என் மலர்
நீங்கள் தேடியது "on"
- ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் அண்ணன், தம்பி மீது 4 பேர் சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக புட்டாநாயக்க தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் ஆனந்த் வழி பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த 4 பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.
இதை அறிந்த ஆனந்தின் சகோதரர்கள் கார்த்திக் மற்றும் முரளி இருவரும் வந்தனர். எதிர் தரப்பை சேர்ந்த 4 வாலிபர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் கார்த்திக் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
- சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
- சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.
இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.