என் மலர்
நீங்கள் தேடியது "உலக"
- மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
- இதய மருத்துவர் டாக்டர் டேனி கோல்ட் சிறப்புரையாற்றினார்.
நாகர்கோவில்:
உலக இதய தினத்தை முன்னிட்டு பெதஸ்தா மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதய மருத்துவர் டாக்டர் டேனி கோல்ட் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெத ஸ்தா மருத்துவமனையின் நிறுவனர்களான டாக்டர் ஜெயராஜ், டாக்டர் ஸ்டார் லெட் ஜெயராஜ் மற்றும் டாக்டர் ஷீபா டேனி, மரு த்துவ ஊழியர்கள், இதய நோயாளிகள் பங்கேற்றனர். இதில் பெதஸ்தா மருத்து வமனை சார்பில் நட த்திய உலக இதய தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக இதய தினத்தையொட்டி மிகவும் கடினமான ஆஞ்சி யோபிளாஸ்ட்டி உடன் ஓ.சி.டி. என்ற புதிய சிகிச்சை ஒரு நோயாளிக்கு செய்யப்பட்டது.
குமாரபாளையத்தில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் முன்பிருந்து அமைப்பின் நிர்வாகி சீனிவாசன் தலைமயில் 17 பேர் சைக்கிளில் சென்றனர்.
காவேரி நகர், பெரந்தார் காடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, தம்மண்ணன் சாலை, நகராட்சி அலுவலக காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது.
ஒவ்வொரு முக்கிய இடங்களில் நின்று, சைக்கிளில் சென்றால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் செயலர் பிரபு, பொருளர் வரதராஜ், செந்தில்குமார், மோகன்ராஜ், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.