என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surandai"

    • முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி உள்ளார் என்று எம்.எல்.ஏ. பேசினார்.
    • மாற்றுத்திறனாளிகள் மீது முதல்-அமைச்சர் தீராத பற்று கொண்டு உள்ளதாகவும் எம்.எல்.ஏ. கூறினார்.

    சுரண்டை:

    சுரண்டை ஆலடிப் பட்டியில் உள்ள நிலா மனவளர்ச்சி குன்றிய இல்லத்திற்கு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பழனி நாடார் எம்.எல்.ஏ. சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி உள்ளார். மாற்றுத்திறனாளிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் சாய்வு தளம் அமைத்துள்ளார்.

    ஊனமுற்றோர் என்ற வார்த்தையை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என அழைத்த பெருமை முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரையே சேரும்.மேலும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி குழந்தைகள் மீது தீராத பற்று கொண்டு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது முதல்-அமைச்சர் தீராத பற்று கொண்டு உள்ளார் என பேசினார்.

    நிகழ்ச்சியில் பிரியா அழகுசுந்தரம், நிர்வாகி பால கணேஷ்,சிறப்பு ஆசிரியர் மதுபாலா,அமுதா, தெய்வேந்திரன்,ராஜ்குமார், செய்தி மாடசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காமராஜர் தற்போது இருந்து இருந்தால் பாராட்டி இருப்பார்.
    • தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்.

    சுரண்டை:

    சுரண்டை நாடார் வாலிபர் சங்க 33-வது ஆண்டு தொடக்க விழா, மருத்துவம் மற்றும் கல்வி சேவைக்காக காமராஜர் அரங்கம் திறப்பு, மாணவர்க ளுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

    தமிழிசை சவுந்தரராஜன்

    சங்க கவுரவ தலைவர், தொழிலதிபர் எஸ்.வி. கணேசன் தலைமை தாங்கி னார். சுரண்டை சிவகுரு நாதபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நாட்டாண்மை தங்கையா நாடார், பொன்ரா மருத் துவமனை டாக்டர் செல்லையா, நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், கவுரவ ஆலோசகர்கள் காமராஜ், சாமுவேல் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் அரிராம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    காமராஜரின் வழித்தோன்றல் என்பதிலேயே எனக்கு மிகப் பெருமை. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய காமராஜர் தற்போது இருந்து இருந்தால் பாராட்டி இருப்பார் என பிரதமர் மோடி காமராஜருக்கு புகழ் சூட்டினார்.

    தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்ற வர்கள். இந்தியாவிற்கே பொருளாதாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள். நீங்கள் அனைவரும் வேலைக்கு செல்பவராக இல்லாமல் வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, சுரண்டை ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் செய்து வைத்திருந்த பனை பொருட்கள் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்து அங்கு வைக்கப்பட்டிருந்த நுங்கு வண்டியை உருட்டி விளையாடினார். அப்பொழுது தனக்கு சிறுவயது ஞாபகம் வந்ததாக தெரிவித்தார்.

    முன்னதாக அவருக்கு சங்ககவுரவ தலைவர், தொழிலதிபர் எஸ்.வி. கணேசன் தலைமையில் சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் முன்பு பள்ளி மாணவ, மாணவி களின் சிலம்பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில், ஆலங்குளத்தில் காமராஜர் சிலை அமைக்க ஏற்பாடு செய்த தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பா.ஜனதா மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், அனு பில்டர்ஸ் வேல்முருகன், தட்சண மாறநாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன், பெரீஸ் பிஸ்கட் கம்பெனி மகேந்திரவேல், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா, தட்சண மாற நாடார் சங்க செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொன்ராஜ், சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன்,

    இந்திய நாடார்கள் பேரமைப்பு லூர்து நாடார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனித்துரை, நகர செயலாளர் ஜெயபாலன், ஸ்டீபன் சத்யராஜ், மாரிச்செல்வி மகேந்திரன், முல்லை கண்ணன், சேர்மச் செல்வம்,கே.டி.பாலன், மற்றும் நகர் மன்ற உறுப்பி னர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடு

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுரவ தலைவரும், தொழிலதிபரு மான எஸ்.வி. கணேசன் தலைமையில் நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளராக ராமர், துணைத் தலைவர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் முருகன், மற்றும் கவுரவ ஆலோசகர்கள், நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள், செயற்குழு உறுப்பி னர்கள், காமராஜர் அரங்க கட்டிட பணிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி மற்றும் ரேசனில் வழங்கப்படும் மண்எண்ணை உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒரு வீட்டில் சுமார் 95 மூட்டைகளில் 4,750 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி மற்றும் ரேசனில் வழங்கப்படும் மண்எண்ணை உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரேசன் அரிசி சிக்கியது

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சிவகுருநாதபுரம் திருமலை ஆண்டவர் கோவில் தெருவில் சோதனை செய்தபோது, ஒரு வீட்டில் சுமார் 95 மூட்டைகளில் 4,750 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் அந்த வீட்டின் மற்றொரு அறையில் 160 கிலோ ரேசன் கோதுமையும், 17 லிட்டர் ரேசன் மண்எண்ணையும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    2 பேர் கைது

    பின்னர் அவற்றை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், சிவகுருநாதபுரத்தை சேர்ந்த பழனிசாமி(வயது 74), தங்கபாண்டி(55) ஆகியோர் என்பதும், அவர்கள் குறைந்த விலையில் வீடுகளில் அரிசிகளை வாங்கி கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மொபட்டுகள் மற்றும் ஒரு மினி லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.

    • சுரண்டை வடக்குத்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து கடந்த சில மாதங்களாக இவருக்கு காலில் புண் ஏற்பட்டுள்ளது.
    • நேற்று அவரது குடும்பத்தினர் அனைவரும் அம்பையில் நடைபெற்ற ஒரு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டனர்.

    நெல்லை:

    சுரண்டை வடக்குத்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து(வயது 70). கடந்த சில மாதங்களாக இவருக்கு காலில் புண் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் அனைவரும் அம்பையில் நடைபெற்ற ஒரு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சொரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்
    • மருத்துவமனையில் உள்ள கழிவுகளை செண்ப கால்வாயில் வீசாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-

    பொதுமக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். ஹோட்டல் மற்றும் மருத்துவமனையில் உள்ள கழிவுகளை செண்ப கால்வாயில் வீசாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். தொடர்ந்து சுரண்டை பகுதியில் ஓட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. பின்னர் அங்கு நகராட்சி சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, வீரவேல் சிவகுருநாதன், சூப்பர்வைசர் நவநீதகிருஷ்ணன், மதியழகன், சிவா, செல்வக்குமார், மாடசாமி, மகேந்திரன், மாரி செல்வம், சாம், சுந்தரவேல், சுகாதார விழிப்புணர்வு பரப்புரையாளர்கள் சங்கீதா,வனிதா,சலோமியா, பூமாரி, சுசீலா, மகாலட்சுமி, சுகாதார மேற்பார்வையாளர்கள், மற்றும் டி.பி.சி. பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து நாடார் உறவின் முறை கமிட்டி பள்ளியில் பாரம்பரிய வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
    • சிலம்பம் போட்டியில் 7 பள்ளிகள் கலந்து கொண்டனர்

    சுரண்டை:

    இந்திய தற்காப்பு கலைகளை வளர்க்கும் பள்ளியின் சார்பாக சாம்பவர்வடகரையில் உள்ள இந்து நாடார் உறவின் முறை கமிட்டி பள்ளியில் பாரம்பரிய வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பம் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் 7 பள்ளிகள் கலந்து கொண்டனர்.இதில் எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து 9 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல் வாய் மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாாிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

    • சுரண்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி தமிழக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு கொடுத்தார்.
    • சுரண்டைக்கு புதிய பஸ் நிலையம், சுரண்டை நகராட்சியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைத்திட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி தமிழக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வியாபார தலம்

    சுரண்டை மிகப்பெரிய வியாபார ஸ்தலமாகும். சுற்றுப்புற விவசாயிகள், விவசாய பொருட்களை கொண்டு வந்து போகும் பகுதியாகும். மேலும் மதுரை, நெல்லை போன்ற பெரிய நகரங்களில் இருக்கிற அளவிற்கு சுரண்டையில் மருத்துவ வசதி மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இதனால் சுரண்டைக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்கனவே பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பஸ் நிலையத்தில் கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்தது.இதைத்தொடர்ந்து கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்ச செலவில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சிரமம்

    பஸ்கள் வந்து நிற்பதற்கு இடமில்லாமல், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    பஸ் நிலையம் அமைந்துள்ள சாலை கடைகள் அதிகமாக உள்ள பகுதி. அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    எனவே இந்தக் காரணங்களை ஆய்வு செய்து சுரண்டைக்கு புதிய பஸ் நிலையம், சுரண்டை நகராட்சியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் காசி தர்மதுரை, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஹசன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, ஓணம்பீடி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதி ஸ்டீபன் சத்யராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், தொழிலதிபர் சண்முகவேல், மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவ அருணன் பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறக்க இருப்பதாகவும்,நேற்று இரவு கடைக்கு மது பாட்டில் வருவதாகவும் தகவல் வந்ததாக கூறி அதிசயபுரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சுரண்டை:

    வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறக்க இருப்பதாகவும்,நேற்று இரவு கடைக்கு மது பாட்டில் வருவதாகவும் தகவல் வந்ததாக கூறி அதிசயபுரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீ.கே.புதூர் போலீசார் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கண்டிப்பாக மதுக்கடை திறக்கப்படாது என போலீசார் அவர்களிடம் உறுதி அளித்தனர்.

    • சுரண்டை நகராட்சி 23-வது வார்டு கீழச்சுரண்டை களம் புறம்போக்கு மேல்புறம் எரிவாயு தகன மேடை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • 11-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி மன்ற தலைவர் வள்ளி முருகன் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் கோரிக்கை மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுரண்டை நகராட்சி 23-வது வார்டு கீழச்சுரண்டை களம் புறம்போக்கு மேல்புறம் எரிவாயு தகன மேடை அமைக்க நகர் மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த இடம் பொது மக்களுக்கு எந்த விதத்திலும் அச்சத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாத இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தங்களிடமிருந்து வரப்பட்ட கடிதம் எரிவாயு தகன மேடை 11-வது வார்டில் அமைக்கும்படி கூறியுள்ளது. அந்த பகுதியில் 100 மீட்டர் தொலைவில் குடியிருப்புகள், சுமார் 2000 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளன. எனவே 11-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சுரண்டை நகராட்சியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 23- வது வார்டு ஆற்றுப்பாலம் தென்புறம் மின்மயான தகனமேடை அமைக்க ஆவண செய்ய வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.


    இந்த நிலையில் சுரண்டை 11-வது வார்டு பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க அடிப்படை பணி தொடங்கப்பட்டதால் பங்களாசுரண்டை பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்

    எம்.எல்.ஏ.விடம் சென்று உடனடியாக பங்களா சுரண்டை பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்படாத இடத்தில் மின் தகன மேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர்.

    அவர்களிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. உங்கள் பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து சுரண்டை நகர மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் அச்சப்படாத வகையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்படும் என கூறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • இயேசு பிறப்பின் காட்சியை குடிலாக அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காித்து வைத்தனா்.
    • மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

    சுரண்டை:

    சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். இயேசு பிறப்பின் காட்சியை குடிலாக அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காித்து வைத்தனா். நிகழ்ச்சியில் மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இயேசு பிறப்பின் செய்தியை மாணவி அழகு காா்த்திகா வழங்கினாா்.

    மாணவன் தனுஷ் வரவேற்புரை வழங்கினாா். தலைமை ஆசிாியா் மாாிக்கனி நன்றி கூறினார். மாணவன் விக்னேஷ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா். ஆசிாியை மொ்லின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாா். ஆசிாியைகள் சகாய நிஷா, தங்கசுபா செல்வரத்தினம், ஆசிாியா் சாம் அலெக்சாண்டா் ஆகியோா் மாணவா்களை ஒருங்கிணைத்தாா்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
    • தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகர தி.மு.க. சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

    மாநில விவசாய அணி அப்துல் காதர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுரண்டை நகராட்சி பகுதியில் 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து மரக்கன்றுகள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    • சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தருவதாக பழனி நாடார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் உறுதி அளித்திருந்தார்.

    இந்த நிலையில் தென்காசி கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் வீ.கே.புதூர் தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல் சுரண்டையில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மண்டல நிலைய வட்டார அலுவலர் முருகன்,வருவாய் அலுவலர் கண்ணன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜ லட்சுமி,நில அளவையர் பஷீர் அகமது, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×