என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2-ம்"

    • வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வழிபாடு
    • ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும், அதைத்தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும், பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    3-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • பெண்கள் கூட்டம் அலைமோதியது
    • குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது.

    இதையடுத்து முதல் கட்டமாக முகாம் நடந்த 400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. சுமார் 3 லட்சம் பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்ட நிலையில் 2 லட்சம் 25 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். முதல் கட்ட முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 384 ரேசன் கடை மூலமாக ஏற்கனவே விநி யோகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (5-ந்தேதி) முதல் விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது.

    மேல்புறம், கிள்ளியூர், திருவட்டார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பபடிவங்கள் பெறப்பட்டு வருகிறது.

    முகாமில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களுடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் மின் கட்டண கார்டு ஆகியவற்றை இணைத்திருந்தனர். ஒரு சில பொதுமக்கள் ஆதார் கார்டை இடைக்கால வங்கி புத்தகத்தை கொண்டு வந்தனர்.

    அப்போது அதிகாரிகள் அதை பரிசோதனை செய்துவிட்டு வங்கி கணக்கில் உடனடியாக ஆதார் கார்டை இணைக்குமாறு கூறினார்கள். ஒரு சில பெண்கள் சில ஆவணங்களை கொண்டு வரவில்லை. அவற்றை எடுத்து வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இரண்டாம் கட்ட முகாமில் விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கு முதல் நாள் என்பதால் இன்று அனைத்து மையங்களிலும் கூட்டம் அலைமோதியது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பெண்கள் விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள்.

    வருகிற 16-ந்தேதி வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்படும். எனவே பொது மக்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட தினத்தில் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

    சேலம் வழியாக செல்லும் 8 ரெயில்களில் கூடுதலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டன.
    சேலம்:

    ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம்
    ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது.

     அந்த வகையில் சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் வழியாக செல்லும் கீழ்கண்ட 8 ரெயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை இணைத்து நிரந்தரமாக  இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி மங்களூர் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22638)  நேற்று முதலும், சென்னை சென்ட்ரல் -மங்களூர் சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22637) நாளை மறுதினம் முதலும், சென்னை சென்ட்ரல்-மங்களூர் சென்ட்ரல் ரெயிலில் (12601) இன்று முதலும், மங்களூர் சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் ரெயிலில் (12602) நாளை முதலும், திருவனந்தபுரம்- ஷாலிமர்  எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22641) இன்று முதலும், ஷாலிமர்- திருவனந்தபுரம்  எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22642) வருகிற 5-ந்  தேதி முதலும், கன்னியாகுமரி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி  கோத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16317) நாளை முதலும், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி  கோத்ரா - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16318) வருகிற 6- ந் தேதி முதல்  கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளன. 

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×