என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபரை"

    • யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் வந்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • சூரம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கந்தன் என்கிற யோக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குண்டு ராமு என்கிற ராமச்சந்திரன் (35). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கந்தன் என்கிற யோகமூர்த்தி (42). தள்ளுவண்டியில் சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராமச்சந்திரன் சூரம்பட்டி கறிக்கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் அங்கு வந்து ராமச்சந்திரனின் பின்பக்க தலையிலும், வலது கையிலும் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கந்தன் என்கிற யோகமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இந்த ராமச்சந்திரனுக்கு தலையில் 13 தையல்களும், இடது கையில் 7 தையல்களும் போடப்பட்டன. அவர் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சூரம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கந்தன் என்கிற யோக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யோகமூர்த்தியின் மகனை ராமச்சந்திரன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த யோகமூர்த்தி, ராமச்சந்திரனை பழி வாங்க திட்டம் போட்டு வந்துள்ளார்.

    இதன்படி சம்பவத்தன்று ராமச்சந்திரன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த யோகமூர்த்தி அவரை வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் யோகமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலத்தில் கடத்தப்பட்ட வடமாநில வாலிபரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
    சேலம்:

    சேலம் பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாதாரம் (வயது 52) ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டவுன் சின்னக்கடை வீதியில் கடந்த 3  ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). நேற்று முன்தினம் காலை நேரம் கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

     அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6:45 அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

     இது குறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உதவி கமிஷனர் அசோகன் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஜெயராமை கடத்தி சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள் சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா வியாபாரம் செய்து வருகின்றனர். குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாபேட்டை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது அதன்படி பணத்தைச் செலுத்திய பிறகு ஜாமீனில் வெளிவந்த வந்தனர்.

    இதன் பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்த பிரான்ஸ் போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு போலீசார் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

    ஜாமினில் வெளி வந்த இவர் கடந்த 20 நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் கையெழுத்துப் போட்டு வந்தார். ஆனால் நேற்று இவர் கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

    இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கடத்தல் நடத்தி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    மேலும்  போலீசாரிடம் பிடிபட்ட  லாரி உரிமையாளரான சுரேஷ் அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து இருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கிடையில் மர்மநபர்கள் ஜெயராம் பெங்களூருக்கு கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. போலீசார் நெருக்கடி காரணமாக ஜெயராமனை ஒப்படைத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது. 

    ஆனாலும் ஜெயராம் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. போலீசார்  தொடர்ந்து பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
    ×