என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகுந்து"
- 4 பேர் மீது வழக்கு; வாலிபர் கைது
- வீட்டுடன் சேர்த்து சிறிய கடை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (வயது 70). இவர் வீட்டுடன் சேர்த்து சிறிய கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் பலரும் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் சிலர் கடனுக்கு வாங்குவதுண்டு. அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் சிஜோ (24) என்பவரது தாயாரும் பொருட்களை கடனுக்கு வாங்கினாராம்.
இந்த நிலையில் அஸ்வின் சிஜோவிடம், அவரது தாயார் வாங்கிய கடன் தொகையை ஜான்ரோஸ் கேட்டுள்ளார். இது அஸ்வின் சிஜோவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தில் அஸ்வின் சிஜோ தனது நண்பர்களுடன் ஜான்ரோஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அவர்கள், வீடு புகுந்து ஜான்ரோசை கத்தியை காட்டி மிரட்டிய தாகவும் கடையில் உள்ள பொருட்களை சூறையாடியதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்திய தக்கலை போலீசார், அஸ்வின் சிஜோ, வினீத்(24), அபினேஷ் (19), ஆகாஷ் (23) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் அபினேஷ் கைது செய்யப்பட்டார்.
- தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.
- சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (40) இவர் தனது 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
நேற்று இரவு வனப்பகுதியில்11 மணி அளவில் வந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழையை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தன. இதைப் பார்த்த விவசாயி ஜீவாநந்தம் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். விவசாயிகள் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டும் யானைகளை துரத்தினர்.
ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் வாழையை தொடர்ந்து சேதபடுத்தியது. அதிகாலையில் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.
இதில் யானைகளால் 150 வாழைகள் சேதமடைந்தது. சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்