என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கூட்டி"

    • எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.
    • இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட பேன்சி நம்பர்களை வாங்குவதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர்.

    அதில் சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த எண்ணை ஏலத்தில் விடுகிறார்கள். அது போன்று இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தான் 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஸ்கூட்டிக்கு பேன்சி நம்பர் பெறுவதற்காக ரூ.1 கோடி செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தான் வாங்கிய ஸ்கூட்டிக்காக எச்.பி.-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆன்-லைன் ஏலத்தில் கலந்து கொண்டார். அப்போது எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து அந்த எண்ணுக்கு ஆரம்ப கட்டமாக ரூ.1,000 ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவரும் ஏலத் தொகையை உயர்த்தி கொண்டே சென்ற நிலையில், அதில் ஒருவர் அந்த எண்ணை ரூ.1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பெற்றார்.

    இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணை பெறுவதற்காக ரூ.1.12 கோடி செலவழித்த நபர் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

    களஞ்சேரி அருகே சாலை விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியாார்.
    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இடையிறுப்பு குடியான த்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி ராமு (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசுப்ரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராமு குழந்தைகளுடன் இடையிறுப்பில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று ராமு காலையில் இடையிறுப்பு கிராமத்தில் இருந்து ஸ்கூட்டியில் தஞ்சைக்கு சாலியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். களஞ்சேரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக ராமு ஓட்டிச்சென்ற ஸ்கூட்டி லாரியின் பக்கவாட்டில் சிக்கி நிலை தடுமாறி விழுந்ததில் ராமு லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    அங்குராமுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×