என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy"

    • மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.
    • அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.

    அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள் கூட பார்க்க முடியாமல் நிலை காணப்பட்டது. வாகனங்கள் சாலையில் முகப்ப விளக்கை எரிய விட்டபடியே சென்றன. ராசிபுரம், மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே போல் பனிமூட்டம் இருந்தது. பனி காரணமாக கடும் குளிர் நிலவியது. காலை 8 மணிக்கு மேல் தான் வெயில் வந்தது. குளிரால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. பனி பொழிவு அதிகாமாக இருந்தாலும், இன்று வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

    • நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.
    • காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் மிகுந்து காணப்பட்டது. அருகே இருப்பவர்கள் யார் என தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது.

    காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அன்றாட வேலைக்கு சென்றனர்.

    நகரப் பகுதி கோடை வாசஸ்தலம் போல் காட்சியளித்த நிலையில், கடும் குளிரால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை சாரல் மழையுடன் பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஏற்காட்டில் காபி அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் காபி தோட்டங்களில் காபி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக காபி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பனி மூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    வீரகனூர், கெங்கவல்லியில் கன மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு   மழை பெய்தது.

    கன மழை  
    குறிப்பாக வீரகனூர், கெங்கவல்லி பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் வயல் வெளிகள் மற்றும் தாழ்வான பகுதி–களில் தண்ணீர் தேங்கியது.  கோடை காலத்தில்   பெய்த மழை   விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    சேலம் மாநகரில் நேற்றிரவு 9  மணியளவில்  தொடங்கிய மழை  லேசான தூறலுடன்  நின்று போனது. இதனால் மழை வரும் என்று எ திர்பார்த்த  மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  ஆனாலும் குளிர்ந்த காற்று வீசியது . இதனால் பொது   மக்கள் நிம்மதியாக  தூங்க முடிந்தது.
      
    மாவட்டத்தில்  அதிக பட்சமாக வீரகனூரில் 48 மி.மீ.  மழை பெய்துள்ளது. கெங்கல்லி 15, தம்மம்பட்டி 10, பெத்தநாயக்கன்பாளையம் 5, சங்ககிரி 1.2, ஆத்தூர், சேலத்தில் 1 மி.மீ.  என மாவட்டம் முழுவதும் 81.2 மி.மீ. மழை பெய்தது. இன்று காைல மாவட்டம் முழுவதும் வெயில அடித்த படி இருந்தது.
    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்.
    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதால்  தமிழகத்தின் மேற்கு  தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள பகுதிகளில்   இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் இன்று இடி, மின்னலுடன்     கன மழை பெய்யும் என்றும் அதில் கூறி உள்ளனர்.   இதனால்   இன்று  பிற்பகல் முதல் மழை    பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×