என் மலர்
நீங்கள் தேடியது "Coco Gauff"
- ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனையிடம் கோகோ காப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதினார்.இதில் ஸ்வியாடெக் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் (உக்ரைன்) ஆகியோர் மோதினர். இதில் பெகுலா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மாக்டா லினெட்டுடன் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மோதினார். இதில் கோகோ காப் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 3வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என கோகோ காப் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிண்டா 6-3, 6-4 என அடுத்த இரு செட்களை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
- சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.
விம்பிள்டன் பட்டத்தை 5 முறை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். சோபியா கெனின் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கவூப்பை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து), 4-வது வரிசையில் உள்ள பெகுலா (அமெரிக்கா), கரோலினோ கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த லவுரென்ட் லோகோலியை எதிர்கொண்டார். இதில் கேஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.
- கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
- நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ராக் க்ரீக் பூங்காவின் வில்லியம் எச்.ஜி. பிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மைதானத்தில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடர் ஜூலை 29-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்க இளம் வீராங்கனையான கோகோ காப், கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சக்காரியா உடன் பலப்பரீட்சை நடத்தினார். கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். மரியா சக்காரியா, ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
கோகோ காப் நேற்று நடந்த இறுதி போட்டியில் முதல் இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் கோகோ காப் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன் பின் நடந்த இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கோகோ காப் மற்றும் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
- கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை சீக்மண்ட் கைப்பற்றி கோகோ காப்பிற்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் எழுச்சி பெற்ற காப் கடைசி 2 செட்களையும் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி முடிவில் கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதில் நடந்த மற்றொரு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி ரஷிய வீராங்கனை டாட்டியானா பிரோசோரோவா உடன் பலபரீட்சை நடத்தினார். இதில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
- இந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் வென்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார்.
இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஒரு காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கை இகா ஸ்வியாடெக் டென்மாரிக்கின் கரோலின் வோஸ்னியாக்கி உடன் மோதினார்.
- முதல் செட்டை 6-4 என இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார்.
கலிபோர்னியா:
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கை இகா ஸ்வியாடெக் டென்மாரிக்கின் கரோலின் வோஸ்னியாக்கி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ஸ்வியாடெக் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக கரோலின் வோஸ்னியாக்கி வெளியேறினார். இதன் மூலம் ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் சீனாவின் யுவான் யுஇ உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் யுவான் யுஇ-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான கோகோ காப் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.
இதேபோல செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை ஒரு புள்ளி கூட எடுக்காமல் இழந்த அவர் அடுத்த 2 செட்டுகளை வென்றார். இதன் மூலம் 0-6, 7-5, 7-6 (8) என்ற செட் கணக்கில் ஓல்கா டானிலோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது.
- பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்.
பிரெஞ்சு ஓபன் மற்றும் இதர டென்னிஸ் போட்டி தொடர்கள் நடத்தப்படும் விதம் சரியாக இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை கோகோ கௌஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் போட்டிகள் பொதுவாக நடத்தப்படும் விதம், பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் அட்டவணை என ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளின் திட்டமிடல்களை கோகோ கௌஃப் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக நடைபெற்ற டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது, உடல்நலத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.
"அதிகாலை 3 மணிக்கு போட்டிகளை முடிப்பது, பல சமயங்களில் நீங்கள் போட்டி முடிந்ததாக நினைக்கலாம். ஆனால் அதன் பிறகு, உங்களுக்கென சில கடமைகள் இருக்கும்- அவற்றை செய்து முடிக்க வேண்டும். இந்த பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்."
"இது உடல்நலனுக்கு நல்லது இல்லை என்றே நினைக்கிறேன். போட்டியில் தாமதமாக விளையாட வேண்டும் என்போருக்கு இது சரியாக இருக்காது, ஆனால் இது உங்களது அட்டவணையை அடியோடு மாற்றிவிடும். அதிக நேரம் கால தாமதத்துடன் போட்டியை நான் இதுவரை முடித்ததில்லை என்ற வகையில், நான் அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன்," என்று கோகோ கௌஃப் தெரிவித்தார்.
- ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார்.
- மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.இதன் மூலம் கோகோ காப் 4-6, 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கெட்டா வாண்ட்ரோசோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் - கோகோ காப் மோத உள்ளனர்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், துனீசியாவின் ஒன்ஸ் ஜபேரு டன் மோதினார்.
இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (11-9) என கைப்பற்றினார். அப்போது ஒன்ஸ் ஜபேர் உடல்நலக் குறைவால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிக்கா பெகுலாவை சந்திக்கிறார்.