search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடித்தோட்டம்"

    • முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
    • விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    • வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் காய்கறி வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படும்.
    • ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி அளிக்க ப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ்செல்வி அறிவுறுத்தலின் படி, தோட்டக்கலை அலுவலர் சோபியா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் கூறியதாவது:-

    மாடித்தோட்டம் தொகுப்பில் செடி வளர்ப்பு பைகள் 6 எண்கள் , தேங்காய் நார் கழிவுகள் 12 கிலோ , 6 வகையான காய்கறி விதை பொட்டலங்கள், அசோஸ்பைரில்லம் 200 கிராம்,போஸ்போபாக்டிரியா 200 கிராம், ட்ரைக் கோடர்மாவிரிடி 200 கிராம், வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் காய்கறி வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படும்.

    இந்த தொகுப்பின் விலை ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் .

    இந்த தொகுப்பினை பெற www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • நோய் எதிர்ப்பு திறன் உள்ள விதைகளை வாங்கி பயிர் செய்வது நல்லது.
    • மருந்து தெளித்து பத்து நாட்கள் வரை காய்களை பறிக்கக்கூடாது.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்பது விவசாயத்தில் முக்கியமான பழமொழி.

    தற்போது, ஆடிப்பட்டம் தொடங்க உள்ள நிலையில் வீட்டுத் தோட்டம் அமைக்க திட்டமிடலாம்.

    மாடித்தோட்டம்

    குறிப்பாக மொட்டை மாடியில் தொட்டிகளில் காய்கறிகளை பயிரிடலாம். இதற்கு செடிகளின் தன்மையை பொறுத்து சற்று பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ தொட்டிகளை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது, எடை குறைவாகவும், செடிகள் வளர்ப்புக்கு என்றே கெட்டியான பாலித்தீன் அல்லது தார்பாலின் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொட்டிகளில் மண் நிரப்பி காய்கறி பயிரிடுவதால் மாடித்தளத்தில் பாரம் அதிகரிக்கும். மேலும், தொட்டியில் இருந்து நீர் கசியும்போது அது தரை தளத்தை சேதப்படுத்துவதை தவிர்க்க தகுந்த பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தொட்டிகளில் செடி வளர்க்கலாம்.

    இதற்கு பதிலாக, மாடித் தோட்ட தொட்டிகளில் மண்ணுக்கு பதிலாக வளர்க்கும் ஊடகமாக மக்கிய தென்னை நார்க்கழிவு, மண் புழு உரம், தொழுஉரம், உயிர் உரங்களை கலந்து பயன்படுத்தலாம். இதில் சிறிதளவு மண் கலக்கலாம். இது மிகவும் எடை குறைவாக இருப்பதுடன், வேர்களுக்கு எளிதில் தண்ணீர் கிடைப்பதுடன், தேவையற்ற நீரை எளிதில் வடியச் செய்யும்.

    இந்த தொட்டிகளில் தண்ணீர் வடிவதற்கு, தொட்டியின் அடியில் இருந்து அரை அங்குலத்திற்கு மேல் சிறு துவாரம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    செடி தேர்வு

    மாடித் தோட்டத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை தேர்வு செய்து பயிரிட வேண்டும்.

    குறிப்பாக தக்காளி, வெண்டை, கத்தரி, பாகற்காய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், கீரை வகை போன்ற காய்கறிகளை வளர்க்கலாம்.

    பூச்செடிகளில் ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி மற்றும் அழகு செடிகளான கோலியஸ், குளோரபைட்டம், டிரசீனா, ரேடோடென்ட்ரான், ரங்கூன் கிரீப்பர், டெசர்ட் ரோஸ் ஆகியவற்றை வளர்க்கலாம். மாடித் தோட்டத்தில் மூலிகை செடிகளையும் பலர் விரும்பி வளர்க்கிறார்கள். அந்த வகையில், வல்லாரை, துளசி, கற்றாழை, கரிசலாங்கண்ணி, ஆடாதோடை போன்றவற்றை வளர்க்கலாம்.

    பயிர் பாதுகாப்பு

    மாடித் தோட்ட செடிகளை பயிரிட நோய் எதிர்ப்பு திறன் உள்ள விதைகளை வாங்கி பயிர் செய்வது நல்லது.

    குறிப்பாக, வெண்டையில் அர்கா அமனாமிகா, வர்ஷா ரகங்களை பயிரிடலாம். செடிகளில் புழுக்கள் தென்பட்டால் முடிந்தவரை கையால் பொறுக்கி எடுத்து அழிக்கவும். இந்த புழுக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்ப எண்ணெய் மற்றும் பிண்ணாக்கு சாறு உபயோகிக்கலாம்.

    வேறு வழியின்றி ரசாயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் மருந்து தெளித்து பத்து நாட்கள் வரை காய்களை பறிக்கக்கூடாது. பூஞ்சாண நோய்கள் தென்பட்டால் தகுந்த பூஞ்சாண கொல்லி மருந்தை தெளிக்கவும்.

    அறுவடை

    தோட்டத்தில் சுழற்சி முறையில் சீசனில் முதிர்ந்த காய்கறிகளை பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தகவல்: அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி, மதுரை.

    காய்கறி பயிர் ரகங்கள்

    சில காய்கறிகளின் பயிர் ரகங்கள், சாகுபடி நாட்கள் குறித்த விவரம் வருமாறு:-

    தக்காளி பயிர் ரகங்கள்: பி.கே.எம்.-1, கோ.டி.எச்.-1, கோ.டி.எச்-.2, கோ.டி.எச்.-3, சாகுபடி காலம் 90-100 நாட்கள்.

    கத்தரி பயிர் ரகங்கள்: பி.எல்.ஆர்.-1., பி.எல்.ஆர். (பி), கோ.பி.எச்.-1, கோ-2, எம்.டி.யு.-1, வி.எம்.ஆர்.-1. சாகுபடி காலம்: 90-100 நாட்கள்

    மிளகாய் பயிர் ரகங்கள்: கோ-4, பி.எல்.ஆர்.-1, கோ-1, கோ-2, பி.கே.எம்.-1, சாகுபடி காலம்: 150-180 நாட்கள்

    வெண்டை பயிர் ரகங்கள்: கோ.பி.எச்.எச்.-1, கோ-3, சாகுபடி காலம்: 80-90 நாட்கள்

    பாகற்காய்:, கோ-1., எம்.டி.யூ.-1, கோ (பி, ஜி, ஒ, எச்-1), சாகுபடி காலம்: 60-70 நாட்கள்

    புடலை: பி.எல்.ஆர். (எல்.ஜி.)-1, பி.கே.எம்.-1, கோ-1, கோ-2. சாகுபடி காலம்: 150-160 நாட்கள்

    பீர்கன்: நாட்டு ரகம் கோ-1, கோ-2. சாகுபடி காலம் 150-160 நாட்கள்.

    • இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களான வெண்டை, கத்திரி, கீரை, முருங்கை, அவரைக்காய் மற்றும் கொடிகாய் தளைகள் வளர்த்தேன்.
    • இயற்கை உரங்களை உபயோகப்படுத்தியதால் பூச்சி மருந்து அற்ற பசுமையான மற்றும் சத்தான காய்கறிகளைப் பெற்றேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்ட க்கலை அபிவிருத்தி திட்ட த்தின்கீழ் ஊரகப்பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு 3500 தளைகள், நகர்ப்புறங்களில் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கு 500 தளைகள் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் 4500 தளைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் கூறியதாவது:- தோட்டக்கலைத்துறை மூலம் தஞ்சாவூர்வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குநர் அலுவலகத்தி லிருந்து தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 மாடித்தோட்ட தளையை மானியத்தில் ரூ.450-க்கு பெற்றேன்.

    அந்த தளையில் 6 வளர்ப்பு பைகள் மற்றும் தென்னை நார் உரம், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் - 200 கிராம், டிரைகோடெர்மா விரிடி – 100கிராம், அசாடிராக்டின் - 100 மி.லி, 6 வகையான விதை அடங்கிய பொட்டலம் மற்றும் வழிகாட்டி புத்தகம் ஆகியவை இருந்தது. இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களான வெண்டை, கத்திரி, கீரை, முருங்கை, அவரைக்காய் மற்றும் கொடிகாய் தளைகள் வளர்த்தேன். இதன் மூலம் எங்களது குடும்பத் தேவையைபூர்த்தி செய்ததுடன் உறவினர்க ளுக்கும், காய்க றிகளை பகிர்ந்து அளித்தேன்.

    நகரப்பகுதியில் வசிக்கும் இடமற்ற ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு இந்த தளைகள் அடங்கி காய்கறி தொகுப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். மேலும் இயற்கை உரங்களை உபயோகப்படுத்தியதால் பூச்சி மருந்து அற்ற பசுமையான மற்றும் சத்தான காய்கறிகளைப் பெற்றேன். ஆகவே தோட்டக்கலை துறைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவர் கூறியதாவது:-

    தோட்டக்கலைத்துறை மூலம் தஞ்சாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 2 மாடித்தோட்ட தளையை மானியத்தில் பெற்றேன்.இந்த மாடித்தோட்ட தளையின் உதவியுடன் காய்கறி பயிர்களை வளர்த்தேன். இது எனக்கு உறவினர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்த ளித்து, உதிவயாகவும் இருந்தது இத்திட்டத்தை அறவிகத்து நடைமுறை படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகோள்கிறேன் என்றார்.

    ×