search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varushabishekam"

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    நவதிருப்பதி கோவில்களில் 9-வது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருக்ஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். அதனை தொடர்ந்து 8 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.

    பின்னர் காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம் முடிந்து, காலை 10.30மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கருடசேவையில் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    களக்காடு முப்புடாதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.
    களக்காடு:

    களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து கடம்புறப்பாடு நடந்தது.

    யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்களுடன் சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வந்தனர்.
     அதன் பின் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா கோலாகலத்துடன் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து முப்பிடாதி அம்மன், சுடலைமாடன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகங்களும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் இடம்பெற்றது.

    மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இன்று காலை வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், கோமாதா பூஜை நடைபெற்றது.

     அதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வலம் வந்து கோவில் கோபுர கலசத்தின் மீது பூசாரிகள் ராமஜெயம், ஆதிநாராயணன் அகியோர் தலைமையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
     
    அதன்பின் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.  சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் 1மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    ×