என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிநீர் திட்ட பணிகள்"
- நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் ஆய்வு
- 6 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு மாற்றாக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடியாத்தம் விநாயகபுரம் பயணியர் விடுதி அருகே 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள குடிநீர் தேக்க தொட்டியும், எம்.பி.எஸ்.நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவும், அசோக்நகர் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் ஐதர்புரம் பாலாற்று பகுதியில் உள்ள குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான 9 குடிநீர் சப்ளை செய்யப்படும் கிணறுகளில் இருந்து அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் பைப்புகள் இணைக்கப்பட உள்ளது இந்த குடிநீர் பைப்புகள் இணைக்கும் பாதையை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், நகராட்சி பொறியாளர், சிசில்தாமஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நகரமன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், ரேணுகாபாபு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குடியாத்தம் நகராட்சியில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ரூ.13 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் இதனால் குடியாத்தம் நகராட்சி பொது மக்களுக்கு விரைவில் தினந்தோறும் குடிநீர் கிடைக்கும்.மேலும் தரைதள மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் இதனால் குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் பஞ்சம் என்பது இருக்காது என்றார்.
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- 15 வார்டுகளிலும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் மதன் தீர்மானங்களை வாசித்தார்.
இதில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.25.30 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் 15 வார்டுகளிலும் புதிய குடிநீர் பைப்லைன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
- ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
கோவை:
கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீரை தங்கு தடையின்றி வழங்க முடியும்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டி பெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது.
3-வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட தொடர்பு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ரூ 49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சங்கனூர் பள்ளத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்