என் மலர்
நீங்கள் தேடியது "வனவிலங்கு வேட்டை"
- போலீசார் சந்தேகத்தின்பேரில் காரை சோதனை செய்து பார்த்தனர்.
- காருக்குள் இறைச்சி பதுக்குவதற்காக ஒரு ரகசியஅறை இருப்பது கண்டறியப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூடலூர் சரகத்துக்கு உட்பட்ட ஓவேலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. எனவே அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அந்த காருக்குள் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் காரை சோதனை செய்து பார்த்தனர். இதில் காருக்குள் இறைச்சி பதுக்குவதற்காக ஒரு ரகசியஅறை இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் விலங்குகளை கொல்வதற்கான கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் சிக்கின. எனவே காருடன் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், மேற்கண்ட 5 பேரையும் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் ஜாம்ஷெர்,ஜோபின், ஜிஜோ ஜான், முகம்மது அனீஸ், ஜிபின் ஜான் என்பது தெரிய வந்தது. எனவே அவர்களிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்து உள்ளன.
கேரளாவை சேர்ந்த ஜாம்ஷெர்,ஜோபின், ஜிஜோ ஜான், முகம்மது அனீஸ், ஜிபின் ஜான் ஆகிய 5 பேரும் காடுகளில் புகுந்து அதிநவீன கருவிகள் உதவியுடன் வன விலங்குகளை வேட்டையாடும் தொழில் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு காரை பயன்படுத்தி வந்து உள்ளனர்.
அந்த காரில் இறைச்சியை பதுக்கி எடுத்து செல்வதற்காக, ஒரு ரகசிய அறை வைக்கப்பட்டு உள்ளது. இதனை நாங்கள் தற்செயலாக கண்டுபிடித்து உள்ளோம்.
நீலகிரி காட்டுக்குள் புகுந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக காரில் வந்திருந்த 5 பேரையும் வனஊழியர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தி கைது செய்து உள்ளோம். அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக 5 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வனஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கொடைக்கானலில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட நபரின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது
- வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டவருக்கு அபராதம்
கொடைக்கானல்:
கொடைக்கானலின் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இங்குள்ள வனப்பகுதிகளில் அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதிகளில் காட்டெருமை, மான், சிறுத்தை, யானை, கேளையாடு, புலி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.
வனப்பகுதிக்குள் செல்லும் சில சமூக விரோத கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை என்னும் பகுதியில் காடை என்னும் பறவை வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் ரோந்துப் பணிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் பள்ளங்கி கோம்பை பகுதியில் ரகுராமன் என்பவர் காடை வேட்டையாடியதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர் காடை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேறு ஏதேனும் உயிரினங்கள் வேட்டையாடப் படுகிறதா? என வனத்துறையினர் தேடுதல் பணியும் விசா–ரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.