என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.ஐ"

    • விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
    • 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?

    விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்

    மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
    • சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைதுசெய்தது.

    இதற்கிடையே, சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மனு குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஏற்கனவே கைதுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிகாரிகள்-ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம் என சி.பி.ஐ. அறிவிப்பால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை

    மதுரையில் இயங்கி வரும் மத்திய புலனாய்வுத்துறையின் (சி.பி.ஐ.) ஊழல் ஒழிப்பு பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- 

    மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், தனிப்பட்ட ஆதாயத்துக்காக தன்னுடைய அலுவலகப்பதவியை தவறாக பயன்படுத்தினால், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியிருந்தால் மதுரையில் இயங்கி வரும் மத்திய புலனாய்வுத்துறையின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம். 

    இதுதொடர்பாக புகார்கள் மற்றும் தகவல்களை 89034-83900 என்ற கைபேசி எண், 0452-2562258 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் cbimdu.complaint@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். “ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க முன்வாருங்கள்”. 

    ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி லஞ்சம் வாங்கு பவர்களுக்கும், லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மத்திய புலனாய்வுத் துறையின் இந்த திடீர் அறிவிப்பு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×