என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டு"

    • முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள்.
    • பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், அலோசியஸ், தலைமை காவலர்கள் சீனிவாசன், ரஞ்சனி பிரியா, செந்தமிழ்ச்செல்வி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியை வெற்றி செல்வி அனைவரையும் வரவேற்றார். முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகளும் வழங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபாவதி பேசுகையில் பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றார்.

    முடிவில் ஆசிரியர் இன்பாலன் நன்றி கூறினார்.

    • புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
    • சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட நடுவைகுறிச்சி பகுதியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி துணைத் தலைவர் பிரியா மேரி மற்றும் 13-வது வார்டு கவுன்சிலரும், சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளருமான கண்ணன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ஷா மேரி வரவேற்றார். பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×