என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayanallur"

    • இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி மசூதைக்கா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு அறிவியல் செய்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர்

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு உதவி பெறும் மசூதைக்கா மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து காண்பித்தனர். இதற்கான இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி அரங்குகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மவுலவி, ஹாபீஸ், ஹஸன் மக்தும் சாஹிபு தலைமை தாங்கினார். நைனா முஹம்மத் பெரிய குத்துபா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் வாஹித் சாஹிப், கடையநல்லூர் நகர மன்ற உறுப்பினர் முகமது அலி, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முகமது அனிபா, முகமது அலி, முகமது புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது உசேன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர பாண்டியன் மற்றும் வனவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தனர்.

    அப்போது மாணவ- மாணவிகளின் பல்வேறு அரிய வகை கண்டுபிடிப்புகளை பார்த்து பாராட்டினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் செய்யது அன்பியா, பீர் முகமது, அமானுல்லா, அப்துல் காதர், காஜா மைதீன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளும் பல்வேறு அறிவியல் செய்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர். அவர்களை இளம் விஞ்ஞானியாக உருவாக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்து அவர்களின் திறமைகளை ஊக்குவிக்க மசூதைக்க மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளதாக பள்ளியின் தாளாளர் ஹசன் மக்தும் தெரிவித்தார்.

    மாணவர்கள் நாங்கள் இளம் விஞ்ஞானிகளாக உருவாகுவோம். எங்களுடைய அறிவுத்திறமையை மேம்படுத்தி, எங்களுடைய சிந்தனையை மேம்படுத்தி, நாங்கள் உறுதியாக இளம் விஞ்ஞானிகளாக வளருவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய பெருமக்கள் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்ற பொழுது ஏவுகணை, ராக்கெட் உட்பட பல்வேறு அறிவியல் சோதனைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சி இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் சிக்கந்தா ரஹ்மான் நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவான தீர்வு காண வேண்டும்
    • மழைக்காலங்களில் மின்விபத்து ஏற்படாத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது

    கடையநல்லூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கடையநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் பிரேமலதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி, பொதுமக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவான தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மழைக்காலங்களில் மின்விபத்து ஏற்படாத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உதவிசெயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார்
    • கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர்

    கடையநல்லூர்:

    தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து தென்காசி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார். மேலும் இம்மாதம் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், தொகுதி மாற்றங்கள் குறித்து சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 768 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 279 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கடைய நல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆகாஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு குறைவாக உள்ளது. அதனை வரும் நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்த பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தாசில்தார் சண்முகம், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெகநாதன், குடும்பப் பொருள் தாசில்தார் சங்கரலிங்கம், மண்டல் துணை வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தேர்தல் பிரிவு மாரியப்பன், கவுன்சிலர்கள் முருகன், முகையதீன் கனி, தி.மு.க. மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மூவன்னா மசூது, உட்பட பலர் பங்கேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகங்களில் பொது மக்களின் மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார். பின்னர் இடைகால், ஆய்க்குடி, சாம்பவர் வடகரை பகுதி களில் அரசு புறம்போக்கு நிலங்களை பொதுமக்கள் ஆக்கிர மிப்பு செய்வதை தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்படுவதை பார்வையிட்டார்.

    • பாசறை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
    • அப்துல்லா எம்.பி., தமிழன் பிரசன்னா ஆகியோர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்தனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் திராவிட இயக்க வரலாறு குறித்து அப்துல்லா எம்.பி., மாநில சுயாட்சி குறித்து மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்ற 540 இளைஞரணி நிர்வாகி களுக்கு பயிற்சியளித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துவேல் நன்றி கூறினார்.

    முன்னதாக கடையநல்லூருக்கு வருகை தந்த அப்துல்லா எம்.பி.க்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ரவிசங்கர், திவான் ஒலி, அழகுசுந்தரம், நகர செயலாளர்கள் அப்பாஸ், வக்கீல் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், வேலாயுதபுரத்தில் ரூ. 9.36 லட்சம் மதிப்பீட்டில் ஊரணி புனரமைப்பு பணிகள், நயினாகரம் ஊராட்சியில் ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிடட்டார்.
    • தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 145 சமத்துவபுரங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், வேலாயுதபுரத்தில் ரூ. 9.36 லட்சம் மதிப்பீட்டில் ஊரணி புனரமைப்பு பணிகள், நயினாகரம் ஊராட்சியில் ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிடட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து துறைகளும்

    தமிழக அமைச்சர்கள், துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்களை ஒருங்கிணைத்து முதல்-அமைச்சர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், சமத்துவபுரங்களில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    மக்கள் நலஅரசு

    மக்கள் நல அரசாக தி.முக. அரசு இருந்து வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 145 சமத்துவபுரங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள சமத்துவபுரங்களும் விரைவில் புனரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எதிர்கட்சி தலைவர்

    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து அரசு குறித்து குற்றச்சாட்டுகளை அளித்துள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அமைச்சராக, முதல்-அமைச்சராக இருந்தவர் போகிற போக்கில் குற்றம் சாட்டுவது சரியல்ல. ஆதாரமின்றி குற்றம் சாட்டக் கூடாது என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    ஆய்வின் போது கலெக்டர் ஆகாஷ், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் , துணைச்சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், பஞ்சாயத்து தலைவர்கள் முத்தையா என்ற முத்து, ஜெயக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் முகைதீன் கனி, முருகன், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் உட்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.




    • கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து தரும்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியோர்கள், இளைஞர்கள் எஸ்.அய்யாத்துரைப் பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.
    • அப்போது ஊத்துமலை இளைய ஜமீன் குமரேச ராஜா, அய்யாத்துரைப் பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, வக்கீல் வைரமுத்து, பேரவை செயற்குழு உறுப்பினர் பூலோக ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளி யம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து தரும்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியோர்கள், இளை ஞர்கள் அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.அய்யாத்துரைப் பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று அருணாசலபுரத்தை சேர்ந்த மூக்கையா, மகேஷ், கணேசன், மாடசாமி, ஆறுமுகசாமி, வேல்முருகன், மகேஷ், சாமி மாரிமுத்து, வேல் ராஜ், முத்துக்குமார், சாமித்துரை, கண்ணன்,அரவிந்த், ஆகியோர்கள் முன்னிலையில் அந்த சமுதாய நாட்டாண்மை மாதவனிடம் கோபுரம் அமைப்பதற்கான நன்கொடையினை எஸ்.அய்யாதுரை பாண்டியன் வழங்கினார். அப்போது ஊத்துமலை இளைய ஜமீன் குமரேச ராஜா, அய்யாத்துரைப் பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, வக்கீல் வைரமுத்து, பேரவை செயற்குழு உறுப்பினர் பூலோக ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார்.
    • கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, சிங்கிலி பட்டி வழியாக மதுரை சென்றார். அப்போது இடைகால் பகுதியில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் செண்டை மேளம், கரகாட்டம் உட்பட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். விழா முடிந்த பின்னர் சாலை மார்க்கமாக இடைகால், கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, சிங்கிலி பட்டி வழியாக மதுரை சென்றார். அப்போது இடைகால் பகுதியில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் செண்டை மேளம், கரகாட்டம் உட்பட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான தொண்டர்கள் சாலை நெடுகிலும் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர். நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ், துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடையநல்லூர் ,அட்டைக்குளம் பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் வேனில் இருந்து இறங்கி குழந்தைகளிடம் என்ன படிக்கிறாய் எங்கு படிக்கிறாய் என கேட்டு தெரிந்து கொண்டார்.

    கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகர செயலாளர் அப்பாஸ் தலைமையில் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் முன்னிலையில் இருபுறமும் தொண்டர்கள், குழந்தைகள் மலர் தூவி வரவேற்றனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன், அக்பர் அலி, வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அப்துல் காதர் முன்னிலையில் செண்டை மேளம், இன்னிசை கச்சேரி, ராஜமேளம் முழங்க இரு புறமும் வாழை மரங்கள் தோரணம் கட்டி கேரள பெண்கள் அணிவகுத்து மலர் தூவி வரவேற்றனர். அதன்பின் அவர் பூரண கும்பம் மரியாதை பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் முகமது அலி, சேகனா, யாத்ரா பழனி, நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் முன்னிலையில் ஏராளமானோர் வரவேற்றனர். 

    • கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரி 12-வது ஆண்டு ஆலிமா நூரிய்யா பட்டமளிப்பு விழா மதினா நகரில் நடந்தது.
    • கல்லூரி நிர்வாகி அப்துல் குத்தூஸ் ஆலிம் வரவேற்றார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரி 12-வது ஆண்டு ஆலிமா நூரிய்யா பட்டமளிப்பு விழா மதினா நகரில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஹிதாயத்துல்லாஹ் ஆலிம் தலைமை தாங்கினார். மதினா நகர் பள்ளிவாசல் தலைவர்அப்துல் மஜீத், செயலாளர் சம்சுதீன், பொருளாளர் நயினா முகம்மது, ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் ஆகியோர் முன்னி லை வகித்தனர். மாணவி ஹனா பாத்திமா கிராஅத் ஓதினார். கல்லூரி நிர்வாகி அப்துல் குத்தூஸ் ஆலிம் வரவேற்றார். பேராசிரியர் செய்யது இப்ராஹிம் ஆலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    வல்லம் என்.எம்.முஹம்மது சுல்தான் ஆலிம், தென்காசி மாவட்ட அரசு காஜி முஹ்யித்தீன் ஹழ்ரத், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் வடகரை ஷாகுல் ஹமீது ஆலிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலப் பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி 10 மாணவிகளுக்கு ஸனது பட்டம் வழங்கி சிறப்புரை யாற்றினார். எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் சமுக சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது, துணை தலைவர் செய்யது இமாம், தொகுதி அமைப்பாளர் ஹைதர் அலி, அப்துல் மஜீத் ஆலிம், சாகுல் ஹமீது, பேராசிரியர் காஜா முஹையதீன் ஆலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் இமாம் அஹமது மீரான் ஆலிம் துஆ ஓதினார். அப்துல் ரசாக் நன்றி கூறினார்.

    • கடையநல்லூர் காவா அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அறக்கட்டளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்சுதீன், என்ஜினியர் ஹூசைன், யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் காவா அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்சுதீன், என்ஜினியர் ஹூசைன், யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளைச் செயலாளர் ஜாபர் சாதிக் வரவேற்று பேசினார்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன், கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனிதா பாலின், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, முன்னாள் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக ஆம்புலன்சை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் முகமது செரீப், நகர செயலாளர் அப்பாஸ், முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, சிராஜ் மில்லத் அறக்கட்டளை கோயா, முன்னாள் நகரச் செயலாளர் முகமது அலி, நகர அவைத் தலைவர் முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் நகராட்சியில் பிரதான கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பணிகளை விரைந்து முடிக்க நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி 25-வது வார்டு பஜார் சாலை, பெரிய தெரு, புது தெரு ,அட்டை குளம் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கழிவு நீர்கள் செல்லும் பிரதான கழிவுநீர் ஓடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை பார்வையிட்டு ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார். அப்போது நகராட்சி பொறியாளர் லதா , ஒப்பந்ததாரர் ஹாஜா மைதீன் நகர்மன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே கழிப்பிடம் கட்டுவதற்கான இடத்தையும் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் பார்வையிட்டார்.

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானம் வாசித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானம் வாசித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்கள் குறித்தும் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகமது அலி, யாசருக்கான், அலி அக்பர், சுந்தர மகாலிங்கம், சுபா ராஜேந்திர பிரசாத் மாரி, முருகன், முகைதீன் கனி, சங்கரநாராயணன், அரபா வஹாப் ஆகியோர் பேசினர்.

    • குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புவழங்கப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
    • பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வழங்கி தொடங்கி வைத்தார்.

    கடையநல்லூர்:

    தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிசி வாங்கும் குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்

    அதன்படி கடையநல்லூர் நகராட்சி அட்டைக் குளம் தெரு பகுதியில் உள்ள உள்ள ரேஷன்கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதுபோன்று கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், அந்தந்த பகுதி வார்டு செயலாளர் மற்றும் நகர் மன்ற வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்.

    ×