என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் தற்கொலை"

    • மணிகண்டன் கோணவாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி பசுவேஸ்வரர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி நாகராணி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மணிகண்டன மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகராணி தார்பாய் தைக்கும் வேலை பார்த்து வருகிறார்.

    கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்ற னர். நாகராணி குழந்தை களுடன் பவானியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    மணிகண்டன் லட்சுமி நகர் அருகில் உள்ள கோண வாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் உடனே மணிகண்டனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து நாகராணி அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மீனவர் சுரேந்தர் காசிமேடு பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சென்னை காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். திருமணமானவர். சம்பவத்தன்று மீனவர் சுரேந்தர் காசிமேடு பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை மீன்பிடி துறைமுகத்தில் பழைய ஏலம் விடும் இடத்தில் அவரது உடல் ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேந்தர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருங்கல் அருகே மீனவர் தற்கொலை
    கன்னியாகுமரி, மே.28-

    கருங்கல் அருகே உள்ள மிடாலம் 10-வது அன்பித்தை சேர்ந்தவர் பங்கிராஸ்  (வயது57),மீனவர்.கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர்,  மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். 

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பங்கிராஸ் நைலான் கயிறால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் ஆனந்த் கொடுத்த  புகாரின்பேரில்  கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×