என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீரோடை"

    • வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வாருகால் வழியாக குருவன்கோட்டை ஓடையில் கலக்கிறது.
    • வடிகால் தரமாக அமைக்கப்படாத காரணத்தால் இதில் குப்பைகள். கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை கிராமத்தில் கழிவு நீரோடையில் ஏற்பட்ட தேக்கத்தால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

    இக்கிராமத்தில் உள்ள முதல் தெருவின் ஒரு பக்கம் ஆலங்குளம் பேரூராட்சி 4-வது வார்டின் ஒரு பகுதி, மற்றொரு பக்கம் மாயமான்குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டை ஆகியவை உள்ளது.

    இத்தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வாருகால் வழியாக குருவன்கோட்டை ஓடையில் கலக்கிறது. இந்த கழிவு நீர் வெளியேறும் பகுதியில் சில மாதங்களுக்கு முன், வடிகால் ஏற்படுத்தப்பட்டது.

    குப்பைகள் இன்றி தண்ணீர் மட்டும் வெளியேற வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வடிகால் தரமாக அமைக்கப் படாத காரணத்தால் இதில் குப்பைகள், கழிவுகள் தேக்கமடைந்து, கழிவு நீரும் வெளியேற இயலாமல் அதில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் இப்பகுதியில் வசிப்போருக்கு இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதன் மூலம் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    காடையாம்பட்டி அருகே வீடுகளுக்குச் செல்லும் வழியை மறித்து உயரமாக அமைக்கப்படும் கழிவுநீரோடை

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் நாச்சனம்பட்டி ஆதிதிராவிடர் காலனி உள்ளது . இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியது. இதை தொடர்ந்து சாக்கடை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் காடையாம்பட்டி பேரூராட்சி சார்பில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நாச்சனம்பட்டி காலனி பகுதியில் உள்ள ஒரு பகுதியில் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு செல்லும் பாதியை வழிமறித்து ஒரு மீட்டர் உயரம் வரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இதனால் கழிவுநீர் வீட்டுக்குள் செல்லும் சூழ்நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடு மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரம் மேல் பகுதியில் அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாயை அகற்றி விட்டு குழி தோண்டி கால்வாய் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி மூதாட்டி மாரியம்மாள் கூறும் போது எனக்கு மகன் ,மகள் என யாரும் இல்லை. நான் தனியாக வசித்து வருகிறேன். தற்போது அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் எனது வீட்டில் இருந்து 4 அடி உயரமாக உள்ளது. இதனால் நான் வீட்டிற்குள் சென்று வர முடியவில்லை. நான் வீதியில் இருந்து தவழ்ந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நான் குடிநீர் எடுத்து வர முடியவில்லை. எனவே இதை முறையாக அமைக்கவேண்டும் என்றார்.

    ×