னிமலை-காங்கேயம் செல்லும் ரோடு, மற்றும் குறுகிய ரோடாக உள்ள சென்னிமலை டவுன் பகுதி ஆகியவை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி விட்டது.
இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
நான்கு வழிச் சாலைகளில் செல்லும் கண்டெய்னர்கள் எல்லாம் சுங்க கட்டணம் கட்டுவதை தவிர்க்க இந்த வழியில் செல்கின்றன. இதனால் இந்த ரோடு தாங்காமல் அடிக்கடி பெயர்ந்து போய்விடுகிறது. மேலும் ஒரே நேரம் 2, 3 லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் குறுகலான சாலையை கொண்ட சென்னிமலை பகுதியில் அடிக்கடி சென்னிமலை கிழக்கு ராஜா வீதி மற்றும் சென்னிமலைபாளையம் பிரிவு, மலை கணுவாய், பசுவபட்டி வெப்பிலி ரோடு பிரிவு ஆகிய இடங்களில் மாதம் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
காங்கேயத்திலிருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கோ அல்லது பெருந்துறையில் இருந்து காங்கேயத்திற்கோ இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார்களிலோ குறிப்பாக காலை, மாலை நேரங்களில் செல்பவர்களுக்கு இந்த லாரிகளின் தொந்தரவு நன்கு தெரியும்.
சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவே நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழியாக செல்லாமல் சுங்கச் சாவடிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் லாரிகள் செல்வதால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
ஈங்கூர் மேம்பாலம் கட்டப்படாமல் இருந்திருந்தால் ெரயில் வரும் போது மட்டும் ஒரு பத்து நிமிடங்கள் தான் நாம் நின்று விட்டு சென்றிருப்போம். ஆனால் தற்போது இந்த லாரிகளால் ஒரே வழியாக சென்று விடும் நிலையில் உள்ளோம் என சென்னிமலை பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னிமலை டவுன் பகுதிக்குள் இந்த கனரக லாரிகள் நுழைய தடை விதித்தால் கூட போதும் என்கின்றனர். இதை தவிர்க்க சென்னிமலை நகரை சுற்றி ரிங்ரோடு பைபாஸ் அமைக்க வேண்டும் என சென்னிமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.